தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தேவை . . .
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
என்னைப்
பொறுத்தவரையில் . . . இன்றைய தமிழ்மொழியானது இன்றைய தமிழ்ச் சமுதாயத்திற்குத்
தேவையான மொழிச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு முழுமையான தகுதிபெற்ற மொழியாகவே
நிலவுகிறது. அதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை!
ஆனால் அதன்
செயல்பாடுகளைக் குறைக்கும்வகையில் ஆங்கில மேலாண்மையும் வடமொழி உட்பட
பிறமொழிகளின் மேலாண்மையும் நீடிக்கின்றன. இது புறச்சூழல் சார்ந்த ஒரு சிக்கலாகும்.
இதன் விளைவாகப் பிறமொழிச்சொற்களின் மேலாண்மை தமிழ்மொழியில் நீடிக்கிறது.
இச்சிக்கலைத் தீர்ப்பதில் தமிழர்களின் தாய்மொழி உணர்வும் தேவை; ஆட்சியாளர்களின் திட்டமிட்ட மொழிமேம்பாட்டுத்
திட்டங்களும் தேவை; மொழிபற்றி
அறிவியல் அடிப்படையான கருத்துக்களும் தேவை.
எந்தவொரு
கருத்தையும் வெளிப்படுத்தத் தேவையான இலக்கண வளமும் சொல்வளமும் தமிழில் நன்றாகவே
இருக்கின்றன. சொற்களஞ்சியம் மேலும் திட்டமிட்டு வளர்க்கப்படவேண்டும்.
தமிழ்மொழிமீது வடமொழித் தாக்கம் எனபது பல நூற்றாண்டு வரலாறு உடையது; அரசியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற காரணிகளால் ஏற்பட்டவை இவை; ஆங்கிலத்தாக்கம், ஏனைய பிறமொழிகளின் தாக்கம் ஆகியவை கடந்த சில
நூற்றாண்டுகளில் அந்நியர் படையெடுப்புக்கள், ஆட்சிகளால் ஏற்பட்டவையேயாகும்.
இவை
எல்லாவற்றையும் அகற்றி, தமிழ்மொழி
தனக்கே உள்ள வளர்ச்சித்தடத்தில் இயங்க . . . முன்னேறிச் செல்ல (1) மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் தாய்மொழி, தன் இனமொழி என்ற உணர்வு தேவை. (2) புறத்திலும் மொழிக்குள்ளும் தமிழ்மீது
நிலவுகிற அரசியல் மேலாண்மை, மொழி மேலாண்மை
இரண்டும் அகற்றப்படவேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக