தமிழ்
இலக்கணவியல் மேம்படுத்தப்படவேண்டும்!
------------------------------------------------------------------------------------------------------------------------
கணினித்துறையில்
பணியாற்றும் நண்பர் சுந்தர் இலட்சுமணன் அவர்கள் தமிழ்ப் புணர்ச்சிபற்றி எழுப்பிய
ஒரு ஐயத்திற்கு விளக்கம் அளிக்க முயன்றேன். ஆனாலும் ஒரு முழுமையான - நிறைவான -
விளக்கத்தை என்னால் அளிக்கமுடியவில்லை!
தமிழ்ப்
பேச்சொலிகளைப்பற்றிய ஆய்வு (Tamil Phonetics) , மெய்ம்மயக்கங்கள் (Phonotactics)
, புணர்ச்சி (Morpho
Phonemics) , சாரியை (Fillers
or empty morphs) ஆகிய நான்கையும் இணைத்து தமிழாய்வு
மேற்கொள்ளப்படும்போதுதான் இன்றைய தமிழ்ச்சொற்களின் அமைப்புக்கு - மொழியசை ( Linguistic Syllables) அமைப்புக்கு - நிறைவான , தேவையான விளக்கங்களை அளிக்கமுடியும்.
ஆனால் ''நமக்கு தற்போது கிடைத்துள்ள இலக்கணங்களே
போதும்; அவற்றை
விளங்கிக் கொள்வதே தமிழ் இலக்கண ஆய்வு '' என்ற ஒரு நிலைபாடு பொதுவாக நம்மிடையே
நிலவுகிறது. இந்நிலை மாறவேண்டும்.
தமிழ்மொழி
ஆய்வு இன்றைய தேவைகளுக்கு - குறிப்பாகக் கணினித்தமிழ் வளர்ச்சிக்கு -
பயன்படவேண்டுமென்றால் ....
(1) தொல்காப்பியம், நன்னூல்போன்ற தமிழ் இலக்கண நூல்கள்
கூறுபவற்றைப்பற்றிய தெளிவு வேண்டும்;
(2) வரலாற்றில்
தமிழ்மொழி எவ்வாறு மாறி வளர்ந்து வந்துள்ளது என்பதுபற்றிய - வரலாற்றுத் தமிழ்
இலக்கணம் பற்றிய - ஆய்வு வளரவேண்டும்; இதற்குத் தமிழ் இலக்கியங்கள் அனைத்தும்
முறையான தரவுமொழியியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்.
(3) இன்றைய
தமிழுக்கான தரவு - தரவுமொழியியல் அடிப்படையில் முறையாக உருவாக்கப்படவேண்டும்;
(4) இன்றைய
மொழியியல் கோட்பாடுகள் (Modern Linguistics) , ஆய்வுமுறைகள் சரியான முறையில் விளங்கிக்கொள்ளப்படவேண்டும். அவற்றின்
அடிப்படைகளும் தமிழாய்வில் கணக்கில் கொள்ளப்படவேண்டும்.
(5) கணினிமொழியியல்
துறையின் (Computational Linguistics) அறிவும் தமிழ்மொழி ஆய்வில் முறையாகப்
பயன்படுத்தப்படவேண்டும்.
மேற்கண்ட
பணிகள் தமிழுக்கு மேற்கொள்ளப்படும்போதுதான் இன்றைய தமிழ்மொழிபற்றிய மொழியாய்வு
தனது அடுத்த உயர்கட்டத்தை எட்டமுடியும்.
''மந்திரத்தில்
மாங்காய் காய்க்காது'' !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக