வடமொழி -
தமிழ்மொழி ஒப்பீடு . . . ஒரு தவறான அணுகுமுறை!
---------------------------------------------------------------------------------------------------------------------
பேராசிரியர்
மதிவாணன் பாலசுந்தரம் அவர்கள் தனது முகநூலில் இட்டுள்ள ஒரு பதிவையொட்டி எனது
கருத்தை இங்கு முன்வைக்கிறேன்! அவருடைய கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு. அத்தோடு
மேலும் சில கருத்துக்களை இங்கு முன்வைக்கிறேன்.
பல்கலைக்கழக
நல்கைக்குழுவின் வடமொழிபற்றிக்
குறித்த கருத்து மொழியியல் அடிப்படையில் மிக மிகத் தவறான கருத்து. மற்ற
மொழிகள்போல் வடமொழி இல்லாததற்குக் காரணம் . . . அது என்றுமே மக்கள் வழங்கும் மொழியாக. . . .
மக்களது அன்றாட வாழ்க்கைக்கான மொழியாக இல்லாமல் . . . வேதங்களுக்கான மொழியாக மட்டுமே
. . . வேதங்களை ஓதுவதற்கான மொழியாக . . . வேத வாய்மொழியாகமட்டுமே நீடித்துள்ளது.
அதையொட்டி உயர்வர்க்கத்திற்கான இலக்கியம், தத்துவம் போன்ற சில துறைகளிலும் பயன்படும்
மொழியாக நீடித்தது!
மேலும்
கூறப்போனால் ஒருவகையான செயற்கைமொழி. மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைக்காக நீடித்த
மொழி இல்லை!
ஆனால் இவ்வாறு
நான் கூறுவதால், அது தாழ்ந்த
மொழி என்று கொள்ளக்கூடாது. அது எதற்காக நீடித்ததோ, அதற்கு உண்மையில் நன்கு பயன்பட்டுள்ளது.
இன்று நீடிக்கிற செயற்கைமொழியான எஸ்பெரண்டோ . . . அது எதற்காக உருவாக்கப்பட்டதோ
அதற்கு நன்கு பயன்படுகிறது. அதுபோல்தான் வடமொழி!
தமிழ்மொழியின்
நீடிப்புக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படை, அது மக்கள் மொழியாக . . . பொருளாதார, வணிகம் போன்ற அடிப்படைச் சமுதாயத் தளங்களில்
பயன்படும் மொழியாக . . . அன்றாட வழக்கிற்கான மொழியாக நீடித்துவருகிறது;
மேலும்
அத்தோடு அது இலக்கியம், தத்துவம்
போன்ற பிற படைப்புத்திறம், அறிவுத்திறம்
ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கான செயல்பாடுகளையும் அது மேற்கொண்டது.
எனவே
தேவையில்லாமல், வடமொழியையும்
தமிழ்போன்ற மக்கள் மொழிகளையும் ஒப்பிட்டு, அதன் அடிப்படையில் கருத்துக்களைப்
பல்கலைக்கழக நல்கைக்குழு போன்ற நிறுவனங்கள் முன்வைப்பது சரியில்லை என்பது எனது
கருத்து.
எனவே வடமொழியே
உலகில் நிலவும் பிற அனைத்துமொழிகளின் தாய் என்று என்று கூறுவது எந்தவகையிலும்
சரியில்லை! இந்தத் ''தாய்க்கும்'' பிற மக்கள் மொழிகளுக்கும் எந்தவிதத் ''தொப்புள்கொடி உறவும்'' கிடையாது!
என்னுடைய கருத்து.
. . வடமொழியையும் தமிழ்மொழியையும் ஒப்பிட்டு பார்க்கவேண்டாம். அதற்குத்
தேவையில்லை! வடமொழியின் தளம் வேறு! தமிழ்மொழியின் தளம் வேறு!
மேற்கூறியது
எனது கருதுகோளே!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக