"மூலமொழி'' ''மூல இனம்'' கோட்பாடுகள்பற்றி எனது கருத்துக்கள். . .
---------------------------------------------------------------------------------------------------------------------------
''மூலமொழி (Proto-language)
'' என்ற கோட்பாடு
, மொழிகளில் நிலவும் ஒற்றுமைக்கூறுகளை -
குறிப்பாக, ஒலியியல் (phonetic)
, ஒலியனியல் (Phonemic)
கூறுகளை -
ஒன்று திரட்டி, அவற்றிலிருந்து
''மூலச் சொற்களை (Proto-forms)
'' அமைத்துக்காட்டும்
ஒரு ஆய்வுமுறை. இதன் முடிவுகள் கருதுகோள்களாகத்தான் (Hypothesis)
இருக்கமுடியும்.
தொல்வரலாறு (Archeology, Ancient History) , மானிடவியல் (Anthropology) போன்ற பிற துறை கண்டுபிடிப்புக்களும்
நமக்குத் தேவை.
இல்லையென்றால், ''மூல மொழிகள்'' ஆய்வை . . . ''மூல இனங்கள் ("Primitive
Races") '' என்ற நிலைக்கு
எடுத்துச்சென்று , சமுதாயப்
போராட்டங்களில் சரியான ஒரு நிலைபாடு எடுப்பதில் குழப்பத்தைத்தான் உருவாக்கும்.
உண்மையான தேசிய இனங்கள் (Nationalities) இன அடிப்படையில் தங்களை ஒன்றுபடுத்திக்கொள்வதில் பின்னடைவுகளை ஏற்படுத்தும்.
இதைத்தான் நான் கூற வருகிறேன்.
''தமிழ்த் தேசிய
இனத்தின் போராட்டத்தின்'' இன்றைய
பின்னடைவுக்கு இதுவும் ஒரு காரணம்!
''மூலமொழி '' என்ற ஒப்பீட்டுமொழியியலே (Comparative
Linguistics) வேண்டாம்
என்று நான் கூறவரவில்லை! ஒப்பீட்டுமொழியியல், வரலாற்றுமொழியியல் (Historical
Linguistics) , மானிடவியல்மொழியியல்
( Anthropological
Linguistics) போன்ற பல துறை
அறிவுகளும் இணைந்துசெயல்படவேண்டும்.
''மூலமொழி'' கோட்பாடும் ''மூல இனம்'' கோட்பாடும் ஆய்வுக்கு உரியவை என்பதே எனது
கருத்து.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக