''தொடர்பு மொழிகள்'' - நம்மை எதிர்த்து நாமே போராடவேண்டியுள்ளது!
----------------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் நீடிக்கிற
இரண்டு முதன்மையான ''மூடநம்பிக்கைகள்'' !
''அறிவுக்கு'' ஆங்கிலம்! ஆங்கிலப்
பயிற்றுமொழி!
''கடவுளுக்கு'' வடமொழி! வடமொழி வழிபாட்டுமொழி!
மேற்கூறிய இரண்டின் ''தகுதிகளும்'' சட்டங்களால் கொடுக்கப்படவில்லை! திணிக்கப்படவில்லை!
பிறப்பு, இறப்பு, திருமணம், பெண்குழந்தைகளின் பருவ முதிர்ச்சி, புதுமனைபுகுவிழா, 60 அகவை நிறைவுவிழா , குடமுழுக்குவிழா . . . இவ்வாறு எந்தவொரு ''விழாவாகவும்'' இருந்தாலும் , "கடவுள்களோடு'' தொடர்பு ஏற்படுத்த . . . வடமொழி (வேதங்கள்) தேவை! மேலும் அவற்றை ஓதுவதற்கு ஒரு குறிப்பிட்ட சாதியினரைத்தவிர , வேறு எவருக்கும் ''உரிமை'' கிடையாது!
அதுபோன்று, பள்ளிகளில், கல்லூரிகளில், உயர் ஆய்வில் . . . ''அறிவைப்'' பெறுவதற்கு ஆங்கிலமே தேவை
என்ற ஒரு நிலை!
மேற்கூறிய ''தகுதிகளை'' வடமொழிக்கும்
ஆங்கிலத்திற்கும் அளிப்பதில் மக்களுக்கே பங்கு மிகுதி!
இந்திமொழி ''ஆட்சிமொழியாக'' திணிக்கப்படுவதை எதிர்த்து, அதைத் திணிக்கிற ''ஆட்சியாளர்களை'' எதிர்த்துப்போராடவேண்டியுள்ளது!
ஆனால் மேற்கூறப்பட்ட வடமொழி, ஆங்கிலமொழி இரண்டையும் நம்மீது நாமேதான் திணித்துக்
கொள்கிறோம்!
மொழிபற்றிய மிகப்பெரிய
மூடநம்பிக்கையே இதற்கு அடிப்படை! சமுதாய அமைப்பும் சூழலும் இதற்கு அடிப்படை
என்பதையும் நான் மறுக்கவில்லை!
ஆனால் இதற்கான போராட்டம் . .
.
யாருக்கு எதிரான, யாருடைய போராட்டம்? நமக்கு எதிராக நாமே போராடவேண்டிய போராட்டம்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக