வியாழன், 13 செப்டம்பர், 2012

மென்தமிழ் - ஒரு அறிமுகம்

மென்தமிழ் - தமிழ்ச்சொல்லாளர்

உலகத்தரம் வாய்ந்த கணினித்தொழில்நுட்பத்தில் , பன்முகப் பயன்பாட்டுநோக்கில் தமிழுக்கு உருவாக்கப்பட்டுள்ள ஒரு தமிழ்ச்சொல்லாளர் மென்தமிழ் - பதிப்பு 3.

மென்தமிழ் மென்பொருளானது கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பம், தமிழ் இலக்கணம் ஆகிய துறைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கணினியில் தமிழில் ஆவணங்களைத் தட்டச்சு செய்யப் பலவகையான (11)  விசைப்பலகைகள் - இருபதற்கும் மேற்பட்ட ஒருங்குறியிலான தமிழ் எழுத்துருக்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ் ஆவணத்தில் சொற்பிழைகள், சந்திப்பிழைகள் காணப்பட்டால் அவற்றை இனங்கண்டு திருத்த உதவும் பிழைநீக்குக் கருவிகள் புதுமையான முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆங்கில ஆவணத்தைத் திருத்த உதவும் மொழிக்கருவியும் இணைக்கப்பட்டுள்ளது. 

பிறமொழிச்சொற்கள் ஆவணத்தில் இடம்பெற்றிருந்தால், அவற்றையும் இனங்கண்டு, அவற்றிற்கு இணையான நல்ல தமிழ்ச்சொற்களை வழங்கும் வசதியும் உண்டு.

ஒருங்குறி அல்லாத பிற குறியீட்டுமுறையில் அமைந்த தமிழ் ஆவணங்களை ஒருங்குறி ஆவணமாக விரைவாக மாற்றித்தரும் கருவி இணைந்துள்ளது.

தமிழ் ஆவணத்தில் உள்ள சொற்களை அகரவரிசைப்படுத்தவும் சொல்லடைவு உருவாக்கவும் வசதிகள் உண்டு. ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் துணைநூற்பட்டியல் தயாரிக்கும் கருவியும் இடம்பெற்றுள்ளது.   

தமிழ் - ஆங்கிலம் , ஆங்கிலம் - தமிழ் , பிறமொழிச்சொல் அகராதி , மயங்கொலிச்சொல் அகராதி, தமிழ்நாடு அரசு ஆட்சிச்சொல் அகராதி எனப் பலவகையான அகராதிகளும் இடம்பெற்றுள்ளன. 

மைக்ரோசாஃப்ட் வோர்ட் 2000 போன்ற சொல்லாளர் மென்பொருட்களில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பதிப்பு வசதிகளும் இதில் உண்டு. 


2 கருத்துகள்:

தமிழ்கார்இசை சொன்னது…

நன்று

தமிழ் காமராசன் சொன்னது…

இந்த மென்பொருள் எங்கே கிடைக்கும் ? எவ்வளவு விலை?

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India