கருத்தாடலில்
(Communication
- Discourse) மனிதமூளையின்
இரண்டு புலங்கள் . . .
---------------------------------------------------------------------------------------------------------------------------
''நான் சொல்வது
உங்களுக்குப் புரிகிறதா?''
''நான் என்ன
சொல்லவருகிறேன் என்பது தெரியுதா?'"
''காதில்
ஏறுகிறதா''
''இந்தக் காதில்
வாங்கி, அந்தக் காதிலே
விட்டுவிடாதே''
''நான்
சொல்வதைப்பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்''
''நான்
சொல்வதைக் கொஞ்சம் அசைபோட்டுப் பாருங்கள்''
''நான்
சொல்லவந்தது வேறு; நீங்கள் அதைப்
புரிந்துகொண்டது வேறு''
மேற்கண்டவைபோன்ற
தொடர்களை நாம் அடிக்கடிப் பயன்படுத்துகிறோம்!
மொழி என்பது
கருத்தாடல்களின் ஒரு முக்கியப் பகுதி! இதில் மொழிப்புலன் (Language
Domain) முக்கியத்துவம்
பெறுகிறது. ஆனால் மொழியுடன் நாம் பயன்படுத்துகிற மொழி சாராக்கூறுகளான ( non-verbal
means) படம் , அட்டவணை,...
திங்கள், 26 டிசம்பர், 2022
தமிழ் ஆய்வாளர்களின் கவனத்திற்கு ! தமிழ் இலக்கணத்தின் வியக்கத்தக்க கணிதப் பண்பு
தமிழ்
ஆய்வாளர்களின் கவனத்திற்கு ! தமிழ் இலக்கணத்தின் வியக்கத்தக்க கணிதப் பண்பு
--------------------------------------------------------------------------------------------------------------------------
கணினியியல்
அறிஞர் நண்பர் திரு. சுந்தர் இலட்சுமணன் அவர்கள் 'மரம் = பட்டை' என்பது ஏன் 'மரப்பட்டை' என்று அமைகிறது? இதற்கு விதிகள் உண்டா? என்ற ஒரு மிகச் சரியான ஐயத்தை
முன்வைத்துள்ளார். ஆனால் இதற்கான எனது பதில் கருத்து நீண்டுவிட்டதால், தனியாகவே இதைப் பதிவிடுகிறேன். நண்பர்களின்
பொறுமையை வேண்டுகிறேன்! நேரம் கிடைக்கும்போது படித்துத் தங்கள் கருத்துக்களைக் கூறினால் நல்லது.
திரு. சுந்தர்
இலட்சுமணன்
------------------------------------------------------------------------
ஐயா, மரம் பட்டை - இங்கே மகரம் நீங்கியபின் பகர
ஒற்று இரட்டிப்பதற்கான ஒலிப்புத்தேவை எதுவும் உள்ளதா? அதாவது அசையின் தொடக்கத்தில்...