புதன், 27 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை..(11)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (11)------------------------------------------------------------------------------ முந்தைய உரையில் எழுத்துக் கருத்தாடல்பற்றிச் சில கருத்துகளை முன்வைத்திருந்தேன். எழுத்துக்கருத்தாடலுக்கும் சொற்பொழிவுக் கருத்தாடலுக்கும் இடையில் ஒரு ஒற்றுமை உண்டு. சொற்பொழிவுக் கருத்தாடலில் பேசுபவர்முன் கேட்பவர்கள் இருந்தாலும்... பொதுவாக அங்கே வினா- விடைக்கு இடம் இருக்காது. எனவே சொற்பொழிவாளர் ... தனக்குமுன் இருக்கிற கேட்பவர்களுடன் உரையாடுவதுபோன்று... கற்பனைசெய்துகொண்டு... அவர்களுக்கு என்ன என்ன ஐயங்கள் ஏற்படலாம் என்று நினைக்கிறாரோ... அவற்றிற்கெல்லாம் விடைதரும் வகையில் அவர் சொற்பொழிவு அமையவேண்டும். அப்போதுதான் கேட்பவர்கள் ஆர்வத்துடன்... அமைதியாகச் சொற்பொழிவாளர் முன்வைக்கும் கருத்துகளைப் புரிந்துகொள்வதில்...

செவ்வாய், 26 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை (10)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (10)----------------------------------------------------------------------------- முந்தைய உரையில் ... பேச்சுக் கருத்தடால்பற்றிப் பார்த்தோம். எழுத்துக் கருத்தாடல்பற்றிய சில கருத்துகளை இங்கு முன்வைக்கிறேன். பேச்சுக் கருத்தாடலைவிட ... எழுத்துக் கருத்தாடலில் ஒருவர் வெற்றிபெறுவது உண்மையில் மிகக் கடினமான ஒரு செயல்! அதற்கு ஒரு மிக முக்கியமான காரணம்... பேச்சுக் கருத்தாடலில் பேசுபவர்முன்.... கண்முன்... கேட்பவர் நிற்கிறார்! அதனால் பேசுபவர் முன்வைக்கிற கருத்துகளில் கேட்பவருக்கு ஐயங்கள் இருந்தால்... பேசுபவரிடம் உடனடியாகக் கேட்டுவிடலாம்! பேசுபவரும் அந்த ஐயங்களை அந்த இடத்திலேயே ... அப்போதே... தீர்க்க முயலலாம்! ஆனால் ... எழுத்துக்கருத்தாடலில் அதை முன்வைத்தவர் முன்னால் ... அதாவது நூலாசிரியரின்...

ஞாயிறு, 24 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை.(9)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (9)-------------------------------------------------------------------------------- சென்ற உரையில் .... ஒரு முழுமையான ... கருத்திணைவு உள்ள ஒரு கருத்தாடலை ( Coherant Discourse) எவ்வாறு அமைத்து.... நாம் விரும்புகிற கருத்துப்புலப்படுத்தச் செயலை ( Communication) எவ்வாறு மேற்கொள்வது என்பதுபற்றிப் பார்த்தோம். கருத்தாடல் என்பது பேச்சுக்கருத்தாடலாகவும் ( Spoken Discourse) அமையலாம்... எழுத்துக் கருத்தடலாகவும் ( Written Discourse) அமையலாம். பேச்சுக் கருத்தாடலில் குறைந்தது இரண்டு நபர்கள் பங்கேற்கின்றனர். கருத்தாடலில் பங்கேற்கும் அனைவரும் உணர்வோடு .... கருத்துப்புலப்படுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என்ற உணர்வோடு - கலந்துகொள்கிறார்கள். ஒருவர் பேசும்போது... அவர் முன்வைக்கும் தொடர்களை ... பேசுபவரின்...

வெள்ளி, 22 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை..(8)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (8)------------------------------------------------------------------------------- நேற்றைய எனது உரையில்.... ஒரு பத்தியில் அமைகிற பல்வேறு உரைக்கூற்றுகள் தாங்கள் பயின்றுவருகிற வரிசையில் கருத்திணைவு கொண்டதாக இருக்கவேண்டும் என்று கூறினேன். அப்போதுதான் அந்தப் பத்தியானது கருத்துப்புலப்படுத்தத்திற்கு உதவும்! வாக்கியத்தின் உள்ளே அமைகிற சொற்கள் (Words and Phrases) எவ்வாறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமையவேண்டும் ( தொடரியல் - Syntax) என்று மொழிகளில் கட்டுப்பாடுகள் இருக்கின்றனவோ.... அதுபோல ஒரு பத்திக்குள் அமைகிற உரைக்கூற்றுகள் எவ்வாறு கருத்திணைவை அடிப்படையாகக்கொண்டு , குறிப்பிட்ட வரிசையில் அமையவேண்டும் என்பதற்கும் விதிகள் உண்டு! ஆனால் பொதுவாக, வகுப்பறைகளில் வாக்கிய அமைப்பிற்கான தொடரியல் விதிகளைக்...

வியாழன், 21 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை.(7)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (7)-------------------------------------------------------------------------- முந்தைய உரையில் நாம் பார்த்தமாதிரி... வெறும் பொருண்மை முக்கியத்துவம் உடைய வாக்கியங்கள் ( Sentences) வேறு... நடைமுறையில் கருத்துப்புலப்படுத்த மதிப்பு உடைய உரைக்கூற்று (Utterances) வேறு! இவ்வாறு கூறும்போது, வாக்கிய இலக்கண அறிவு ( knowledge of Grammar)தேவையில்லையா என்ற ஐயம் ஏற்படலாம். நிச்சயமாக தேவை! அரிசி இல்லாமல் சோறா? அதற்காக அரிசியை அப்படியே சாப்பிடமுடியுமா? சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் அரிசியை நாம் சாப்பிடுவதற்கு.... வயிற்றுக்கு ஏற்றவகையில் பக்குவப்படுத்தி.... சமைத்துத்தானே .... சாப்பிடுகிறோம். அம்மாவுக்குத் தெரியும் அந்த ரகசியம்! அதுபோல... மொழிபயிற்றல் ஆசிரியருக்குத் தெரிந்திருக்கவேண்டும் எவ்வாறு பொருண்மை...

புதன், 20 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை (6)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (6)---------------------------------------------------------------------------- நாம் பிறரிடம் பேச்சுவழியாகவோ அல்லது எழுத்துரை வழியாகவோ .... ஒரு கருத்துப்புலப்படுத்தச் செயலில் Act of communication) ஈடுபடுகிறோம். இது உணர்வுபூர்வமான ஒரு செயல் அல்லது நிகழ்ச்சி ( active process) ஆகும். இந்த உணர்வுபூர்வமான செயலையே இங்குக் கருத்தாடல் (Discourse) என்று அழைக்கிறோம். கருத்தாடலின் நோக்கம்.... நமக்குத் தெரிந்த சொற்களையோ அல்லது தொடர்களையோ அல்லது அவற்றிற்கான இலக்கணத்தையோ மற்றவருக்கு வெளிப்படுத்துவது இல்லை..... மாறாக, நாம் விரும்புகிற கருத்துகள் அல்லது நோக்கங்களை மற்றவருக்கு வெளிப்படுத்துவதும் .... அதற்குத் தேவையான மொழிவழிச் செயல்களை ( Speech Acts.. விளக்குதல், விவரித்தல், வினவுதல், விடையளித்தல்,...

மருத்துவ மொழியியல் ( Clinical Linguistics)

மருத்துவ மொழியியல் ( Clinical Linguistics) --------------------------------------------------------------------- மருத்துவமொழியியல் என்பதை ஆங்கிலத்தில் Clinical Linguistics என்று அழைக்கிறார்கள்!. நமது மொழிக்கும் ( Language), பேச்சுக்கும் (Speech) மிக அடிப்படையானவை மூளையும், வாய், தொண்டை, மூச்சுக்குழாய், நுரையீரல், உதரவிதானம் போன்ற உடலுறுப்புகளும் ஆகும். மூளையில் சில பகுதிகள் பாதிக்கப்பட்டால்..... நமது மொழியும் பாதிக்கப்படும். பொதுவாக இடதுபுறம் உள்ள பெருமூளை பாதிக்கப்பட்டால், மொழியும் பேச்சும் தடைபடும். பேசுவதற்கும், கேட்டுணர்வதற்கும், எழுதுவதற்கும், வாசிப்பதற்கும் மூளையில் சில தனிப்பகுதிகள் அடிப்படையானவை. அவை பாதிக்கப்பட்டால், மொழி இழப்பு ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Aphasia ( Disphasia) என்று அழைப்பார்கள். இதில் பலவகைகள் உண்டு. அப்போது, மொழியின் எந்தப் பகுதி .... தொடரா, சொல்லா. பேச்சொலியா,...

தடய அறிவியல் மொழியியல் ( Forensic Linguistics) :

தடய அறிவியல் மொழியியல் ( Forensic Linguistics) : ------------------------------------------------------------------------- செயற்படுத்தமொழியியலின் இன்னொரு பிரிவு.... 1950 வாக்கில் தொடங்கி ... 1960 வாக்கில் பிரபலமடைந்த ஒரு துறை... ஒருவரின் மொழிநடையிலிருந்து அவர் உண்மையைக் கூறுகிறாரா , இல்லையா .... ஒருவரது ஒப்புதல் வாக்குமூலம் உண்மையில் அவருடையதுதானா இல்லையா ....வழக்குகளில் சாட்சிகள் அளிக்கிற வாக்குமூலங்கள் உண்மையா, இல்லையா... ஒருவர் பெயரில் வெளிவந்த ஒரு கட்டுரை அல்லது நூல் உண்மையில் அவர் எழுதியதுதானா இல்லையா... ஆசிரியர் பெயர் தெரியாத ஒரு நூலின் ஆசிரியர் இவரா அவரா ....ஒரு பேச்சுரையைக்கொண்டு அதைப் பேசியவர் யார் ?... அவசர உதவி நிலையங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பில் உண்மை இருக்கிறதா இல்லையா... ஆளைக் கடத்திவைத்துக்கொண்டு, பெரிய தொகையைக் கேட்கும் நபரின் மிரட்டல் எந்த அளவு உண்மையானது ? .... கடத்தப்பட்டதாகச்...

செவ்வாய், 19 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை (5)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (5)---------------------------------------------------------------------------- Discourse என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையாகக் '' கருத்தாடல் '' என்ற சொல்லை நானும் பேரா. பொற்கோ அவர்களும் இணைந்து உருவாக்கினோம். ''சொல்லாடல்'' '' உரையாடல்'' போன்ற சில தொடர்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால் '' கருத்தாடல் '' என்ற சொல்லே இன்று நிலைத்துவிட்டது. கருத்தாடல் என்ற சொல்லானது மொழித்தொடர்களைமட்டும் குறிப்பது கிடையாது. நாம் மொழித்தொடர்களை வெளிப்படுத்தும்போது, அவற்றோடு இணைக்கிற உடல் மொழிகள் ( Body language) , படங்கள், அட்டவணைகள் போன்ற மொழிசாராக் கூறுகளையும் பயன்படுத்துகிறோம். எனவே மொழிசார் கூறுகளையும் (Verbal means) மொழிசாராக் கூறுகளையும் ( non-verbal means) இணைத்து , நமது கருத்துப்புலப்படுத்தத்தில் பயன்படுத்துகிறோம்....

திங்கள், 18 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை (4)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (4) ---------------------------------------------------------------------------- இங்கிலாந்து மொழியியல் அறிஞர்களும் ஐரோப்பிய கவுன்சிலைச் சேர்ந்த மொழியியல் அறிஞர்களும் 1970-க்குப்பின்னர் ... இலக்கணத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட பாடத்திட்டம் , மொழிபயிற்றலுக்கு ... குறிப்பாக ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக அல்லது அந்நியமொழியாகக் கற்றுக்கொடுப்பதற்கு ... போதாது ... சரிவராது என்று முடிவுக்கு வந்தனர். டி ஏ வில்கின்ஸ் ( DA Wilkins) இதுபற்றித் தெளிவான கருத்துகளைத் தனது " Notional Syllabus " என்ற நூலில் முன்வைத்தார். ஏறத்தாழ அதேநேரத்தில் Dell Hymes என்ற சமூகமொழியியல் அறிஞர் , கருத்துப்புலப்படுத்தத் திறன் (Communicative Competence ) என்ற ஒரு புதுமையான கருத்தை முன்வைத்தார். அதுவரை நோம் சாம்ஸ்கி...

ஞாயிறு, 17 ஜூலை, 2016

இளம் மாணவர்களை வாழவிடுங்கள்!

இளம் மாணவர்களை வாழவிடுங்கள்! ------------------------------------------------------- 50 ஆண்டுகளுக்கு முன்னர் எல்கேஜி, யுகேஜி கிடையாது! ஒன்றாம் வகுப்புதான் உண்டு! விரல்விட்டு எண்ணக்கூடிய நகரங்களில்தான் ஆங்கிலவழிப் பள்ளிகள் ( ''கான்வெண்ட்') உண்டு! தனியார் பள்ளிகள் மிகக் குறைவு! அரசாங்கப் பள்ளிகள்தான்! 5 ஆம்வகுப்புவரை உள்ள பள்ளிகள்! 8 ஆம் வகுப்புவரை உள்ள பள்ளிகள்! 11 ஆம் வகுப்புவரை உள்ள பள்ளிகள்! கையில் சிலேட்டு! குச்சி! ஒரு சில புத்தகங்கள், நோட்டுகள்! 5 ஆம் வகுப்பில்தான் A, B, C, D.... ! இன்றோ.... எல்கேஜி, யுகேஜி மட்டுமல்ல! பிரி-எல்கேஜி கூட இருக்கிறது! ஆங்கில வழிப் பள்ளிகள் இல்லாத ஊர்களே இல்லை! பெயர்கள்கூட ... ஆக்ஸ்போர்டு ஸ்கூல், கேம்பிரிட்ஜ் ஸ்கூல், அமெரிக்கன் ஸ்கூல் ! குழந்தை பிறக்கும்போதே ஆங்கிலத்தோடு பிறக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு! தமிழ் ... தெரியாது என்று குழந்தை சொன்னால்தான்...

வெள்ளி, 15 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை (3)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (3)--------------------------------------------------------------------- மொழியியலில் 50-களில் ( சாம்ஸ்கிக்கு முன்னர்) குறிப்பாக இரண்டு மாறுபட்ட கோட்பாடுகள் - ஆய்வுமுறைகள் - நிலவின. (1) மொழி ஆய்வில் கள ஆய்வில் கிடைக்கிற மொழித்தரவுகளிலிருந்து தொடர்களையும் சொற்களையும் அவற்றின் பயன்படுத்தத்திலிருந்து (Use) பிரித்து, அவற்றின் அமைப்பைமட்டுமே ஆய்வு செய்யவேண்டும் என்ற அமைப்புமொழியியல் கோட்பாடு ( Structural Linguistics) . அமெரிக்காவில் புளூம்ஃபீல்டு, பிரான்சில் சசூர் போன்றவர்கள் இக்கோட்பாட்டில் உறுதியாக இருந்தனர் (2) தொடர்களையும் சொற்களையும் அவற்றின் பயன்படுத்தத்தின் மத்தியில் வைத்துத்தான் செய்யவேண்டும். அப்போதுதான் மொழியின் இயல்பை முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியும் என்ற கோட்பாடு. இங்கிலாந்தைச்...

வியாழன், 14 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... (2)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (2) ---------------------------------------------------------------- நேற்று நான் கூறிய மொழிபயிற்றல் வழிமுறைகளில் '' நேரடி முறை'' Direct Method என்பதையும் இணைத்துக்கொள்ளவும். இந்த வழிமுறையில் மாணவர்களின் சூழலை முழுமையாகப் பயிலுகிற குறிப்பிட்டமொழிச் சூழலாகவே மாற்றி அமைப்பது ஆகும். அதாவது மாணவர்கள் தங்கள் நடைமுறைச் சூழலில் அந்த மொழியை மட்டுமே பயன்படுத்தவேண்டும். அவ்வாறு பயன்படுத்துவதால், அவர்களுக்கு அந்த மொழியின் இலக்கணமும் சொற்களும் பற்றிய அறிவு வந்துவிடும் கூறப்படுகிறது.  மொழி பயிற்றல் கோட்பாடுகளைப்பற்றி உரையாடுவதற்குமுன்னர் சிலவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும். மொழி பயிற்றல்பற்றிய கலந்துரையாடலில் ஒரு சிலவற்றைத் தெளிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டும். முதல்மொழி, இரண்டாம்மொழி,...

புதன், 13 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை.. (1)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (1) '' அவருக்குப் பேசத் தெரியவில்லை! யாரிடம் பேசுகிறோம், எதைப் பற்றிப் பேசுகிறோம், எப்படி பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார். படித்து என்ன பயன்? '' என்று சிலரைப்பற்றி நாம் கூறியிருப்போம் அல்லது நினைத்திருப்போம்! அதுபோன்று '' என்ன எழுதியிருக்கிறார்? எதை எப்படிச் சொல்லவேண்டுமென்று தெரியவில்லை. எம் ஏ படித்திருக்கிறாராம்! என்ன பிரயோசனம்? '' என்று சிலருடைய எழுத்துகளைப்பற்றி (தமிழ் அல்லது ஆங்கிலம்) நினைத்திருப்போம்! இங்கு நாம் பார்க்கவேண்டியது ..... பேசியவருக்கு அல்லது எழுதியவருக்குத் தமிழோ அல்லது ஆங்கிலமோ எழுத, வாசிக்க, பேச, கேட்டுணரத் திறமை இல்லை என்று நாம் நினைக்கவில்லை. இலக்கணமெல்லாம் தெரிந்திருக்கலாம். இலக்கணத்தில் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்கலாம்! ஆனால் ... கருத்துப்புலப்படுத்தத்...

வெள்ளி, 8 ஜூலை, 2016

ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவியலா?

ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவியலா?  ------------------------------------------------------------------------ இன்று ( ஜூலை 7, 2016) தமிழ் 'தி இந்துவில்' ஒரு செய்தி! தமிழ்வழி பொறியியல் படிப்பில் 1257 இடங்கள் காலி! 121 பேர்மட்டுமே இதுவரை சேர்ந்துள்ளனர். அதற்குக் கூறப்பட்டுள்ள காரணம் ..... '' தனியார் துறையில் வேலைவாய்ப்பு குறைவாக இருப்பதால், தமிழ்வழிப்பிரிவில் சேர மாணவர் தயக்கம் காட்டுகின்றனர்.. தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு கேம்பஸ் இன்டர்வியூ வேலைவாய்ப்புகள் குறைவு. வேலைக்குத் தேர்வுசெய்யப்பட்டாலும் குறைந்த சம்பளமே கிடைக்கிறது. படித்து முடிக்கும் அனைவர்க்கும் எப்படி அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும்? அரசு வேலைவாய்ப்பை மட்டுமே நம்பி, தமிழ்வழி பொறியியல் படிப்பில் சேரமுடியுமா என்று மாணவர்கள் கேட்கின்றனர்'' எனக்குள்ள ஐயங்கள்..... 1) தமிழில் படித்தாலும், ஆங்கிலத்திலும் படித்தாலும், பொறியியல்...

வியாழன், 7 ஜூலை, 2016

மொழியியல் தமிழ்மொழிக்கு எதிரானதா?

வினா : மொழியியல் தமிழ்மொழிக்கு எதிரானது, அது உண்மையான தமிழ்மொழி ஆய்வுக்கு எதிரானது என்று கூறப்படும் கருத்து சரியா? விடை: இல்லை. பிற அறிவியல்கள்போன்று சமூக வளர்ச்சியில் தேவையையொட்டித் தோன்றி வளர்ந்துள்ள ஒரு அறிவியல்தான் மொழியியல். குறிப்பிட்ட மொழிபற்றிய ஆய்வாக இல்லாமல், பொதுவாக ‘மனித மொழி’ என்பதை ஆய்வு செய்வதற்கான வழிமுறைகளை முன்வைக்கின்ற ஒரு அறிவியலே இது. ஆய்வுகளுக்குக் கருதுகோள்களை முன்வைப்பது, அவற்றின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்வது, அந்த ஆய்வுகளின் அடிப்படையில் மொழிபற்றிய கோட்பாடுகளையும் கொள்கைகளையும் முன்வைப்பது போன்றவற்றை உள்ளடக்கியதுதான் மொழியியல். மொழியின் அமைப்பைப்பற்றி மட்டுமல்லாமல், மொழிக்கும் மனித மூளைக்கும் உள்ள தொடர்பு, மொழிக்கும் சமூகத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு, மொழிக்கும் மனித மனத்திற்கும் உள்ள தொடர்பு என்று பல முனைகளில் வளர்ந்துள்ளது மொழியியல். இந்தியாவில் 20 ஆம்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India