அறிவியலும் தொழில்நுட்பமும்
------------------------------------------------------------------------
தோழர் திருமுருகன் அவர்கள்
------------------------------------------------------------------------
தோழர், அந்த இறுதி வரிகள் மட்டும் புரியவில்லை. சிலவேளைகளில் அறிவியலுக்கு முன் தொழில்நுட்பம் வளர்ந்துவிடலாம், அதன்பின் அறிவியல் வளரலாம் என்பதற்கு எதாவது உதாரணம் கூறி விளக்க முடியுமா?
ந. தெய்வ சுந்தரம்
-------------------------------------------------------------------------
நன்றி நண்பர் திருமுருகன் அவர்களே. முந்தைய - பழஞ் சமுதாயங்களில் நீடித்த பல்வேறு தொழில் நுட்பங்களுக்கு அடிப்படையான அறிவியல் விதிகள் பின்னர்தானே தோன்றின.
இதுபற்றி அறிவியல் அறிஞர் (மார்க்சிய அறிஞரும்கூட) தனது ''Science in History" -இல் பின்வருமாறு கூறுகிறார்: "Right up to late Greek times, when most of the techniques on which our lives are based had already been evolved, it does not seem that science, except in such by-products as monumental architecture, and perhaps in water-works, entered technology at all ... Certainly nearly all the set of inventions, mostly Chinese, that were to change medieval into modern economy - the horse-collar, stern-post rudder, trip-hammer, and mechanically driven bellows - owe nothing to science. Even spectacles, gun powder, and printing are largely practical achievements, though the inspiration must have come from the learned. Only in the compass and the clock, essential for navigation, does the scientist seem to have made a larger contribution.( Science in History - J.D. Bernal , Vol 4 , 1228-29)
வில் - அம்பு கண்டுபிடிக்கப்பட்டு, பல நூற்றாண்டுகள் கடந்தபின்னர்தானே இயற்பியலில் திசைவேகம்(Velocity), முடுக்கம்(Acceleration), நியூட்டனின் விதிகள் வில் - அம்பின் இயக்கத்தின் பின்புலத்தை விளக்கின.
இன்றைய கப்பல் தொழில்நுட்பம் பெருமளவில் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்திருந்தாலும், முற்காலத்தில் நிலவிய படகு, சிறு கப்பல் தொழில்நுட்பம்தானே இன்றும் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு ஏராளமான தொழில்நுட்பங்களைக் கூறலாம். சமுதாயத் தேவைகள் பல தொழில்நுட்பங்களை வளர்த்தெடுக்கும். அவற்றிற்கான அறிவியல் அடிப்படைகள் பிற்காலத்தில் விளக்கப்படும். இதுதானே வரலாறு!
அவ்வாறே இந்த 'செயற்கை அறிவுத்திறன்' கொண்டு கணினிவழி மொழிச்செயல்பாடுகளை - பேச்சுத் தொழில்நுட்பம்முதல் மொழிபெயர்ப்பு வரை - இன்று மேற்கொள்கிறோம். (இது இயற்கைமொழி ஆய்வு இல்லை ! not Natural Language Processing - NLP)
மொழிபற்றிய மொழியியல் ஆய்வுகளின் அடிப்படைகள் இல்லாமலேயே இன்று மொழிபெயர்ப்புவரை நம்மால் செய்யமுடிகிறது. ஆனால் இந்த வளர்ச்சியானது மொழியியல் முன்வைத்து ஆய்வுசெய்கிற வினாக்களுக்கு விடைகள் அளிக்கவில்லையே!
இந்த மென்பொருள்கள் எல்லாம் தங்களுக்கு முன்னால் வைக்கப்படுகிற மொழித்தொடர்களின் பொருண்மையைப் புரிந்து ( நாம் பொருண்மையைப் புரிந்து செயல்படுவதுபோல) இந்த மொழிச் செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லையே!
Pattern matching, prediction of a word by its previous word போன்ற அனுமானப் புள்ளியியல் ((Probabilistic Statistics) கொண்டுதானே மொழிச் செயல்பாடுகளை மேற்கொள்கின்றன. இந்தக் கருத்தைத்தான் எனது பதிவில் வலியுறுத்தியுள்ளேன்.
கணினி துணைகொண்டு, மனித இயற்கை மொழிகளைப்பற்றிய கோட்பாடுகளை நிறுவுவதும் (Computational Linguistics) அதனடிப்படையில் மொழித்தொடர்களின் பொருண்மையைக் கணினி புரிந்துகொண்டு, நமக்குத் தேவைப்படுகிற கணினிவழி மொழிச்செயல்பாடுகளை மேற்கொள்வதுமே கணினிவழி மொழித்தொழில்நுட்பம் (Computer Assisted Language Technology ) என்று நான் கருதுகிறேன்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக