பெரும்பான்மை வீடுகளில் சமசுகிருதத்தில் ''மந்திரங்கள்'' ஒலிக்கப்படுவதற்குக் காரணம்?
-------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் பெரும்பான்மை இந்துக் குடும்பங்களில் பிறப்பு, பருவமடைதல், திருமணம், இறப்பு, கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டல், புதுமனை புகுதல் போன்ற அனைத்துவிதமான குடும்ப விழாக்களிலும் கோயில் வழிபாடுகளிலும் புரோகிதர்களும், அவர்களுடைய சமசுகிருத மந்திரங்களும் (நமக்குப் புரியாத மந்திரங்கள்!) இல்லாமல் நடைபெறுகிற விழா ஏதும் இருக்கிறதா?
சமசுகிருதம் இன்னும் பெரும்பான்மையான வீடுகளில் ஒலிக்கப்பட்டுவருகின்றதே! இந்தப் புரோகிதத் திணிப்புக்கும் சமசுகிருத திணிப்புக்கும் எந்தவொரு அரசியல் சட்டமும் காரணம் இல்லையே (இந்திக்கு அரசியல் சட்டத்தில் இருக்கிற உரிமைமாதிரி!) !
மூலைமுடுக்கெல்லாம் ''தமிழ் வாழ்க'' என்ற முழக்கம் ஒலிக்கிறது! மகிழ்ச்சியாக இருக்கிறது . ஆனால் வீட்டுக்குள் 'சமசுகிருதம்'' ஒலிக்கிறதே?
இந்த இரண்டும் இல்லையென்றால், ''இறைவனின் ஆசி'' கிடைக்காது என்ற நம்பிக்கை மிக ஆழமாக ஊடுருவி இருக்கிறதே! ஆங்காங்கே புரோகிதர்கள் இல்லாமல் தமிழில் ஓதலும் நடைபெறுகிறது ! அவ்வளவுதான்! அப்படியென்றால் தமிழ்நாட்டில் புரோகித எதிர்ப்பு, சமசுகிருத எதிர்ப்பு எதிர்பார்த்த ''வெற்றி'' பெறவில்லையா?
---------------------------------------------------------------------------------------------------------------
மேலும் ஒரு ஐயம். “இறைவனோடு” தொடர்புகொள்வதற்குச் சமசுகிருதம்தான் தேவையா? தமிழை இறைவன் புரிந்துகொள்ளமுடியாதா?
-------------------------------------------------------------------------------------------------------------------
உண்மையில் இன்று நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் குழந்தைகளுக்கு சமசுகிருதப் பெயர் வைப்பதும் , பள்ளிகளில் குழந்தைகளை ஆங்கிலப் பயிற்றுமொழியில் சேர்ப்பதும் பெரும்பான்மையாக இருக்கின்றன. உண்மையில் இந்த இரண்டுமே எந்தவித அடிப்படையும் இல்லாத மூட நம்பிக்கைகளே.
--------------------------------------------------------------------------------------------------------------------
//எந்த வித அடிப்படையும் இல்லாதது எனச் சொல்வதற்கில்லை. தமிழ்ப்பெயர்கள் பழமையானதாகத் தோன்றுவதும் சமஸ்கிருதப் பெயர்கள் புதுமை போலத் தோன்றுவதும் காரணமாக இருக்கலாம். .// அப்படியென்றால் ஒரு மூடநம்பிக்கைதானே இது? பழமை, புதுமை என்பதற்கான அடிப்படை என்ன? என்ற வினா இங்கு எழுகிறது! எந்த மொழிப் பெயரையும் வைத்துக்கொள்ளட்டும். அது அவரவர் உரிமை. ஆனால் அதற்கு ஒரு அடிப்படை இருக்கிறது என்பதில்தான் கருத்து வேறுபடுகிறேன். என்னைப் பொறுத்தவரையில் மொழிகளில் உயர்ந்தது, தாழ்ந்தது என்பது கிடையாது! அதுபோல, சொற்களிலும் இந்த மொழியின் சொல் உயர்ந்தது , அந்த மொழியின் சொல் தாழ்ந்தது என்று கூறுவதற்கு எவ்வித மொழியியல் அடிப்படையும் கிடையாது. சமுதாயக் ''கூறுகளே'' தேவையற்ற சாயங்களை மொழிகளின்மீது பூசுகின்றன!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக