திங்கள், 28 ஆகஸ்ட், 2023

அறிவியலாளர்கள் அனைவரும் பகுத்தறிவாதிகளா?

அறிவியலாளர்கள் அனைவரும் பகுத்தறிவாதிகளா?-----------------------------------------------------------------------------------------------------------------------அறிவியலாளர்கள் அனைவரும் பகுத்தறிவாதிகள் இல்லை. அவர்களது குறிப்பிட்ட முறைசார் துறையில் அவர்கள் வல்லுநர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களது ஒட்டுமொத்த உலகப் பார்வை அல்லது தத்துவக்கோட்பாடு அறிவியல் சாராத, நம்பிக்கை சார்ந்த ஒன்றாக இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்டவர்கள் ஒன்றில் தெளிவாக இருப்பார்கள். தங்களுடைய துறையின் ஆராய்ச்சியில் . . . அறிவியல் கண்டுபிடிப்புக்களில் அறிவியல் முறைகளைப் பின்பற்றுவதில் தெளிவாக இருப்பார்கள். ஆய்வுக்கூடத்திற்குள் நுழைவதற்குப்பின்னும் அதை விட்டு வெளிவந்தபின்னரும் தங்களது உலகப் பார்வைபடி செயல்படுவார்கள். அவர்களது சமுதாயப்பார்வையும்கூட அவர்களது வர்க்கம்சார்ந்த ஒன்றாகவே இருக்கும்.அவர்கள் அவர்களுடைய குறிப்பிட்ட துறைகளில்...

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

தமிழ் இலக்கணவியல், மொழியியல் துறைகளின் முக்கியத்துவம்

 தமிழ் இலக்கணவியல், மொழியியல் துறைகளின் முக்கியத்துவம் . . . -------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தமிழ் இலக்கணவியல் என்பது பழந்தமிழ் இலக்கணங்களைமட்டும் - குறிப்பாக, தொல்காப்பியம், நன்னூல் இலக்கணங்களைமட்டும் - உள்ளடக்கியது இல்லை. அவை தோன்றிய காலத்தில் நிலவிய தமிழ்மொழி தமிழ்ச்சமூகத்தின் தேவையையும் வளர்ச்சியையும் ஒட்டி, இன்று மாறியும் வளர்ந்தும் உள்ளது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை! குறிப்பாக, செய்யுள் வடிவங்களில்மட்டும் நீடித்துவந்த எழுத்துத்தமிழ், கடந்த சில நூற்றாண்டுகளில் தோன்றி நீடிக்கிற உரைநடைத் தமிழில்தான் இன்று பெரும்பான்மை நீடித்துவருகிறது. செய்யுள்களும் கூட இன்று உரைநடைக்கு நெருங்கிய கவிதை வடிவங்களை எடுத்துள்ளன. புதுக்கவிதைகள் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.   எனவே , இன்றைய உரைநடைத்தமிழில்...

தமிழில் இலக்கணச் சொற்கள் தனித்து வரலாமா? கூடாது!

தமிழில் இலக்கணச் சொற்கள் தனித்து வரலாமா? கூடாது!---------------------------------------------------------------------------------------------------------------------- தமிழில் (1) விகுதிகள் (suffixes) , (2) பின்னொட்டுக்கள் (post-positions) , (3) வினையொட்டுக்கள் (Verbal Particles) , (4) மிதவை ஒட்டுக்கள் (Clitics) , (5) சாரியை போன்ற நிரப்பிகள் ( Fillers) என்று ஐந்துவகையான இலக்கணச் சொற்கள் இருப்பது தங்களுக்கத் தெரிந்ததே. இவற்றில் பின்னொட்டுக்களும் வினையொட்டுக்களும் வரலாற்றில் தனித்து இயங்கிய அகராதிச் சொற்களே (Free morphemes) . பின்னர் அவை அகராதிப்பொருள்காட்டும் சொற்களாக மட்டுமல்லாமல். இலக்கணக்கூறுகளை வெளிப்படுத்தும் இலக்கணச் சொற்களாகவும் பயன்படத்தொடங்கின. ஆனால் அவ்வாறு புதிய பயன்பாட்டை அவை பெறும்போது,( தமிழில் இலக்கணச் சொற்கள் தனித்து நிற்காமல், தாங்கள் தங்களது இலக்கணப் பொருண்மையை ஏற்றுகிற...

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

பிறமொழி எழுத்துக்களுக்குத் தமிழில் இடம் தரவேண்டுமா?

 பிறமொழி எழுத்துக்களுக்குத் தமிழில் இடம் தரவேண்டுமா?----------------------------------------------------------------------------------------------------மனிதனின் பேச்சுறுப்புக்களைக்கொண்டு ( தொண்டை, வாயறை, நாக்கு, அண்ணம், பல், உதடு, மூக்கு உட்பட) நூற்றுக்கணக்கான பேச்சொலிகளை ( Phones) உருவாக்கமுடியும். ஆனால் எந்த ஒரு குறிப்பிட்ட மொழியும் அந்த அத்தனைப் பேச்சொலிகளையும் உருவாக்கிப் பயன்படுத்துவது கிடையாது. எனவே ஒவ்வொரு குறிப்பிட்ட மொழியும் பொதுவாகக் கிட்டத்தட்ட 50 பேச்சொலிகளைப் பயன்படுத்தலாம்.அடுத்து, அந்தப் பேச்சொலிகளையும் அந்தக் குறிப்பிட்ட மொழி பொருள் வேறுபாட்டுக்காகப் பயன்படுத்துவது கிடையாது. எடுத்துக்காட்டாக, ஒலிப்புள்ள (Voiced phones) 'க்' 'ட்' இரண்டும் இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் பொருள் வேறுபாட்டுக்கு அடிப்படையாக அமைகிறது. எனவே, அவை அந்த மொழிகளில் ஒலியன்களாக ( Phonemes) அமைகின்றன....

சனி, 19 ஆகஸ்ட், 2023

தமிழ் எழுத்துக்களோடு கிரந்த எழுத்துக்களையும் இணைத்துக்கொள்ளலாமா ?

 தமிழ் எழுத்துக்களோடு கிரந்த எழுத்துக்களையும் இணைத்துக்கொள்ளலாமா என்பது பற்றிய ஒரு கருத்தாடலில் நண்பர் திரு. செல்லப்பா அவர்களின் கருத்தும் அதையொட்டி எனது கருத்துக்களும் !-------------------------------------------------------------------------------------------------------------ந. தெய்வ சுந்தரம்-------------------------------------தமிழ் எழுத்துக்களின் அடிப்படைபற்றி முகநூலில் நான் பலதடவை எழுதியுள்ளேன். தெளிவான அறிவியல் அடிப்படை தமிழ் எழுத்துக்களுக்கு இருக்கிறது. பேச்சொலி, மாற்றொலி, ஒலியன், எழுத்து போன்ற மொழியியல் அடிப்படையிலான கருத்துக்களின் அடிப்படையில் தமிழ் எழுத்து அமைப்பை ஆராய்ந்தால் இது தெளிவாகும்.https://nadeivasundaram.blogspot.com/.../blog-post_8612.htmlநண்பர் திரு. செல்லப்பா யக்ஞசுவாமி-----------------------------------------ஐயா, தங்கள் வலைப்பதிவில் படித்தேன். சிறப்பாக உள்ளது....

சனி, 12 ஆகஸ்ட், 2023

தமிழ்நாட்டில் சாதியம் ஏன், எவ்வாறு தக்க வைக்கப்படுகிறது?

 தமிழ்நாட்டில் சாதியம் ஏன், எவ்வாறு தக்க வைக்கப்படுகிறது?-------------------------------------------------------------------------தமிழ்நாட்டில் ''வாக்குவங்கி அரசியலில் '' பங்கேற்கும் அனைத்துக் கட்சிகளும் (விதிவிலக்கே கிடையாது) தேர்தலில் - பஞ்சாயத்துத் தேர்தல் முதல் பாராளுமன்றத் தொகுதி தேர்தல்வரை - குறிப்பிட்ட இடத்தில் எந்த சாதியினர் பெரும்பான்மை என்பதைப் பார்த்துத்தானே வேட்பாளர்களை நிறுத்துகின்றனர். வெற்றிபெற்ற கட்சிகள் அமைச்சரவை அமைக்கும்போதும் . . . ''சாதிய ஜனநாயகத்தைப் '' பின்பற்றுகிறோம் என்று கூறி, சாதிய அடிப்படையில்தானே அமைச்சர்களை அமர்த்துகிறார்கள்! ''அனைத்து சாதிகளுக்கும் உரிமை தருகிறோம், இடம் தருகிறோம்'' என்று கூறுவதே ''சாதிய அடிப்படையிலான பிரிவினை உணர்வைத் '' தக்கவைப்பதாகத்தானே அமையும்! ''இட ஒதுக்கீடு'' பிரச்சனைகளுக்குச் சாதிகளைக் கூறித்தானே ஆகவேண்டும் என்ற வினா இங்கு எழும்!சாதிய...

சாதிய ஒடுக்குமுறையின் பின்னணி . . .

 சாதிய ஒடுக்குமுறையின் பின்னணி . . . ------------------------------------------------------------------------சாதிய ஒடுக்குமுறையில் வர்க்கங்கள் ஒளிந்து கொண்டிருப்பது நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாது! ஆனால் அதுதான் உண்மை!மேல்தட்டு, இடைத்தட்டு , அடித்தட்டுச் சாதிகளைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் - அடித்தட்டு வர்க்கங்கள் - தங்களது வர்க்க நிலை அடிப்படையில் ஒன்றிணைந்துவிடக்கூடாது என்பதில் மேல்தட்டு வர்க்கங்கள் தெளிவாக இருக்கின்றன! எனவே சாதிப் பிரிவினையைத் தூக்கிப் பிடித்து . . . இந்த மேல்தட்டு வர்க்கங்கள் தங்கள் சாதிகளைச் சேர்ந்த இடைத்தட்டு, அடித்தட்டு வர்க்கங்களைச் ''சாதி'' அடிப்படையில் தங்களுடன் இணைத்துக்கொண்டு . . . அடித்தட்டு வர்க்கங்களை அடக்கி ஆளுகின்றன. ''வாக்குவங்கி'' ''வாக்குறுதி'' அரசியலுக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு!மேல்தட்டு, இடைத்தட்டு, அடித்தட்டு வர்க்கங்கள் என்பது வேறு!மேல்தட்டு,...

திராவிடம்பற்றி ஆய்வு செய்யக்கூடாதா? மார்க்சிய அரவணைப்பில் இருக்கிறவர்களுக்கு, தமிழ்மொழிமீது வெறுப்பா?

 திராவிடம்பற்றி ஆய்வு செய்யக்கூடாதா?மார்க்சிய அரவணைப்பில் இருக்கிறவர்களுக்கு, தமிழ்மொழிமீது வெறுப்பா? --------------------------------------------------------------------திராவிடம் என்பது ஒரு மொழிக் குடும்பத்தின் பெயர் / ஒரு இனம் / ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி அல்லது நாடு / ஒரு விழுமியம் - ஆரியத்திற்கு எதிரான ஒரு விழுமியம் . . . . என்று பல விளக்கங்கள் தரப்படுகின்றன. உறுதியாக இதுபற்றி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டியது மிகத் தேவையான ஒன்று. ஆர்வம் உள்ளவர்கள் . . . இதில் ஈடுபடலாம். ஈடுபடவேண்டும். என்னுடைய பதிவுகளில் திராவிடம் என்பது ஒரு இனம் இல்லை; மாறாக, ஒரு மொழிக்குடும்பத்திற்கு இடப்பட்ட ஒரு பெயர் என்றுமட்டுமே குறிப்பிட்டுள்ளேன். இதையும் தொடர்ந்த ஆய்வில்தான் முடிவு செய்யமுடியும். ஆனால் தமிழ்த் தேசிய இனம் என்பது உண்மையான ஒரு வரலாற்று விளைபொருள். ஏனையவைபற்றியும் முடிவுக்கு வரவேண்டும் ஆய்வுலகில்!தமிழ்மொழி...

புதன், 9 ஆகஸ்ட், 2023

''மூல மொழியும் மூல இனமும்'' - ஒரு விளக்கம்!

 ''மூல மொழியும் மூல இனமும்'' - ஒரு விளக்கம்!----------------------------------------------------------------------தோழர் செழியன்--------------------------------------------------------------------------மொழிக்குடும்பம் என்ற கோட்பாடு - மூல மொழிக்கொள்கையை வலியுறுத்துகிறது.அத்தகைய மூலமொழிக் கொள்கையை மார்க்சியம் மறுக்கிறதே தோழர்!ந. தெய்வ சுந்தரம்--------------------------------------------------------------------------மொழிக் குடும்ப ஆய்வில் ( Language Family Research - Comparative Linguistics) நாம் எடுத்துக்கொள்ளவேண்டியது . . . மொழிகளுக்கு இடையேயுள்ள ஒற்றுமைப் பண்புகளைப்பற்றியது (similarities) மட்டுமேயாகும். அந்த ஆய்வில் குறிப்பிட்ட மொழிகளுக்கு இடையுள்ள நிலவும் வேறுபாடுகள் (differences) ஒரு குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் அமைகின்றன என்பதை விளக்கவே 'மூலச் சொல் மீட்டுருவாக்கம் (Proto-form...

தமிழ்த் தேசிய இனம் . . .

 தமிழ்த் தேசிய இனம் . . . --------------------------------------------------------------------முகநூலில் மற்றொரு கருத்தாடல் இழையில் நான் முன்வைத்த கருத்துக்களை இங்கு இணைக்கிறேன்.1) தமிழர் என்பது ஒரு இனம் … தேசிய இனம். ஆனால் திராவிடம் என்பது ஒரு மொழிக்குடும்பத்தின் பெயர். இரண்டையும் ஒன்றாக வைத்துக் குழப்பிக் கொள்ளக்கூடாது.2) தேசிய இனம் …. Nationality ; ஒரு தேசிய இனத்தின் நாடு அல்லது தேசம் . . . Nation . பல தேசிய இனங்களின் நாடுகள் ஒன்றிணைக்கப்பட்டது ஒன்றியம் . . . Union of Nations 3) மொழிக்குடும்பம் என்பது மொழியியல் சார்ந்த ஒரு கோட்பாடு. உறுதியாகத் திராவிட மொழிக் குடும்ப மொழிகளுக்கு இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு.4) தமிழ்த் தேசிய இனத்தின் மொழி தமிழ்5) தேசிய இனங்கள் இங்குத் தேசிய தன்னுரிமைப் போராட்டங்களைத் தொடங்கக் கூடாது என்பதற்காக ஆங்கிலேய ஏகாதிபத்தியம் திட்டமிட்டுத் தமிழ்த் தேசிய...

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

சாதி பற்றிய எனது கருத்துக்கள் சில

சாதி பற்றிய எனது கருத்துக்கள் சில ------------------------------------------------------------  நண்பர் மணி மணிவண்ணன்: ---------------------------------------------------------------- //பெரியார் மண்ணில் கூடச் சாதிவெறி தலைவிரித்தாடுகிறதல்லவா?// ந. தெய்வ சுந்தரம் ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்குமுன்பு நடைபெற்றதாகக் கூறப்படும் ''பகுத்தறிவுப் புரட்சி'' என்பது பிராமண சாதிக்கு எதிரான பிற மேல்தட்டுச் சாதிகள், இடைத்தட்டுச் சாதிகளில் உள்ள மேல்வர்க்கத்தினரின் ''பண்பாட்டு உரிமைகளுக்கான'' போராட்டங்களே ஆகும். இந்தப் பிராமணர் அல்லாத மேல்தட்டுச் சாதியினரும் இடைத்தட்டுச் சாதியினரும் தங்கள் ''சாதியத்தை'' விட்டுக்கொடுக்கவில்லை அல்லது கைவிட்டு விடவில்லை. பிராமண மேல்தட்டினருக்கு...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India