சனி, 24 ஆகஸ்ட், 2024

பேச்சாங்கிலம் கற்றுக்கொடுப்பதில் உள்ள சிக்கல்கள்

பேச்சாங்கிலம் கற்றுக்கொடுப்பதில் உள்ள சிக்கல்கள்----------------------------------------------------------------------------------------------ஒலிப்பில் மேற்கூற்று ஒலியன்கள் (suprasegmental phonemes) ஆங்கிலத்தில் எவ்வாறு அமைகின்றன என்பது ஒரு சிக்கல்.(1) தமிழைப்பொறுத்தவரை, ஒரு சொல்லுக்குள் அசையழுத்தம் (Syllabic stress) பொருள் வேறுபாட்டுக்கு அடிப்படையாக அமையாது. ஆனால் ஆங்கிலத்தில் அது மிக மிக முக்கியம். ஒரே எழுத்துக்களைக்கொண்ட சொல்லில் உள்ள அசைகளில் குறிப்பிட்ட அசைக்கு அழுத்தம் கொடுப்பதைப்பொறுத்து, அச்சொல் பெயரா வினையா என்று முடிவுக்கு வரவேண்டும். per-mit என்பதில் உள்ள இரண்டு அசைகளில் முதல் அசைக்கு அழுத்தம் கொடுத்தால் (primary stress) பெயர்ச்சொல், இரண்டாவது அசைக்கு அழுத்தம்கொடுத்தால் வினைச்சொல் . ஆங்கில அகராதிகளில் சொற்களைக் கொடுக்கும்போது, இந்த அசையழுத்தத்தைக் குறியிட்டுக் காண்பிக்கிறார்கள்....

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

எது இரட்டைவழக்குமொழி?

 எழுத்துமொழியானது எந்தவொரு குறிப்பிட்ட பகுதிக்கோ, வட்டாரத்திற்கோ அல்லது குழுவுக்கோ உரிய ஒரு வழக்காக இருக்காது. பொது வழக்காகத்தான் இருக்கும். ஆனால் பேச்சுமொழி, வட்டாரம், சமூகப்பிரிவு போன்றவற்றைப் பொறுத்துப் பல வழக்குகளாக நீடிக்கும்.இயற்கை மொழிகளில் எழுத்துமொழியானது பேச்சுமொழியோடு வேறுபட்டுத்தான் பொதுவாக இருக்கும். ஆனால் இந்த வேறுபாடு குறிப்பிட்ட எல்லைக்கு அல்லது அளவுக்குமேலே சென்றால்தான் அந்த மொழி இரட்டைவழக்குமொழி என்று அழைக்கப்படுகிறது. இந்த அளவுகோல்மட்டுமே ஒரு மொழியை இரட்டைவழக்குமொழி என்று கூறுவதற்குப் போதாது. மொழிச்செயல்பாடுகளில் இந்த இந்தச் செயல்பாடுகளுக்கு எழுத்துத்தமிழ், இந்த இந்தச் சொயல்பாடுகளுக்குப் பேச்சுமொழி என்று அந்தக் குறிப்பிட்ட மொழிச்சமுதாயம் வரையறுத்து இருக்கவேண்டும். அடுத்து, மக்களின் நோக்கும் இந்த வழக்குகளைப் பொறுத்து மாறும். எழுத்துவழக்கை உயர் வழக்காகவும் பேச்சுவழக்கைத்...

வியாழன், 22 ஆகஸ்ட், 2024

ஆங்கிலம் இரட்டைவழக்குமொழியா?

 எழுத்துமொழி உள்ள மொழிகளில் உறுதியாக பேச்சுமொழியும் இருக்கும். அதில் ஐயம் இல்லை. ஆங்கிலத்திலும் பேச்சுமொழி உண்டு. எழுத்துமொழி உண்டு. ஆனால் இரட்டை வழக்குமொழி என்று ஒரு மொழியைச் சொல்லவேண்டுமென்றால் ( to categorize) இவை இரண்டுக்கும் இடையில் உள்ள அமைப்பு வேறுபாடு (Structural difference) அதிகமாக இருக்கவேண்டும். அதை எவ்வாறு கண்டறிவது? எவ்வளவு வேறுபாடுகள் இருந்தால் (Quantification of differences) ஒரு மொழியை இரட்டைவழக்குமொழி என்று கூறலாம்? இதற்கு எழுத்துமொழி, பேச்சுமொழி இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளியை அளக்கவேண்டும். எவ்வாறு அளப்பது? எழுத்துமொழிச் சொற்களைப் பேச்சுமொழிச் சொற்களாக மாற்றுவதற்கு எத்தனை மாற்று விதிகள் (Conversion rules) தேவைப்படுகின்றன என்பதை வைத்து அளக்கலாம்.1) தலை - தலெ (இடைவெளி ஒரு விதி).2) இலை - எலெ (இடைவெளி இரண்டு விதிகள்)3) தேய்த்துக்கொள் - தேச்சுக்கோ (இடைவெளி மூன்று...

தமிழில் இரட்டைவழக்குச் சூழல் மாற்றப்படவேண்டுமா?

திரு. இராமசாமி செல்வராஜ்----------------------------------------------------இரட்டை வழக்கு மாற்றப்படவேண்டிய ஒன்று என்று இங்கே நீங்கள் கூறுவது சிறுவியப்பை அளிக்கிறது ஐயா. இதற்கு முன்னர் எழுத்துவழக்கில் தான் எழுதவேண்டும், பேச்சுவழக்கில் பேசவேண்டும் என்று நீங்கள் கூறியதாக நினைவு. இது மாற்றமா? இருவழக்கையும் நெருங்கக்கொண்டுவரவேண்டும் என்பதற்கான தேவை என்ன என்பதும் எனக்குத் தெரியவில்லை.ந. தெய்வ சுந்தரம்---------------------------------நண்பரே. நான் என் நிலையை மாற்றவில்லை. இன்றைய இரட்டைவழக்குச் சூழலில் எழுத்தில் எழுத்துத்தமிழ், பேச்சில் பேச்சுத்தமிழ்தான் இருக்கவேண்டும். ஆனால் ஒரு நீண்ட கால வரலாற்றில் எவ்வாறு இரட்டை வழக்குச் சூழல் தோன்றியதோ அது போன்று எதிர்கால வரலாற்றில் இந்த இரட்டைவழக்குச் சூழல் மறையும். இன்றைய பொதுப்பேச்சுத்தமிழைத் தனிநபர்கள் உருவாக்கவில்லை. சமூக வளர்ச்சிதான் உருவாக்கியுள்ளது. அதுபோல...

ஆங்கிலமும் தமிழும் - உச்சரிப்பில்!

திரு. வேல்முருகன் சுப்பிரமணியன்: ஐயா ஒரு ஐயம்.know என்பதை பேச்சுமொழியில் சரியாகச்சொல்ல தேவைப்படும் அறிவை மாற்றுவிதிகளின் எண்ணிக்கைக்குள் கொண்டுவரவேண்டுமா?ந. தெய்வ சுந்தரம் :ஆங்கிலத்தில் எழுதுவதை அப்படியே பல நேரங்களில் வாசிக்கமுடியாது. cat, cut, car என்பதை உச்சரிக்கும்போது c" ஐ ''k" என்று உச்சரிக்கிறோம். ஆனால் city, cipher போன்றவற்றை உச்சரிக்கும்போது , "c" என்பதை "c" என்றே உச்சரிக்கிறோம். Psychology என்பதை உச்சரிக்கும்போது, "p" ஐ விட்டுவிடுகிறோம். 'creche" என்பதை "krush" என்று வாசிக்கிறோம். இதன் காரணமாகத்தான் ஆங்கில அகராதியில் ஒவ்வொரு சொல்லுக்கும் அடைப்புக்குறிக்குள் உச்சரிப்பைத் தருகிறார்கள். உச்சரிப்புக்கான தனி அகராதிகளும் Daniel Jones, Gimpson போன்றவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. ஏன் இவ்வாறு மாறியமைகிறது என்பதற்கான காரணங்களுக்கு இப்போது நான் செல்லவில்லை.ஆனால் தமிழில் எழுதுவதை அப்படியே...

தமிழ் இரட்டைவழக்குபற்றிய இரண்டு ஐயங்கள் .

 தமிழ் இரட்டைவழக்குபற்றிய இரண்டு ஐயங்கள் . . . ----------------------------------------------------------------------தமிழ் இரட்டைவழக்குபற்றிய என் பதிவில் நண்பர் திரு. மாலன் இரண்டு ஐயங்களை எழுப்பியுள்ளார். உண்மையில் வரவேற்கவேண்டிய ஐயங்கள் இந்த இரண்டும். இதற்கான விளக்கம் அனைவருக்கும் பயன்படும் என்பதால், இதைத் தனிப்பதிவாக இடுகிறேன்.ஐயம் 1 : இரட்டை வழக்குத் தோன்றுவதற்கான சூழல்/சமூகக் காரணிகள் என்ன?ஐயம் 2 : பேச்சிலிருந்து எழுத்தா, எழுத்திலிருந்து பேச்சா என்ற புதிருக்கான விடையை அறிதல் இயலுமா?ஐயம் 2-க்கான பதிலை முதலில் விவாதிக்கலாம் எனக் கருதுகிறேன். எழுத்துமொழி உள்ள எந்தவொரு (இயற்கை) மொழியிலும் பேச்சுமொழி இல்லாமல் இருக்காது. இந்தப் பேச்சுமொழிதான் அந்த மொழிச்சமுதாயத்தில் முதலில் நீடித்திருக்கமுடியும். அந்த மொழிச்சமுதாயத்தின் வளர்ச்சியையொட்டி - அந்தப் பேச்சுமொழிக்கு வரிவடிவம் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்....

இரட்டை வழக்குமொழி என்றால் என்ன?

 ஒரு மொழியை இரட்டைவழக்குமொழி என்று கூறுவதற்கான அடிப்படைபற்றி ஒரு உரையாடல் . . . ----------------------------------------------------------------------பேரா. நயினார் எம். அனந்தபுரி-----------------------------------------ஆங்கிலமும் தமிழைப்போல் (தமிழ் அளவுக்கு இல்லையென்றாலும்) இருவழக்கு மொழி தானே. Spoken English என்று சொல்கிறார்களே! முறையாக ஆங்கிலம் படித்தவர்களும் 'Spoke English ' வகுப்புகளுக்குச் செல்வதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.பேரா. கோவிந்தசுவாமி இராஜகோபால்---------------------------------------------To larger extent, English too a Diglossic language.ந. தெய்வ சுந்தரம்---------------------நன்றி பேராசிரியர் அவர்களே. எழுத்துமொழி உள்ள மொழிகளில் உறுதியாக பேச்சுமொழியும் இருக்கும். அதில் ஐயம் இல்லை. ஆங்கிலத்திலும் பேச்சுமொழி உண்டு. எழுத்துமொழி உண்டு. ஆனால் இரட்டை வழக்குமொழி என்று ஒரு மொழியைச்...

புதன், 21 ஆகஸ்ட், 2024

தவறின்றித் தமிழ் எழுத . . .

பேச்சுத்தமிழை இயற்கையாக நாம் கற்றுக்கொள்வதால் பிழை, தவறுகள் வராது. ஆனால் எழுத்துத்தமிழை நாம் 5 வயதுக்குப்பிறகுதான் பள்ளிகளில் முறைசார் கல்வியில் பயில்கிறோம். இதனால் ஒரு சிக்கல், மாணவர்களின் எழுத்துத்தமிழில் பேச்சு வழக்கு கலந்துவரும். இதைத் தவிர்ப்பதற்குத் தனியாகவே சில பாடங்கள் இருக்கவேண்டும். அடுத்து, எழுத்துத்தமிழில் முறைசார் இலக்கணத்தை அனைவரும் பயில்வதற்கு வாய்ப்பு இல்லை. எனவே தவறுகள் நேர்வது இயல்பே. ஒரு மருத்துவர் தம் துறையில் மிகச் சிறந்த வல்லுநராக இருக்கலாம். ஆனால் எழுத்துத்தமிழ் இலக்கணத்தை முறைசார் கல்வியில் முழுமையாக அவருக்கு வாய்ப்பு இல்லாமல் போயிருக்கலாம். . இது எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். எனவே தமிழ்மொழித்துறை சார்பான மாணவர்கள், ஆசிரியர்களுக்குமட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கிறது. அப்படியென்றால் என்ன செய்வது?ஒருவர் தமது எழுத்துக்களில் தவறு இல்லாமல் இருக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார்...

பேச்சுத்தமிழுக்கு இலக்கணம் உண்டா?

 சிலர்  இலக்கணம் என்று கருதுவது மொழியில் இருக்கிற இலக்கணத்தை ஆய்ந்து எழுதப்படுகிற இலக்கணநூலைக் (தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள்) குறிக்கிறது எனக் கருதுகிறேன். இலக்கண ஆசிரியர்கள் ஒரு மொழியின் இலக்கணத்தை உருவாக்கவில்லை. மாறாக, அதை ஆராய்ந்து எழுதுகிறார்கள். பேச்சுத்தமிழுக்கு முழுமையான இலக்கணம் உண்டு. ஆனால் அதை ஆய்ந்து எழுதப்பட்ட இலக்கண நூல்கள் குறைவு. பேராசிரியர்கள் குமாரசாமி ராஜா, முத்துச்சண்முகம், ஹெரால்ட் ஷிப்மேன், வாசு இரங்கநாதன் ஆகியோர் எழுதியுள்ளனர். நானும் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வில் கொடுத்துள்ளேன்.இலக்கணம் இல்லாமல் எந்தவொரு மொழியும் - பேச்சுமொழி உட்பட - இருக்கமுடியாது. நாம் பேச்சில் '' நான் வருவான்' 'மரமெ பாத்தேன்' 'நாளெய்க்கு வந்தேன்' என்றெல்லாம் பேசமாட்டோம். எனவே பேச்சுத்தமிழுக்கும் இலக்கணம் முழுமையாக உண்டு. எழுத்துத்தமிழிலிருந்து வேறுபடும் இடங்களில்கூட குறிப்பிட்ட...

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

எழுத்துவழக்கில் சந்தி விதிகள் தேவையா இல்லையா?

 எழுத்துவழக்கில் சந்தி விதிகள் தேவையா இல்லையா என்பதுபற்றிய உரையாடலில் நண்பர் திரு மாலன் அவரகளும் நானும் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் . . . ------------------------------------------------------------------நண்பர் திரு. மாலன் அவர்கள்:தமிழ்ச் சமூகம் குறுகியது அல்ல உலகளாவியது பேச்சு வழக்கில் உள்ளதைப் போன்று எழுத்து வழக்கிலும் வேற்பாடு இருக்கும் பேச்சு வழக்கிற்கு அருகில் எழுத்து வழக்கைக் கொண்டு வருவதுதான் உகந்தது பேச்சு வழக்கில் வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக இடம் பெறுவதில்லை எடுத்துக்காட்டாக என் வீடு, உன் பணம் அஃறிணைக்குரிய விகுதிகள் உயர்திணைக்குப் பயன்படுத்தப்படுகின்றன உதாரணம் என் மனைவி ஒருமை பன்மை மங்குகின்றன எடுத்துக்காட்டு: விருதுகள் வழங்கப்பட்டது. இவற்றையெல்லாம் அனுமதிப்பவர்கள் அல்லது கண்டும் காணாதிருப்பவர்கள் ஒற்றுப் பிழைகளுக்கு, ஒற்று விடுபடலுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வந்து விடுவார்கள்....

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

இலக்கண நூலிலேயே இலக்கணப் பிழை . . .

 தமிழில் இலக்கணப் பிழையின்றி எழுதுவதற்கு உதவுவதற்காக எழுதப்பட்ட ஒரு நூலின் (2009) பதிப்புரையில் ...''எவ்வித கைம்மாறும் '', ''தமிழை படியுங்கள்'' போன்ற சொற்றொடர்களைப் பார்த்தேன். உறுதியாக ஆசிரியருக்கு இவை தவறு என்று தெரியும். இதில் எனக்கு ஐயம் இல்லை. அச்சுப்பிழையாக இருக்கலாம். இருந்தாலும் இதுபோன்ற தவறுகள் நிகழ்வது தவிர்க்கப்படவேண்டும்.தவறு (mistake) , பிழை (error) இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. ஒன்றைப் பற்றி அறியாமல் இருப்பதைப் பிழை என்று கூறலாம். ஆனால் அறிந்த ஒன்றையே முறையாகச் செய்யாதது தவறு.பிழைகளைத் தவிர்க்க முறையான அறிவைப் பெறுவதே வழி.தவறுகளைத் தவிர்க்க எழுதும்போது கவனத்துடன் எழுதவேண்டும். நம்மை அறியாமல் தெரிந்த ஒன்றையும் தவறாக எழுதிவிடுவோம். இதைத் தவிர்க்க நாம் எழுதியதையே மீண்டும் மீண்டும் படித்துப்பார்க்கவேண்டும்.தட்டச்சு செய்யும்போது இரண்டுவகைகளில் பிழைகள் ஏற்படலாம். ஒன்று, தட்டச்சுச்...

பிழையோ தவறோ இல்லாமல் எழுத்துத்தமிழில் அனைவராலும் எழுதமுடியுமா?

 பிழையோ தவறோ இல்லாமல் எழுத்துத்தமிழில் அனைவராலும் எழுதமுடியுமா?----------------------------------------------------------------------------------------------------------நேற்று நான் இட்ட பதிவில் எழுத்துத்தமிழில் எழுத்துப்பிழையோ ஒற்றுப்பிழையோ சொற்றொடர்ப்பிழையோ இல்லாமல் ஒருவர் எழுதினால் சிறப்பு எனக் கூறியிருந்தேன். அதையொட்டியதுதான் இந்தப் பதிவு.எழுத்துத்தமிழைப் பயன்படுத்துபவர்களை இரண்டுவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, முறைசார்ப் பள்ளிக் கல்வியில் தமிழைக் கற்றவர்கள். அடுத்து, அவ்வாறு பள்ளிக்குச் செல்லாமலேயே நடைமுறையில் தமிழைக் கற்றுக்கொண்டவர்கள். பள்ளிக்கல்வியில் இரண்டாம் மொழியாக ( அல்லது முதல்மொழியாக) ஆங்கிலக் கல்வியைப் பெறுபவர்கள் , தங்கள் சொந்த விருப்பம், முயற்சி போன்றவற்றின் அடிப்படையில் தங்களது ஆங்கில (எழுத்து) மொழித்திறனை மிகவும் உழைத்துக் கற்றுக்கொள்கிறார்கள். He is coming என்றுதான்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India