புதன், 30 ஜூன், 2021

இலக்கணமும் மொழியியலும் அறிவியல் துறைகளே!

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திரு. ஜெயபாண்டியன் கோட்டாளம் அவர்கள்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதையெல்லாம் படிக்கும்போது எனக்கு எழும் ஒரு உண்மையான அச்சத்தை இங்கு பதிவுசெய்ய கடமைப்படுகிறேன். நான் தமிழறிஞனும் அல்லேன், அறிஞர்களுக்கு எதிர்ப்பான மனப்பாங்கு உடையவனும் அல்லேன்.

பொற்கோ அவர்களின் இக்கால இலக்கண நூலில் பல புதுமையான கருத்துகளை சொல்கிறார். அவற்றுள் சிலவற்றை நான் தவறானவையாக காண்கிறேன். இவற்றுள் ஒன்றைப்பற்றி நாம் இருவரும் எதிரெதிரான கருத்துகளுடன் நீண்ட உரையாடலை முன்பொருமுறை மேற்கொண்டிருக்கிறோம்.

புத்திலக்கணம் எழுதுகிறேன் என்ற பெயரில் மேலும் தவறான கூறுகளை இக்காலப்பேராசிரியர்கள் புகுத்திவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

ந. தெய்வ சுந்தரம்

இலக்கணம், மொழியியல் என்பவை புறவயமான விதிகளை அடிப்படையாகக் கொண்டவையே. நீடிக்கிற இயற்கையின் அமைப்பையும் செயல்பாட்டையும் கண்டறிந்து விளக்குகிற துறையே அறிவியல். இல்லாத ஒன்றை முன்வைப்பது அறிவியல் இல்லை.

அதுபோலவே இலக்கணமும் மொழியியலும். இன்றைய தமிழின் வளர்ச்சிநிலையை - அதன் அமைப்பு, செயல்பாடுகள் ஆகியவற்றை - ஆய்ந்து, அவைபற்றிய கருத்துகளையும் அவற்றில் நீடிக்கிற ஒழுங்கமைவு, விதிகள் ஆகியவற்றையும் கூறுகிற துறைகளே ஆகும். மொழியில் இல்லாத ஒன்றைக் கூறமுடியாது. பிற அறிவியல் துறைகள் போன்றவையே இலக்கணமும் மொழியியலும். (டாக்டர் பொற்கோ - '' ஆராய்ச்சியில் ஈடுபட ஈடுபடப் புதிய புதிய விதிகளை நாம் கண்டறிகிறோம். விதிகளை நாமே உண்டாக்க முடியாது. முன்பே இருக்கிற விதிகளைக் கண்டறிகிறோம். மொழி உலகில் நாம் கண்டறிய வேண்டிய விதிகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன'')

பிறதுறைகளில் ஆய்வாளர்களை ''இக்காலப் பேராசிரியர்கள்'' ''அக்காலப் பேராசிரியர்கள்'' என்று ''வகைப்படுத்தி'' பேசுவது எவ்வாறு தவறானதோ, அதுபோன்றதுதான் இலக்கணத்திலும் மொழியியலிலும் முறையான கல்வியும், பயிற்சியும் பெற்ற பேராசிரியர்களைப்பற்றிக் கூறுவது ஆகும்.

இயற்கைபற்றிய கருத்துக்களிலும் அறிவியலாளர்கள் நடுவில் மாறுபட்ட, வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதுபோன்றே இலக்கண, மொழியியல் ஆய்வாளர்கள் நடுவிலும் இருக்கலாம். அவ்வளவே.

இன்றைய தமிழின் வளர்ச்சியைப் புறவயமாக ஆய்ந்து, அதன் அமைப்பு, செயல்பாட்டு வளர்ச்சிகளைக் கண்டறிந்து, முந்தைய நிலையிலிருந்து இன்றைய அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எவ்வாறு தமிழ் வளர்ந்துள்ளது என்பதை விளக்குவதே புதிய இலக்கணத்தின் பணியாகும். இதற்குத் தொல்காப்பியம், நன்னூல் உட்பட மரபு இலக்கணங்களில் புலமையும் இன்றைய மொழியியல் பயிற்சியும் உள்ள ஆய்வாளர்களின் பணிகளையே இங்கு நான் குறிப்பிடுகிறேன். ஏனோ தானோ என்று கருத்துக்களை அவர்கள் வழங்கமாட்டார்கள். அவர்கள் அவ்வாறு வழங்கினாலும் பிற ஆய்வாளர்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

புதிய இலக்கணத்தின் தேவைபற்றிப் பேரா. பொற்கோ அவர்கள் தனது ''இக்காலத் தமிழ் இலக்கணம்'' என்ற நூலின் முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்.

//மொழியின் பயன்பாட்டு எல்லையின் விரிவாக்கம் புதிய இலக்கணத்திற்கு வழிவகுத்துள்ளது. இத்தகைய சூழலில் புதிய இலக்கணங்கள் தோன்றவேண்டும்; அப்போதுதான் மொழியில் தோன்றியுள்ள புதிய இலக்கணக் கூறுகளுக்கு நிலைபேறு ஏற்படும். மொழியிலும் அப்போதுதான் புதிய வளர்ச்சி தோன்றும். இந்த இலக்கணநூல் தமிழ் மரபைப் போற்றி எழுதப்பட்ட இலக்கண நூல். தேவையான பழைமைகளைப் போற்றிக் காப்பதோடு மொழியில் தோன்றியுள்ள புதுமைக்கூறுகளுக்கு இடம் தந்து வாழ்வளிப்பதையும் இந்த இலக்கண நூல் ஒரு நோக்கமாகக் கொண்டிருக்கிறது. மரபில் கால் ஊன்றிப் புதுமையில் அடியெடுத்து வைக்க இந்த நூல் வழிகாட்டுகிறது. //

எனவே பேராசிரியர் ஜெயபாண்டியன் கோட்டாளம் அவர்களே... தாங்கள் தமிழ் இலக்கண, மொழியாசிரியர்களைக் ( தங்கள் சொற்களில் சொல்வதென்றால் ''இக்காலப் பேராசிரியர்கள்'') கண்டு ''அச்சப்படத்'' தேவையில்லை. அவர்களின் கருத்துக்களில் தங்களுக்கு உடன்படாத எதுவும் இருந்தால், அதைத் தகுந்த ஆதாரங்களுடன் முன்வைத்து, அவர்களுக்கு உதவலாம்! நன்றி.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India