சனி, 25 மே, 2024

கணினி உருபனியலும் தமிழ் மென்பொருள்களும்

 கணினி உருபனியலும் தமிழ் மென்பொருள்களும் இன்றைய மின்னணு உலகில் மின்னணுக் கருத்துப்புலப்பாட்டுச் சாதனங்களில் ஒரு மொழி முழுமையாக இடம்பெறவேண்டியது மிக மிகத் தேவையான ஒன்றாகும். அவ்வாறு இடம்பெறமுடியாத சூழல் ஒரு மொழிக்கு ஏற்பட்டால், அந்த மொழியின் எதிர்காலம் கேள்விக்குரியதாகிவிடும். கணினித்தமிழின் முதல் கட்டம் 70-களில் தமிழ்மொழியின் எழுத்துக்களைக்கூட கணினியில் காணமுடியாத ஒரு சூழல். தமிழ் எழுத்துருக்களோ ( Fonts)   தமிழ் விசைப்பலகைகளோ (Keyboard drivers)  அப்போது கிடையாது. பின்னர் சிங்கப்பூர், மலேசியா, தமிழ்நாடு, மேற்கு நாடுகளில் இருந்த தமிழ் ஆர்வலர்கள்  முன்முயற்சியால் கணினியில் தமிழ் தோன்றத் தொடங்கியது. பலவகைத் தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் மக்களின் பயன்பாட்டுக்குக் கிடைக்கப்பெற்றன. ஆனால் அனைவரும் பயன்படுத்தக்கூடிய பொதுவான எழுத்துருக்களோ விசைப்பலகைகள் நிலவாத ஒரு சூழலால்...
&nb...

வியாழன், 23 மே, 2024

குறிப்பு வினைபற்றிய ஒரு உரையாடல்

 குறிப்பு வினைபற்றிய ஒரு உரையாடல்--------------------------------------------------------------------------------------------------------பொன் + பாதம் = பொற்பாதம் (பெயர் + பெயர்)   - வேற்றுமைத்தொகை - புணர்ச்சி நடைபெறுகிறது.ஊறு      + காய்   = ஊறுகாய்       (வினை + பெயர்)     - வினைத்தொகை - புணர்ச்சி இல்லை)நல்         + பெயர் = நற்பெயர்     (வினை  + பெயர்)நல்         +பணி     = நற்பணி       (வினை  + பெயர்)நல்          + செய்தி  = நற்செய்தி (வினை + பெயர்)  இறுதி மூன்றிலும் திரிதல் நடைபெறுகிறது. திரிதலுக்கான காரணத்தை முடிவுசெய்வதில் எனக்கு ஐயம்! விளக்கம் கிடைத்தால் மகிழ்வேன். ஒரு...

ஞாயிறு, 19 மே, 2024

''சொல்கள்'' - ''சொற்கள்'' ? ''நாள்கள் - நாட்கள்''? - ஓர் ஐயம்! (4) - முடிவு

 ''சொல்கள்'' - ''சொற்கள்'' ? ''நாள்கள் - நாட்கள்''? - ஓர் ஐயம்! (4) - முடிவு------------------------------------------------------------------------இதற்கான விவாதத்தில் ஏராளமான தமிழ் அறிஞர்கள், பிற துறை அறிஞர்கள் கலந்துகொண்டனர். மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. அனைவருக்கும் நன்றி. 80-க்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் அமைந்தன. இறுதியாக, கீழ்க்கண்டவாறு கூறலாமா என்பதை நண்பர்கள் கூறவேண்டும்.(1) இலக்கண விதிப்படிப் பார்த்தால் ''சொல்கள்'', ''பல்கள்'' என்றுதான் வரவேண்டும். தோன்றலோ திரிதலோ இங்கு நடைபெறாது. தொகைச்''சொல்களுக்குமட்டுமே'' இந்தப் புணர்ச்சி விதி பொருந்தும். மேலும் மெய்மயக்க விதிகளும் இங்குப் புறக்கணிக்கப்படவில்லை (சொல்க, வெல்க) . இதில் தவறு இல்லை.(2) நண்பர்கள் சிலர் '' குறிலை அடுத்து ஒற்று வரும்போதுமட்டும் - ஓரசைச்சொல்லாக இருக்கும்போதுமட்டும் - இவ்வாறு வருகிறது; மற்ற இடங்களில் பிரச்சினை...

ஆங்கிலச் சொல்களைத் தமிழில் எழுதும்போது ஏற்படும் பிரச்சினை . . . gold - cold : god - cot

 ஆங்கிலச் சொல்களைத் தமிழில் எழுதும்போது ஏற்படும் பிரச்சினை . . . gold - cold : god - cot----------------------------------------------------------------------------------------------------------------------------------ஆங்கிலச் சொல்களோடு தமிழ் விகுதிகளை இணைக்கும்போதுகூட ஒரு ஒழுங்கு இருக்கிறது.Gold என்ற சொல் "d" (ஒலிப்புள்ள ஒலி - voiced sound) -இல் முடிகிறது. இதைத் தமிழில் எழுதும்போது ''கோல்ட்'' என்று அமைந்து, பின்னர் 'உ' சேர்த்து, 'கோல்டு' கிடைக்கும். அதனுடன் 'ஐ' என்ற விகுதியை இணைக்கும்போது, 'கோல்டை' என்று அமையும். இங்கு 'ட்' இரட்டிக்காது. இங்கு அகராதிச்சொல் 'கோல்டு'. அப்போதுதான் 'ஐ' இணைகிறது.அதேவேளையில் cat என்ற சொல்லில் ''t" என்பது ஒலிப்பில்லா ஒலி (Voiceless sound ). இது தமிழில் இரட்டித்து, 'கேட்ட்' என்று மாறி, அதனுடன் 'உ' சேரும் ('கேட்டு'). பின்னர் அதனுடன் 'ஐ' விகுதியை இணைக்கும்போது...

வியாழன், 16 மே, 2024

''சொல்கள்'' - ''சொற்கள்'' ? ''நாள்கள் - நாட்கள்''? - ஓர் ஐயம்! (3)

 ''சொல்கள்'' - ''சொற்கள்'' ? ''நாள்கள் - நாட்கள்''? - ஓர் ஐயம்! (3) --------------------------------------------------------------------------பேராசிரியர் செ.இரா. செல்வக்குமார் அவர்கள்-------------------------------------------------------- ஐயா கருதிப் பார்க்கின்றேன்.-ல்க- என்று தமிழில் வரும். எ.கா வெல்க, சொல்க, நல்க. ஆனால் சொல்கள் என்று சொல்வது சற்று கடினமாக உள்ளது. ள் என்னும் நாமடி ஒலி க-வை அடுத்து வருவதாலோ என்னமோ. சொற்கள் என்று சொல்லுதல் எளிதாக உள்ளது. (என் உணர்வைப் பகிர்கின்றேன்).ந. தெய்வ சுந்தரம்-------------------------------------------------------------------ஆமாம் பேராசிரியர் அவர்களே. நானும் இதுவரை இதை உணரவில்லை. சொற்கள், பற்கள் என்றுதான் எழுதிவருகிறேன். மிக அண்மையில்தான் ஆய்வில் இந்த முடிவுக்கு நாங்கள் வந்தோம். மாற்றி எழுதுவது கடினமாகத்தான் இருக்கிறது.செயற்கையாகத் தெரிகிறது....

மொழியியல் தமிழுக்கு எதிரானதா?

மொழியியல் தமிழுக்கு எதிரானதா? மொழியியலே தமிழ்மொழி ஆய்வுக்கு எதிரானது என்று இன்னும் ஆங்காங்கே குரல்கள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆங்கில இலக்கணத்தைத் தமிழுக்குப் புகுத்த முயல்கிறார்கள் மொழியியல் ஆய்வாளர்கள் என்று கூறப்படுகிறது.தற்போது கணினிமொழியியல் துறை வளர்ச்சி அடையும்போது மொழியியல் ஆய்வாளர்கள் அந்தத் துறையைப் பயன்படுத்தித் தமிழ்ச்சமுதாயத்திற்கு ஏதாவது பயனுள்ள பணிகளை மேற்கொள்ளமுடியுமா என்று கருதிப்பார்க்கிறார்கள்.மேலைநாட்டு அறிவியல் வளர்ச்சியைத் தமிழுக்குக் கொண்டுவருவதில் என்ன தவறு இருக்கிறது? அறிவியலில் மேலைநாடு, கீழைநாடு என்று பார்ப்பது சரி இல்லை. மொழியியல் துறையில் புதிய புதிய கோட்பாடுகள் உலக அளவிலான மொழியியல் ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். அவற்றைத் தமிழ்க்குச் செயல்படுத்திப் பார்த்து, அந்தக் கோட்பாடுகள் சரியா தவறா என்று மொழியியல் ஆய்வாளர்கள் ஆய்வுசெய்யவேண்டும்.மொழியியல் என்றால்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India