வியாழன், 25 மே, 2023

தமிழ்வழிக் கல்விக்கான கருத்தாடலில் ஒரு கருத்து . . .

 நண்பர் திரு மாலன் கருத்தும் எனது கருத்தும்------------------------------------------------------------------------------------------------------------தமிழ்வழிக் கல்விதொடர்பான எனது இன்றைய இரண்டு பதிவுகளைத் தொடர்ந்து, நண்பர் திரு. மாலன் அவர்கள் நடுவண் அரசு, மாநில அரசு முயற்சிகள் பற்றி விளக்கியிருந்தார். தமிழ்வழிக் கல்வியை ஏற்றுக்கொண்டுதான் அவர் அதைக் கூறுகிறார். இதில் ஐயம் இல்லை! ஆனால் இவ்வளவு முயற்சிகள் நடைபெற்றும் தமிழ்வழிக் கல்விக்கு நாம் எதிர்பார்க்கிற வரவேற்பு கிடைக்கவில்லை என்ற ஒரு ஆதங்கத்தில் சில கருத்துக்களை அவர் முன்வைத்துள்ளார். அவருக்கு நன்றி. அதையொட்டி, எனக்குத் தோன்றிய கருத்துக்களையும் இங்கு முன்வைக்கிறேன்.நண்பர் திரு. மாலன் அவர்கள்-----------------------------------------------------------------------''அரசு எதுவும் செய்யவில்லை என்பது சரியல்ல. தமிழ்வழியில் படித்த மாணவருக்கு...

"இசைவை உற்பத்தி செய்தல் (Manufacturing consent)"

 "இசைவை உற்பத்தி செய்தல் (Manufacturing consent)"------------------------------------------------------------------------------------------------------------உலகறிந்த மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி அவர்கள் தனது மற்றொரு நண்பருடன் இணைந்து ''Political Economy of Mass Media - Manufacturing Consent" என்ற ஒரு மிகச் சிறந்த நூலை உருவாக்கினார்.இந்த நூலின் அடிப்படைக் கருத்து . . . இன்றைய ஊடகங்கள் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில்தான் நீடிக்கின்றன. இவற்றின் நோக்கமே . . . இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி பொருள்களுக்கும் . . . இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக உள்ள அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள் போன்றவர்களுக்கும் ''சந்தை '' உருவாக்கிக் கொடுப்பதே ஆகும்! ஒரு குறிப்பிட்ட பொருளைப்பற்றிப் பல வகைகளில் ''புகழ்ந்து பேசி'' ஆதரவு திரட்டுவது முதல் படி! இந்தப் ''பொருள்கள்''...

தமிழ்மொழிக்கு ஏன் இந்த நிலை?

 தமிழ்மொழிக்கு ஏன் இந்த நிலை?----------------------------------------------------------------------------------------------------------இன்றைய நாளிதழ்களில் ஒரு செய்தி! தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழிப் படிப்புகளுக்கு ஒரே ஒரு மாணவர்தான் விண்ணப்பித்துள்ளார். இருப்பினும் தமிழ்வழிப் படிப்புகளை ரத்து செய்யமாட்டோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சரும் பொறியியல் படிப்புகளுக்கான துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்!ஏன் இந்த நிலை தமிழ்வழிப் படிப்புகளுக்கு? தமிழ் மக்களே - தமிழ்ப் பெற்றோர்களே - தமிழ்வழிப் பொறியியல் படிப்புகளுக்கு ஆதரவாக இல்லை! இந்த நிலை உயர்நிலைப் படிப்புகளில்மட்டும் இல்லை! பாலர் வகுப்பிலிருந்தே இது நீடிக்கிறது!இது ஒரு பொருளாதாரம்சார்ந்த சமூக உளவியல் பிரச்சினை!ஒரு பாட அறிவு தமிழில் படித்தாலும் அதே அறிவுதான்! ஆங்கிலத்தில் படித்தாலும் அதே அறிவுதான்! எந்தவகையிலும் மொழி அடிப்படையில்...

கல்விக்கொள்கை உருவாக்கத்தில் தமிழாசிரியர்களுக்குப் பங்கு அளிக்கலாமா? கூடாதா என்பதுபற்றிய விவாதத்தில் எனது இறுதிக் கருத்து !

 கல்விக்கொள்கை உருவாக்கத்தில் தமிழாசிரியர்களுக்குப் பங்கு அளிக்கலாமா? கூடாதா என்பதுபற்றிய விவாதத்தில் எனது இறுதிக் கருத்து !---------------------------------------------------------------------------------------------------------------------------ஒருவர் ஒரு குறிப்பிட்ட பணியில் சேர்ந்து பணியாற்றும்போது, அப்பணிக்குரிய அறிவைப் பெற்றிருப்பார்; பெற்றிருக்கவேண்டும். ஆனால் அதேவேளையில் . . . அவர் இந்தப் பிரபஞ்சத்தின் . . . சமுதாயத்தின் ஒரு அங்கமாக இருப்பதால் . . . அவைபற்றிய அறிவையும் கொண்டிருப்பார்.; கொண்டிருக்கவேண்டும். அதனால் ஒருவர் தமிழாசிரியராக இருப்பதாலேயே . . . . தமிழ்மொழி அறிவியல், தமிழ் இலக்கிய அறிவியல் தாண்டி . . . பிற அறிவியல்துறைகள்பற்றிய அறிவைப் பெற்றிருக்கமாட்டார் என்று கருதக்கூடாது. இது பிற துறைப் பேராசிரியர்களுக்கும் பொருந்தும். பிரபஞ்ச, சமுதாய அறிவியல்களில் மொழியும், இலக்கியமும்...

தமிழ்மொழி, இலக்கியம் அறிவியலாளர்களையும் பிற துறை அறிவியலாளர்களையும் எதிர் எதிராக நிறுத்தாதீர்கள்

 தமிழ்மொழி, இலக்கியம் அறிவியலாளர்களையும் பிற துறை அறிவியலாளர்களையும் எதிர் எதிராக நிறுத்தாதீர்கள் தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்களே !----------------------------------------------------------------------------------------------------நேற்று தமிழ் ஆசிரியர்கள்பற்றித் தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்கள் ஒரு பதிவு இட்டிருந்தார்கள். அதற்கு நானும் பதில் கூறியிருந்தேன். அதன்பின்னர் தோழர் அப்பதிவை நீக்கிவிட்டு, ஒரு விரிவான பதிலை இன்று இடுவதாகக் கூறியிருந்தார். தான் சொன்னபடி இன்று ஒரு பதிவை இட்டு, என் கவனத்திற்கும் அதைக் கொண்டுவந்தார். முழுவதும் படித்துப்பார்த்தேன். அவரது புரிதல் மிகத் தவறானது என்பதே எனது கருத்து! ஆனால் இதுபோன்ற கருத்துக்களுக்கு நீண்ட பதில் எழுத நான் விரும்பவில்லை! பயன் இருந்தால் உறுதியாக நான் எழுதுவேன். ஒரு நாட்டின் பொருளாதார உற்பத்தியில் . . . . பிற உற்பத்தி சக்திகளுக்கு இணையாக அந்த...

தற்போதைய ''கல்விக்கொள்கைகளும்'' ''புதிய கல்விக்கொள்கைகளும்''!

 தற்போதைய ''கல்விக்கொள்கைகளும்'' ''புதிய கல்விக்கொள்கைகளும்''!----------------------------------------------------------------------------------------------------இன்று நிலவுகிற கல்வியானது இந்தியாவின் தற்சார்புப் பொருளாதாரம், உற்பத்தி ஆகியவற்றிற்குப் பயன்படாத ஒன்று மட்டுமல்ல . . . அதற்கு எதிரானதும்கூட! தற்சார்புப் பொருளாதாரத்திற்குப் பயன்படாத ஒன்று என்றால் . . . எதற்குப் பயன்படுகிறது? அந்நிய ஏகாதிபத்தியங்களின் பொருளாதாரச் சுரண்டலுக்கு உதவுகிறது இந்தக் கல்விமுறை! பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் நீடிப்புக்கும் உதவுகிறது இந்தக் கல்விமுறை! பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்குத் தேவையான மனிதசக்தியை உருவாக்கித் தருவதே அதன் நோக்கமாகும்! அவற்றின் இந்திய மண்ணில் நீடிக்கிற தொழிற்சாலைகளுக்குமட்டும் அல்லாமல் . . . அவற்றின் சொந்த நாடுகளாகிய ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இந்திய மனித சக்தியை...

தமிழாசிரியர்கள்பற்றிய தவறான பதிவுக்கு மறுப்பு!

 தமிழ்நாட்டுக் கல்விக்கொள்கைக்கான குழுவில் தமிழாசிரியர்களை நியமித்தது தவறு என்ற ஒரு கருத்தை முன்வைத்துள்ள தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்களுக்கான தோழமை அடிப்படையிலான பதில் இது!-----------------------------------------------------------------------------------------------------------------------தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்கள் ஒரு முற்போக்குத் தோழர் (எனக்கு நெருங்கிய நண்பரும்கூட). அவர் தமிழ்நாட்டுக் கல்விக்கொள்கைக்கான குழுவில் தமிழாசிரியர்களை நியமிப்பது தவறு என்று கூறிய பதிவுக்குப் பதிலாகத் தோழமை அடிப்படையில் நான் இந்தப் பதிவை இடுகிறேன். தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்களே. தங்களது கருத்து மிகத் தவறு என்றே நான் கருதுகிறேன். பொதுவாகத் தமிழாசிரியர்கள்பற்றித் ''தமிழகத்தில்'' ''தமிழ் உணர்வுமிக்க தமிழகத்தில்'' சிலர் கொண்டிருக்கிற கருத்தையே தங்களைப் போன்றவர்கள் கொண்டிருப்பது மிக்க வேதனையாக இருக்கிறது.தமிழ்த்துறையில்...

சனி, 13 மே, 2023

மனிதமூளையும் கணினி மூளையும் / ஆய்திறன் அறிவும் ( Intelligence) தரவுத்தொகுப்பு அறிவும் (Knowledge)

 மனிதமூளையும் கணினி மூளையும் / ஆய்திறன் அறிவும் ( Intelligence) தரவுத்தொகுப்பு அறிவும் (Knowledge) ------------------------------------------------------------------------------------------------------------------------fact / data = புறவயமாக இருக்கும் ஒன்று; truth = புறவயமாக இருக்கின்றவற்றின் உள்ளார்ந்த பண்பு; from fact to truth; மரத்தில் உள்ள பழம் கீழே விழுகிறது என்பது fact; அதற்கு அடிப்படைக் காரணம் புவியீர்ப்பு விசை என்பது truth: இந்தப் புறவய நிகழ்ச்சிகளிலிருந்து அவற்றின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள உதவுவது மனித மூளையின் நுட்பத்திறன். இந்த நுட்பத்திறனே Intelligence; எனவே, புறவயமாக நீடிக்கிற பொருள் அல்லது நிகழ்விலிருந்து (Empirical / facts/ knowledge) அதனுடைய பண்பைத் தெரிந்துகொள்வது அறிவியல் அறிவு (Scientific knowledge / truth) . இந்த அறிவு மாற்றத்திற்கு அல்லது வளர்ச்சிக்கு உதவுவது...

செவ்வாய், 9 மே, 2023

சேட்ஜிபிடி-யும் மொழிதொடர்பான வினாக்களும்!

 சேட்ஜிபிடி-யும் மொழிதொடர்பான வினாக்களும்!------------------------------------------------------------------தமிழ்பற்றிய ஒரு இலக்கண ஐயத்தையும் ஆங்கிலம் பற்றிய ஒரு ஐயத்தையும் சேட்ஜிபிடி-க்கு அளித்து, விடை கேட்டேன். தமிழ் வினாவை இரண்டு தடவை மாற்றிக் கேட்டேன். ஆங்கில வினாவுக்குத் தெளிவான விடை கிடைக்கிறது; ஆனால் தமிழ்பற்றிய வினாவுக்கு விடை கிடைக்க வில்லை! இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்துப் பாருங்கள்!--------------------------------------------------------------------------ந. தெய்வ சுந்தரம் : படித்தான் என்ற சொல்லைப் பிரித்து இலக்கணக் குறிப்பைத் தரவும்."சேட் ஜிபிடி : படித்தான்" என்ற சொல் ஒரு பகுத்தியைப் புரிந்துகொள்ள உதவுகின்றது. இது தமிழ் மொழியில் பயன்படுகின்ற ஒரு கால சொற்களில் ஒன்றும் ஆகும். "படித்தான்" என்பது முன்னாக வரும் காலத்தில் நடக்கின்ற ஒரு நிகழ்வை முன்னேற்றுகின்றது.இலக்கணம் என்பது...

செய்யறிவுத்திறன் மென்பொருள்களும் தமிழ்மொழியியல் ஆய்வும்

 செய்யறிவுத்திறன் மென்பொருள்களும் தமிழ்மொழியியல் ஆய்வும் . . . -----------------------------------------------------------------------------------------------------------------செய்யறிவுத் திறன்கொண்ட ( இந்தத் தொடரை நண்பர் சுந்தர் இலட்சுமணன் அவர்களிடமிருந்து பெற்றேன்) சேட்ஜிபிடி தனது மொழிச்செயல்பாட்டுக்கு நிகழ்தகவுப் புள்ளியியலைமட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளதா அல்லது மொழியியல் ஆய்வையும் உட்படுத்திச் செயல்படுகிறதா என்ற ஒரு ஐயத்தை சேட்ஜிபிடி-யிடமே கேட்டேன். அது அளித்த பதிலின்படி மொழியியல் அறிவையும் உட்படுத்தித்தான் அது செயல்படுகிறது என்று தெரியவருகிறது. ந. தெய்வ சுந்தரம் ------------------------------------------------------------------------Whether ChatGPT Language modelling is purely depending on Probabilistic statistics or it uses the linguistic knowledge wherever it is necessary?சேட்ஜிபிடி-யின்...

மொழி வடிவ மாதிரி ( Language Modelling) - மூளையும் செயற்கை அறிவுத்திறனும் ( Human brain and Artificial Intelligence)

மொழி வடிவ மாதிரி ( Language Modelling) - மூளையும் செயற்கை அறிவுத்திறனும் ( Human brain and Artificial Intelligence) -------------------------------------------------------------------------------------------------------------------------- உலகில் கணினித் துறையில் இன்று வியக்கத்தக்க மாபெரும் சாதனைகளைச் செயற்கை அறிவுத்திறனை அடிப்படையாகக்கொண்ட மென்பொருள்கள் (Artificial Intelligence oriented software) நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. அறிவியல் ஆய்வு, பொருளாதார உற்பத்தி, வணிகம், அரசு நிர்வாகம் என்று பல்வேறு துறைகளில் செயற்கை அறிவுத் திறனின் பயன்பாடு பெருகிவருகிறது.   மனித உழைப்பைச் சாராமலும் வேகமாகவும் ஒரு பணியைச் செயற்கை அறிவுத்திறன் மென்பொருள் செய்துமுடிக்கிறது என்றால், உறுதியாக எவரும் அந்த மென்பொருளைப் பயன்படுத்தவே விரும்புவார்கள். இதில் தவறும் ஒன்றும் இல்லை!   குறிப்பாக, லாப...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India