எனது மொழிக்கொள்கை . . .
எந்தவொரு
இனமும் தனது அனைத்துக் கருத்துப் புலப்பாட்டுச் செயல்களுக்கும் தனது தாய் மொழியையே
பயன்படுத்தவேண்டும். எந்தவொரு அடிப்படையிலும் பிற மொழிகளை அவற்றிற்குப்
பயன்படுத்தக்கூடாது.
1) தமிழகத்திலும்
தமிழ் இனம் தனது தாய்மொழியாகிய தமிழ்மொழியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
2) ஆங்கிலமோ
இந்தியோ இரண்டுமே தமிழ் இனத்திற்கு அயல்மொழிகள்தான்!
3) அரசு அலுவலகப்
பணிகள் அனைத்தும் தமிழில்தான் நடைபெறவேண்டும்.
4) தொடக்கக்கல்விமுதல்
உயர்நிலை ஆய்வுவரை பயிற்றுமொழியாகத் தமிழ்தான் தமிழகத்தில் நீடிக்கவேண்டும்.
5) வழிபாட்டுத்தலங்களில்
தமிழ்தான் பயன்படுத்தப்படவேண்டும்.
6) தொழிற்சாலை, வணிக நிறுவனங்களில் தமிழ்தான் முழுமையாகப்
பயன்படுத்தப்படவேண்டும்.
7) ஆங்கிலமோ
பிரஞ்சுமொழியோ எந்த ஒரு அயல்மொழியும் ஒருவருக்குத் தேவையென்றால், அதை அவர் படிப்பதற்குக் கல்வி நிறுவனங்கள்
உதவவேண்டும். ஆனால் அது தேவைப்படாதவர்கள்மீது அந்த மொழிகளைத் திணிக்கக்கூடாது.
8 ) பொது ஊடகங்கள்
அயல்மொழிக் கலப்பின்றி, முறையாக, தவறின்றி, தமிழைப் பயன்படுத்த முன்வரவேண்டும்.
9) சிறுபான்மை இன
மக்கள் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்கத் தேவையானவற்றை அரசு
செய்துகொடுக்கவேண்டும்.
தமிழ்நாடு என்பது தமிழ்மொழி நாடாக இருக்கவேண்டும்; ஆங்கிலம், இந்தி போன்ற எந்தவொரு அயல்மொழிகளின் மேலாண்மையும் தமிழ் மொழியின்மேல் இருக்கக்கூடாது.
அதற்காக இந்திய ஒன்றியத்தில் இந்தி அல்லாத பிறமொழிகள் பேசும் இனங்கள் ஒன்றுபட்டு, இணைந்து, போராடவேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக