வடமொழி - தமிழ்மொழி ஒப்பீடு . . . ஒரு தவறான அணுகுமுறை!--------------------------------------------------------------------------பேராசிரியர் மதிவாணன் பாலசுந்தரம் அவர்கள் தனது முகநூலில் இட்டுள்ள ஒரு பதிவையொட்டி எனது கருத்தை இங்கு முன்வைக்கிறேன்! அவருடைய கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு. அத்தோடு மேலும் சில கருத்துக்களை இங்கு முன்வைக்கிறேன். பல்கலைக்கழக நல்கைக்குழுவின் வடமொழிபற்றிக் குறித்த கருத்து மொழியியல் அடிப்படையில் மிக மிகத் தவறான கருத்து. மற்ற மொழிகள்போல் வடமொழி இல்லாததற்குக் காரணம் . . . அது என்றுமே மக்கள் வழங்கும் மொழியாக. . . . மக்களது அன்றாட வாழ்க்கைக்கான மொழியாக இல்லாமல் . . . வேதங்களுக்கான மொழியாக மட்டுமே . . . வேதங்களை ஓதுவதற்கான மொழியாக . . . வேத வாய்மொழியாகமட்டுமே நீடித்துள்ளது. அதையொட்டி உயர்வர்க்கத்திற்கான இலக்கியம், தத்துவம் போன்ற சில துறைகளிலும் பயன்படும் மொழியாக நீடித்தது!...
ஞாயிறு, 30 அக்டோபர், 2022
"மூலமொழி'' ''மூல இனம்'' கோட்பாடுகள்பற்றி எனது கருத்துக்கள். . .
"மூலமொழி'' ''மூல இனம்'' கோட்பாடுகள்பற்றி எனது கருத்துக்கள். . . ----------------------------------------------------------------------''மூலமொழி (Proto-language) '' என்ற கோட்பாடு , மொழிகளில் நிலவும் ஒற்றுமைக்கூறுகளை - குறிப்பாக, ஒலியியல் (phonetic) , ஒலியனியல் (Phonemic) கூறுகளை - ஒன்று திரட்டி, அவற்றிலிருந்து ''மூலச் சொற்களை (Proto-forms) '' அமைத்துக்காட்டும் ஒரு ஆய்வுமுறை. இதன் முடிவுகள் கருதுகோள்களாகத்தான் (Hypothesis) இருக்கமுடியும். தொல்வரலாறு (Archeology, Ancient History) , மானிடவியல் (Anthropology) போன்ற பிற துறை கண்டுபிடிப்புக்களும் நமக்குத் தேவை.இல்லையென்றால், ''மூல மொழிகள்'' ஆய்வை . . . ''மூல இனங்கள் ("Primitive Races") '' என்ற நிலைக்கு எடுத்துச்சென்று , சமுதாயப் போராட்டங்களில் சரியான ஒரு நிலைபாடு எடுப்பதில் குழப்பத்தைத்தான் உருவாக்கும். உண்மையான தேசிய இனங்கள் (Nationalities)...
சொற்பிறப்பியல் அறிஞர் திரு. இராமகி ஐயா அவர்களின் கருத்து . . .
சொற்பிறப்பியல் அறிஞர் திரு. இராமகி ஐயா அவர்களின் கருத்து . . . ------------------------------------------------------------------------வெறும் உணர்விலிருந்து இல்லாமல் . . . அறிவியல் ஆய்வின் அடிப்படையில் மூல-திராவிடம் என்பது ஒரு ஏமாற்று என்ற கருத்தை திரு. இராமகி அவர்கள் முன்வைக்கிறார். மேலும் வரலாற்றுமொழியியல் ஆய்வு தேவை என்பதையும் வலியுறுத்துகிறார். தமிழ்மொழியின் தொன்மைபற்றியும் ஒரு கருத்தை முன்வைக்கிறார். இரண்டிலும் எனக்கு உடன்பாடே! ஒரு இனம் தன் இனத்தின் உரிமைகளைத் தக்க வைக்கவும் தன் இனத்தின்மீதான பிற இனங்களின் ஒடுக்குமுறைக்கும் எதிராகப் போராடுவதிலும் இன உணர்வு முதன்மையானது; தேவையானது. அதேவேளையில் இன வரலாறு, மொழி வரலாறு ஆகியவற்றில் புறவயமான உண்மைகளைக் கண்டறிய அறிவியல் அடிப்படை தேவை . . . வெறும் உணர்வுமட்டுமே போதாது . . . என்பதை திரு. இராமகி வற்புறுத்துகிறார். மிகச் சரியான ஒரு நிலைபாடு!...
''தொடர்பு மொழிகள்'' - நம்மை எதிர்த்து நாமே போராடவேண்டியுள்ளது!
''தொடர்பு மொழிகள்'' - நம்மை எதிர்த்து நாமே போராடவேண்டியுள்ளது!-------------------------------------------------------------------தமிழகத்தில் நீடிக்கிற இரண்டு முதன்மையான ''மூடநம்பிக்கைகள்'' !''அறிவுக்கு'' ஆங்கிலம்! ஆங்கிலப் பயிற்றுமொழி!''கடவுளுக்கு'' வடமொழி! வடமொழி வழிபாட்டுமொழி!மேற்கூறிய இரண்டின் ''தகுதிகளும்'' சட்டங்களால் கொடுக்கப்படவில்லை! திணிக்கப்படவில்லை!பிறப்பு, இறப்பு, திருமணம், பெண்குழந்தைகளின் பருவ முதிர்ச்சி, புதுமனைபுகுவிழா, 60 அகவை நிறைவுவிழா , குடமுழுக்குவிழா . . . இவ்வாறு எந்தவொரு ''விழாவாகவும்'' இருந்தாலும் , "கடவுள்களோடு'' தொடர்பு ஏற்படுத்த . . . வடமொழி (வேதங்கள்) தேவை! மேலும் அவற்றை ஓதுவதற்கு ஒரு குறிப்பிட்ட சாதியினரைத்தவிர , வேறு எவருக்கும் ''உரிமை'' கிடையாது!அதுபோன்று, பள்ளிகளில், கல்லூரிகளில், உயர் ஆய்வில் . . . ''அறிவைப்'' பெறுவதற்கு ஆங்கிலமே தேவை என்ற ஒரு நிலை!மேற்கூறிய...
செவ்வாய், 25 அக்டோபர், 2022
இலக்கியப் படைப்புக்கள் முற்றும் கற்பனைகளா?
இலக்கியப் படைப்புக்கள் முற்றும் கற்பனைகளா?-------------------------------------------------------------------------------------------------------எனக்கும் இலக்கிய ஆய்வுக்கும் தொடர்பு கிடையாது! ஆனால் சமூகவியல் நோக்கில் இலக்கியங்களைப் பார்க்கும் விருப்பம் எப்போதும் எனக்கு உண்டு! அதனடிப்படையில் சில கருத்துக்களை இங்கு முன்வைக்கிறேன்! நரகாசுரனைப்பற்றிய எனது முகநூல் பதிவும் அதையொட்டி இராமாயணம், மகாபாரதம்பற்றிய முகநூல் பதிவும் நண்பர்கள் பலரிடையே சிறந்த கருத்துப்பரிமாற்றத்தை உருவாக்கியுள்ளது மகிழ்வைத் தருகிறது. நண்பர் மாலன் அவர்கள் தமிழகத்து நாட்டுப்புறவியல் தந்தையான பேராசிரியர் நா. வானமாமலை (மொழியியல் படிப்பில் நான் சேர்வதற்கு எனக்கு உதவிய . . . அவரது ஆய்வுவட்டத்தில் என்னை இணைத்துக்கொண்ட . . . எனக்குப் பலவகைகளில் உதவிசெய்த பேராசிரியர்) அவர்களின் கருத்துக்களைச் சுட்டிக்காட்டி, இலக்கியப்படைப்புக்களில்...
கம்ப இராமாயணம் கற்பனைப் படைப்பா அல்லது வரலாறா?
கம்ப இராமாயணம் கற்பனைப் படைப்பா அல்லது வரலாறா?--------------------------------------------------------------------- ''நரகாசுரன்'' பற்றிய எனது கருத்தின்மேல் எனது இனிய நண்பர் திரு. மணிவாசகன் அவர்கள் ஒரு ஐயம் எழுப்பியுள்ளார்! அதுபற்றிக் கீழே பார்க்கலாம்! நண்பர் திரு. மணிவாசகன்----------------------------------------------------------------------// இராமாயணமே கற்பனை ௭ன்று சொல்வது போல் உள்ளது ஐயா....௮ப்போ கம்பன் தமிழ் ௮றிஞர் இல்லையா?//ந. தெய்வ சுந்தரம் விடை-----------------------------------------------------------------------நண்பரே, கம்பன் தமிழ்ப் புலவர் என்பதில் ஐயம் இல்லை! அவர் தனக்குப் பிடித்த வால்மீகி எழுதிய புராணக் காப்பியத்தின் கதையைக்கொண்டு, ''கம்பராமாயணம்'' எழுதி, தமிழ்ப்படைப்புலகத்தில் ஒரு மிகப் பெரிய சாதனை செய்தார். இதை நான் மறுக்கவில்லை! அவரது படைப்பு ஒரு மிகச் சிறந்த ''தமிழ்ப்...
திங்கள், 24 அக்டோபர், 2022
''நரகாசுரன்'' பற்றிய ஒரு கருத்து!
''நரகாசுரன்'' பற்றிய ஒரு கருத்து!---------------------------------------------------------------------------------------------------------------------------புராணத்தில் நீடிக்கிற நரகாசுரன் உண்மையில் இருந்திருந்தால் . . . அவரைக் கொன்ற ''கடவுளும்'' இருந்திருக்கவேண்டும்! காப்பியங்களில் நீடிக்கிற ''இராவணன்'' இருந்திருந்தால் ''இராமனும்'' இருந்திருக்கவேண்டும்! ''அசுரர்கள்'' இருந்திருந்தால்''தேவர்களும்'' இருந்திருக்கவேண்டும்!ஆனால் அவ்வாறு இருந்ததற்கான எவ்வித வரலாற்றுச் சான்றுகளும் கிடையாது! இந்த இரண்டு வகையான புராணப்படைப்புக்களுமே கற்பனைப் படைப்புக்கள்தான்! இரண்டு எதிர்மறையான புராணக் ''கதாநாயகர்கள், வில்லன்கள்" ஆகிய இரண்டு தரப்பினரும் இரண்டு எதிர்மறையான கற்பனை ''தத்துவங்களின்'' - '' உலகக் கண்ணோட்டங்களின்'' - ''வர்க்க நலன்களின்'' எதிரொளிப்புக்கள்தான்!''இராமனுக்குக்'' கோயில் கட்டுவதும், ''இராமநவமியைக்''...
வெள்ளி, 21 அக்டோபர், 2022
''ஆட்சிமொழிச் சிக்கலில் 'பெரும்பான்மை ஜனநாயகம்' பற்றி ''
''பெரும்பான்மை'' என்ற ''ஜனநாயகத் தீர்வு நடைமுறையை'' எந்தச் சிக்கலுக்குப் பின்பற்றமுடியும்? - நண்பர் திரு. மாலன் அவர்களுக்கு எனது விடை!
--------------------------------------------------------------------------------------------------------------------------
மொழி
ஒப்பீட்டு ஆய்வுபற்றிய எனது முகநூல் பதிவு பற்றி நண்பர் திரு. மாலன் அவர்கள் தனது
கருத்துக்களை தெளிவுபடுத்தியுள்ளார். அவருக்கு நன்றி. அவற்றில் நான் வேறுபடுகிற
கருத்துபற்றி இங்கு கூறுகிறேன்.
திரு. மாலன்
அவர்கள் :
--------------------------------------------------------------------------------------------------------------------------
//தெளிவான
கருத்துக்கள். இவற்றை நான் இவ்விதம் தொகுத்துக் கொள்கிறேன்: 1. ஒப்பீட்டு ஆய்வுகளின் அடிப்படையில் எந்த
மொழியும் இன்னொரு மொழியைவிட உயர்ந்ததும் இல்லை; தாழ்ந்ததும் இல்லை. 2. ஒரு மொழியின்...
வியாழன், 20 அக்டோபர், 2022
மொழி ஒப்பீட்டு (தமிழ் - வடமொழி, இந்தி, ஆங்கிலம்) ஆய்வுபற்றி எனது கருத்து!
மொழி ஒப்பீட்டு (தமிழ் - வடமொழி, இந்தி, ஆங்கிலம்) ஆய்வுபற்றி எனது கருத்து!----------------------------------------------------------------------------------------------------------------------எனது தாய்மொழியாகி தமிழ்மொழி (1)மிகத் தொன்மை வாய்ந்தது! (2) வரலாற்றுத் தொடர்ச்சியுள்ள மொழி! (3) இன்றும் தொடர்ந்து வளர்ச்சியடைந்து- கொண்டிருக்கிற மொழி! (4) தொன்மை இலக்கியத்தில் இருந்து செவ்விலக்கியம்முதல் இன்றைய இலக்கியம் -வரை அனைத்திலும் தன்னை நிலைநிறுத்தியுள்ள மொழி! (5) இன்றும் தமிழ் இனத்தின் அனைத்துக் கருத்தாடல் செயல்பாடுகளுக்கும் தகுதிபெற்ற மொழி!இவ்வாறு ஒவ்வொரு மொழிச் சமுதாயமும் தனது இனத்தின் மொழிபற்றிய சிறப்பை உணர்ந்து மகிழவேண்டும்! தனது மொழியின் தொடர்ந்த வளர்ச்சிக்குத் தேவையான பணிகளை மேற்கொள்ளவேண்டும்!இது ஒருபுறம் இருக்கட்டும்!மொழி ஒப்பீட்டு ஆய்வு (Comparative Linguistics) என்பது மொழி ஆய்வில்...