வெள்ளி, 29 மே, 2020

கணினித்தமிழ் வளர்ச்சிக்குத் தமிழ் இலக்கண அறிவும் மொழியியல் அறிவும் தேவையா?

கணினித்தமிழ் வளர்ச்சிக்குத் தமிழ் இலக்கண அறிவும் மொழியியல் அறிவும் தேவையா? ( தமிழ் , மொழியியல் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்களுக்கான பதிவு)-------------------------------------------------------------------------------- இன்று இயற்கைமொழி ஆய்வு, கணினிமொழியியல், மொழித்தொழில் நுட்பம் ஆகிய துறைகள் முக்கியத்துவம் பெற்றுவருகின்றன. கணினிக்கு மனித இயற்கைமொழிகளின் அறிவை அளித்து, அதனோடு நாம் நமது இயற்கைமொழிகளில் உரையாடலாமா? எழுத்துமூலம் உரையாடல், பேச்சுமூலம் உரையாடல் இரண்டிலும் நமது மொழிகளைப் பயன்படுத்தமுடியுமா? என்ற வினாக்கள் முன்வைக்கப்பட்டு, 'முடியும்' என்ற விடையும் தரப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்கே விண்கலங்களை மிகத் துல்லியமாக நேரம், பிற இயற்கைவிசைகள் ஆகியவற்றைக் கணித்து அனுப்பும்போது, மொழியைக் கணினிக்குப் புரியவைக்கமுடியாதா? நிச்சம் முடியும் ! ஐயமே இல்லை! வேறு கிரகங்களுக்கு ஏவுகணைகளையும்...

வியாழன், 28 மே, 2020

பேராசிரியர் சி. இலக்குவனார்

தமிழ்ப்பணி என்பது தமிழாய்வு, தமிழ்க்கல்வி என்பதோடுமட்டும் நின்றுவிடாமல்... தமிழ்மொழிக்கு எதிரான... தமிழினத்திற்கு எதிரான எந்த ஒரு ஆதிக்க நடவடிக்கையாக இருந்தாலும் சரி... அதனையும் எதிர்த்துநின்று செயல்பட வேண்டும் என்பதைத் தமிழாசிரியர்களுக்கு உணர்த்திய பெரும்பேராசிரியர்... தமிழ்ப்போராளி பேரா. சி. இலக்குவனார் அவர்கள். அவர்கள்பற்றி நான் 5 ஆண்டுகளுக்குமுன் மிகச் சுருக்கமாக பதிவுசெய்த ஒன்றை மீள்பதிவாக இன்று இடுவதில் பெருமையடைகிறேன்... பேராசிரியர் சி. இலக்குவனார் (1909) … நாடறிந்த தமிழறிஞர். தமிழ்ப்பணி என்பது வெறும் ஆய்வுகள் மட்டுமல்ல, தமிழ்மொழி, இனம் ஆகியவற்றின் நலன்களைக் காப்பதும் அதில் அடங்கும் என்பதைத் தனது வாழ்க்கையில் செயல்படுத்திக்...

பேராசிரியர் . சோ. ந. கந்தசாமி

இலக்கியம், இலக்கணம், தத்துவம் என்று பலதுறை அறிவும் நிரம்பிய ஒரு பெரும்பேராசிரியர் முனைவர் சோ. ந. கந்தசாமி அவர்கள்... 84 வயதை எட்டினாலும், ஆய்வுத்துறையில் இன்றும் தளராமல் பணி செய்துகொண்டிருப்பவர். அவருடைய மாணவர்கள் பலர் இன்று உலகெங்கும் பரவியுள்ளார்கள், அவரைப்பற்றிய எனது 5 ஆண்டுகளுக்கு முந்தைய பதிவை மீள்பதிவு செய்வதில் மகிழ்வடைகிறேன். பேராசிரியர் . சோ. ந. கந்தசாமி (அகவை 79)… Prof. SNK என்று தமிழுலகத்தில் அன்பாக அழைக்கப்படும் பேராசிரியர் . தமிழாய்வு உலகத்திற்குப் பெரிதும் அறிமுகமான தமிழ்ப்பேராசிரியர். தமிழிலக்கியம், மரபிலக்கணம், மொழியியல், தத்துவம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டவர். ஆங்கிலப் புலமையோடு இந்தி. சமஸ்கிருதம், பாலி...

புதன், 27 மே, 2020

கணினிக்கு ஒரு மொழிநடை... நமக்கு ஒரு மொழிநடை...எது சரி?

கணினிக்கு ஒரு மொழிநடை... நமக்கு ஒரு மொழிநடை...எது சரி? ----------------------------------------------------------------------------------- நண்பர் திரு. வேல்முருகன் சுப்பிரமணியன் `அவர்களும் திரு. சிவ சிவா அவர்களும் ஒரு முக்கியமான வினாவை எழுப்பியுள்ளார்கள். அந்த வினா அனைவருக்கும் தேவையான ஒன்று என்று நான் நினைப்பதால் இங்கு அதைப் பதிவு செய்கிறேன். பொருள்மயக்கம் இல்லாதவகையில் ... நாம் பேசினால் ... கணினிக்குப் புரியும் அல்லவா? அதற்குத்தானே இலக்கணம் உள்ளது. ஒரு தொடரில் பயன்படுத்தப்படுகின்ற சொல்களைச் சொல்லிலக்கணத்தை முறையாகப் பின்பற்றி எழுதினால் சிக்கல் இல்லையே என்று நண்பர் வேல்முருகன் சுப்பிரமணியன் அவர்கள் எண்ணுகிறார்களோ என்று நான் கருதுகிறேன்(நான் தவறாகப் புரிந்து இருக்கலாம். ) இதில் எனக்கு உடன்பாடுதான். ஆனால் இவ்வாறு யாரையும் நாம் கட்டுப்படுத்தமுடியாதே!. மேலும் இலக்கணத்தை முறையாகக் கற்றவர்களைத்தவிர...

திங்கள், 25 மே, 2020

இயற்கைமொழி ஆய்வு ( Natural Language Processing - NLP)

இயற்கைமொழி ஆய்வு ( Natural Language Processing - NLP) கணினிமொழியியல்( Computational Linguistics) , மொழித்தொழில்நுட்பம் ( Language Technology) -------------------------------------------------------------------------------------- இயற்கைமொழி ஆய்வு என்பதுபற்றி ஒரு சிறிய விளக்கத்தை அளிக்கும்படி எனது நண்பர் பேராசிரியர் அ. சங்கரசுப்பிரமணியம் அவர்கள் கேட்டிருந்தார்கள். அதனடிப்படையில் இப்பதிவை இடுகிறேன்.... பெரும்பாலும் நாம் உருவாக்குகிற தொழில்நுட்பக் கருவிகள் அல்லது சாதனங்கள் நமது உடல் உறுப்புகளின் செயல்பாட்டுத் திறன்களை மேலும் மேலும் வளர்த்தெடுக்க உதவுகின்றன. கைகள், கால்கள், கண்கள், காதுகள், வாய், தலை ஆகியவற்றிற்கு உதவுவதற்காகவும் அவற்றின் திறன்களைக் கூட்டுவதற்காகவும் திருகி (ஸ்க்ரூ டிரைவர்) , ஈருளி (சைக்கிள்), தானிகள் ( ஸ்கூட்டர், பைக், சிற்றுந்து, பேருந்து, வானூர்தி, கப்பல்) ) , கண் கண்ணாடிகள்,...

சனி, 23 மே, 2020

பேராசிரியர் மு. இராமசாமி

பேராசிரியர் மு. இராமசாமி அவர்கள் எனது 50 ஆண்டுகால நண்பர். முதுகலை (தமிழ்) படிப்பில் இணைந்து படித்தோம். அவரைப்பற்றி 5 ஆண்டுகளுக்குமுன்பாக நான் எழுதிய பதிவை இங்கு மீள்பதிவு செய்கிறேன். அன்றும் இன்றும்... தனது பண்பிலும் நேர்மையிலும் யாராலும் குறைகாணமுடியாத ஒரு மனிதர். தான் எடுத்துக்கொண்ட துறையில் - நாடகத்துறையில் - இமாலய சாதனை புரிந்துவருபவர். சமூக உணர்வுள்ள அறிஞர். மிக மிக எளிமையானவர். எதற்கும் அஞ்சாதவர். சுயநலம் என்றால் என்னவென்று தெரியாத ஒருவர். பாளையங்கோட்டை தூயசவேரியர் கல்லூரியில் தமிழ் முதுகலை (1971-1973) படிப்பிலிருந்து எங்களது நட்பு தொடங்கி, தற்போது 45 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. . மதுரைப் பல்கலைக்கழகத்தில் பேரா. முத்துச்சண்முகம் அவர்களிடம்...

வெள்ளி, 22 மே, 2020

பேரா. சு. சுசீந்திரராஜா

பேரா. சு. சுசீந்திரராஜா அவர்களை நான் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது இல்லை. ஆனால் அவரது மொழியியல் ஆய்வுபற்றி நிறையவே கேட்டுள்ளேன். இலங்கையைச் சேர்ந்த அவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் பயின்றவரே. மூத்த மொழியியல் அறிஞர். இன்று நம்மிடையே இல்லை. அவரைப்பற்றி நான் சேகரித்த தகவல்கள் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்குமுன் நான் முகநூலில் இட்ட பதிவை மீள்பதிவு செய்வதில் மிக்க மகிழ்வடைகிறேன். பேரா. சு. சுசீந்திரராஜா (1933) … இலங்கையின் மிகச் சிறந்த தமிழ் மற்றும் மொழியியல் பேராசிரியர். இலங்கையில் பள்ளிக்கல்வி பெற்று, தமிழார்வத்தினால் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேரா. மு.வ. அவர்களின் தலைமையில் இருந்த தமிழ்த்துறையில் பி. ஏ. (ஹானர்ஸ்)...

வியாழன், 21 மே, 2020

பேராசிரியர் க. கைலாசபதியின் வெற்றிக்குப் பின்புலம்....

பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் ஆய்வு வெற்றியின் பின்புலம்....------------------------------------------------------------------------------------------------------------------- பேராசிரியர் கைலாசபதி அவர்களின் ஆய்வுகளைப் படித்தபிறகுதான் இலக்கிய ஆய்வை எவ்வாறு சமூக, வரலாற்று, பொருளாதாரப் பின்னணியுடன் அணுகவேண்டும் என்பதை நான், பேரா. கேசவன் உட்பட பலரும் தெரிந்துகொண்டோம். அவரைத் தொடர்ந்து, பேரா. க. சிவத்தம்பி அவர்கள். இருவருக்கும் தமிழாய்வுலகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது இருவருக்கும் முனைவர் பட்ட வழிகாட்டி பர்மிங்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் தாம்சன் ( George Thomson). கிரேக்க இலக்கியங்களைச் சமூகப் பார்வையில் ஆய்ந்தவர். அனைவரும் போற்றும் ஒரு மிகப் பெரிய மார்க்சியச் சிந்தனையாளர். கிரேக்கச் சமுதாயம்பற்றிய அவரது ஆய்வு (Studies in Ancient Greek Society - 1949-1955) உலக அளவில் அனைவராலும்...

பேராசிரியர் க. கைலாசபதி

பேராசிரியர் க. கைலாசபதி ... தமிழ் இலக்கிய ஆய்வை ஒரு மிகச்சிறந்த உயரத்திற்கு இட்டுச் சென்ற ஆய்வாளர். வெறும் இலக்கியச் சுவைக்கான ஆய்வு... இரசனைக்கான ஆய்வு என்று இருந்த தமிழாய்வை .... சமூகவியல் துறையோடு இணைத்து.... தமிழ் இலக்கியங்களின் உள்ளடக்கங்களையும் வடிவங்களையும் உத்திகளையும் இணைத்துப் பார்த்த ... தமிழாய்வைச் சரியான திசையில் திருப்பிய ஆய்வாளர். என்னைப் போன்றவர்களுக்கெல்லாம் தமிழ் இலக்கிய ஆய்வில் ஆர்வம் கொள்ள வைத்த பெரும் பேராசிரியர். 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரைப்பற்றி நான் எழுதிய பதிவை மீண்டும் மீள்பதிவாக இடுவதில் மகிழ்வடைகிறேன். பேரா. க. கைலாசபதி ...தமிழ் இலக்கிய ஆய்வுலகிலே தனக்கென்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றவர். தமிழ் இலக்கிய ஆய்விலே...

கொரோனா - இயற்கை நிகழ்வா ? விபத்தா?

கொரோனா - இயற்கை நிகழ்வா ? விபத்தா?-------------------------------------------------------------------------------------- கொரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்பு ... ஒரு இயற்கை நிகழ்வா அல்லது விபத்தா? ஒரு பொருள் அல்லது நிகழ்வில் ஏற்படுகிற மாற்றம் ... அதற்கு உள்ளேயே உள்ள அகக் காரணிகளால் (internal forces ) ஏற்பட்டால், அது ஒரு இயற்கை நிகழ்வே ஆகும். இந்த மாற்றமானது ஒரு அவசிய நிகழ்வாக ( Necessity) அமைகிறது. அவ்வாறு இல்லாமல் .... அப்பொருளுக்கு அல்லது நிகழ்வுக்கு வெளியே உள்ள புறக்காரணிகளால் (external forces) ஏற்பட்டால் அது விபத்து (Accident) ஒருவர் பிறந்து, வாழ்ந்து, தனது முதுமையில் இறப்பது என்பது ஒரு அவசிய நிகழ்வு. பொதுவாக 120 வயதுக்குமேல் மனிதர்கள் உயிருடன் வாழ்ந்ததாகத் தெரியவில்லை. ஒன்றிரண்டு மனிதர்கள் சற்று இன்னும் ஒன்று அல்லது இரண்டு வயது கூட வாழ்ந்து இருக்கலாம். கருவில் தோன்றிய உயிரியல் இயக்கம்...

புதன், 20 மே, 2020

பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன்

பேராசிரியர் ச.வே.சு. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பேராசிரியரின் தமிழ்ப்பணிபற்றி ... தன் இறுதிமூச்சுவரை தமிழுக்காவே செயல்பட்ட பேராசிரியர்பற்றி.. நான் 5 ஆண்டுகளுக்குமுன்பு இட்ட முகநூல் பதிவை இன்று மீள்பதிவாக இங்கு இடுகிறேன். தனிப்பட்டமுறையிலும் என் ஆய்வு வாழ்க்கைக்குத் திசைகாட்டிய பேராசிரியர் அவர்கள். நான் முதுகலைப் பட்டங்களைப் (தமிழ், மொழியியல்) பெற்றபிறகு, வேலை தேடி சென்னைக்கு வந்தபோது (1975) ... பேராசிரியர் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர். முனைவர் பட்டத்திற்கான ஆய்வை அந்த நிறுவனத்தில் தொடங்க அப்போதுதான் பல்கலைக்கழக இசைவைப் பெற்றிருந்தார். எனக்கு அவர் அளித்த அறிவுரை .. '' வேலை இப்போது...

பேராசிரியர் ஆர். தாமோதரன் (அறவேந்தன்)

பேராசிரியர் ஆர். தாமோதரன் (16-10-1966) என்ற அறவேந்தன்...தற்போது டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர்! அண்மையில்தான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது புலமையை நான் நேரில் கண்டு வியப்படைய கிடைத்த ஒரு வாய்ப்பு அது! 54 வயதுதான். ஆனால் தமிழாய்வுத் துறையில் அவர் செய்திருக்கும் சாதனைகளின் பட்டியல் மிக நீள்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் மயிலம் தமிழ்க் கல்லூரியில்  பி லிட் படித்த அவர், பின்னர் பாண்டிச்சேரி நடுவண் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டமும் எம் ஃபில் பட்டமும் பெற்றிருக்கிறார். பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியர் இராசாராம் அவர்களின் வழிகாட்டுதலில் ஒப்பிலக்கணத்தில்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India