திங்கள், 27 ஏப்ரல், 2020

மனநோய்களுக்கு எதிரான தடுப்பாற்றல் ( mind immunology system)

மனநோய்களுக்கு எதிரான தடுப்பாற்றல் ( mind immunology system) ------------------------------------------------------------------------------------------------------------------------------------------ இன்று உலகில் ... வளர்ச்சியடையாத நாடுகளில் மக்களுக்குத் தங்களது வாழ்க்கைச் சூழல் காரணமாக.... மன உளைச்சலே அதிகம் என்பதும் எனவே பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் எல்லாம்.. மன உளைச்சலைப் போக்குவதற்கான மருந்துகள் (Psychosomatic drugs) என்ற பெயரில் ஏராளமான மனநோய் மருந்துகளை ( anti-anxiety, anti-depression, anti-insomnia ) உருவாக்கி, அந்த நாடுகளுக்கு விற்றுக் கொள்ளைலாபம் அடித்துவருகிறார்கள் என்பதையே ஆய்வுகள் கூறுகின்றன. எனவே , மக்களிடையே பீதிகளையும் பயத்தையும் மன உளைச்சலையும் உருவாக்குவதே அந்த நிறுவனங்களின் சந்தைக்கான '''மூலதனம்'' என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதை முறியடிக்கும் பணியை நாம் தொடர்ந்து...

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

அரசு மருத்துவத் துறையும் தனியார் (பன்னாட்டு) மருத்துவப் பெருநிறுவனங்களும்! (பகுதி 1)

அரசு மருத்துவத் துறையும் தனியார் (பன்னாட்டு) மருத்துவப் பெருநிறுவனங்களும்! (பகுதி 1)---------------------------------------------------------------------------------- இன்று நாடெங்கும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சூழலில்.... மிகப் பெரிய தனியார் மருத்துவமனைகள் எந்த அளவு மக்களுக்கு உதவுகின்றன என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால்.... பதில் கிடைக்கவில்லை! சாதாரணவேளைகளில் தனியார் மருத்துவமனைகள் .... தாங்கள் ''உலகத் தரத்திற்கு'' - '' அனைத்து வகையான நவீனக் கருவிகளையும் கொண்டு ... '' மேலைநாடுகளில் மிகவும் சிறப்பான பயிற்சிபெற்ற மருத்துவர்களைக் கொண்டு '' ... எந்த ஒரு நோயையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்று மூலைமுடுக்கெல்லாம் விளம்பரம் செய்கின்றன! 24 X 7 , அதாவது முழுநேரமும் மக்களுக்காகச் '' சேவை செய்கிறோம்'' என்று விளம்பரங்களை வெளியிடுகின்றன!...

சனி, 25 ஏப்ரல், 2020

கொரோனாத் தொற்று நோய் பிரச்சனையில் கவனத்தில் கொள்ளவேண்டியவை

கொரோனாத் தொற்று நோய் பிரச்சனையில் கவனத்தில் கொள்ளவேண்டியவை ------------------------------------------------------------------------------------------------------------------------------- 1) கொரோனா வைரசு தொற்று ஒருவருக்கு ஏற்படுவதாலேயே , அவருடைய உடல்நிலை தீவிரமாகப் பாதிக்கப்பட்டு ... நுரையீரல் பாதிக்கப்பட்டு, மூச்சியக்கமே முழுமையாகப் பாதிக்கப்பட்டு உயிரிழப்பில் சென்று முடியும் என்று நினைப்பது சரியல்ல. மாறாக, அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அந்த வைரசை எதிர்த்துப் போராடி , அந்த வைரசின் தொற்றிலிருந்து அவர் விடுதலை அடையலாம். 2) அடுத்து, அந்த நபர் தொற்று என்று தெரிந்தவுடனேயே மருத்துவர் கண்காணிப்புக்குச் சென்றுவிட்டால், அவருடைய உடல் எதிர்ப்பு ஆற்றலுக்குத் துணையாக, பிற மருத்துவ உதவிகளை மருத்துவர் அளித்து, அவரை அத்தொற்றிலிருந்து காப்பாற்றலாம். இதுவே தற்போது பெரும்பாலும் நடைபெறுகிறது. அதாவது,...

கணினிவழியாகத் தமிழ்ப்புணர்ச்சி

கணினிவழியாகத் தமிழ்ப்புணர்ச்சி ----------------------------------------------------------- தமிழ்ப் புணர்ச்சி விதிகள் ... ஒலியனியல் (எழுத்தியல்), உருபனியல்( சொல்லியல்), தொடரியல், பொருண்மையியல் ஆகிய நான்கு இயல்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்த எழுத்துக்கு அடுத்து இந்த எழுத்து வந்தால் என்பதைப்பற்றிமட்டும் பொறுத்தது இல்லை. நமது இலக்கண ஆசிரியர்கள் இதைத் தெளிவாக உணர்ந்துதான் .... உயிர் + உயிர், உயிர் + மெய், மெய்+உயிர், மெய் + மெய் என்று மட்டும் சொல்வதோடு நிறுத்தாமல், நிலைமொழிச் சொல்லின் இலக்கணவகைப்பாடு என்ன, வருமொழிச் சொல்லின் இலக்கணவகைப்பாடு என்பதையும் ( பெயரா, வினையா, வினையெச்சமா, எந்தவகையான வினையெச்சம், வினையடையா, பெயரடையா, பெயரெச்சமா) , இரண்டு சொல்களுக்கு இடையேயுள்ள உறவு வேற்றுமை உறவா அல்லது வேற்றுமை அல்லாத அல்வழி உறவா என்பதையெல்லாம் பார்க்கவேண்டும் என்று கூறிச்சென்றுள்ளார்கள். குற்றியலுகரப்...

தமிழின் சொல் அமைப்பு விதிகளின் சிறப்பு...

தமிழின் சொல் அமைப்பு விதிகளின் சிறப்பு... -------------------------------------------------------------- என்னைப் பொறுத்தவரையில் தமிழ்மொழியின் சொல்லமைப்பு மிக மிகத் தெளிவான கணிதவிதிகளைக் கொண்டிருக்கின்றன. கூட்டுச்சொல்கள் - பெயர்த்தொகை, கூட்டுவினைகள் போன்றவை - தங்களது அமைப்பில் மொழியின் பொருண்மையையும் சொல்லாக்க விதிகளையும் அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன. எனவே தமிழ்ச்சொல்லின் மொழியசை, சொல்லில் தலைச்சொல்லும் விகுதிகளும் வருகின்ற முறை , அடிச்சொல், விகுதிகள் ஆகியவற்றின் பொருண்மை, செயல்பாடு ஆகியவை எல்லாம் தமிழ் அமைப்பின் கணிதத்தன்மையை வெளிக்காட்டி நிற்கின்றன. இவற்றில் பல விதிகள் உலகப் பொது விதிகளாகவும் இருக்கின்றன என்பது வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உரியது ஆகும். ஒரு எடுத்துக்காட்டு..... ஒரு பெயர்ச்சொல்லோடு பன்மை விகுதியும் வேற்றுமை விகுதியும் சேரும்போது, பன்மைவிகுதிக்குப்பிறகுதான் வேற்றுமை...

வியாழன், 23 ஏப்ரல், 2020

வரவேற்கவேண்டிய தமிழ் நாடு அரசின் 'ஆரோக்கியம்'' திட்டம்!

வரவேற்கவேண்டிய தமிழ் நாடு அரசின் 'ஆரோக்கியம்'' திட்டம்! ----------------------------------------------------------------------------------------------------------------------------- மக்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கூட்டுவது ... கொரோனாத் தொற்றுக்கு எதிரான இன்றைய போராட்டத்தில் முக்கியமானது என்ற கருத்தை இன்று தமிழ்நாடு அரசு முன்னிலைப்படுத்துவது வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும். பன்னாட்டு நிறுவனங்களின் லாபநோக்கைமட்டுமே கொண்ட மருந்துகளைமட்டுமே சார்ந்திருக்காமல்... எவ்வாறு மக்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கூட்டலாம் என்று சிந்திப்பது நல்லதுதானே! இதை எவ்வாறு கூட்டுவது என்பதில் வேறுபாடுகள் இருக்கலாம். அது வேறு! கபசுர நீர், நிலவேம்பு நீர் போன்றவை மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்ற கருத்து நிச்சயமாக வரவேற்கப்படவேண்டியதே ! இன்றைய நவீன மருத்துவம் வளர்ச்சியடைவதற்குமுன்னால்... மக்கள் இதுபோன்ற நோய்த்தடுப்பு...

கரோனாவின் உள்ளார்ந்த பண்புக்கூறுகளும் அதன் வெளிப்பாடுகளும்

கரோனாவின் உள்ளார்ந்த பண்புக்கூறுகளும் அதன் வெளிப்பாடுகளும்------------------------------------------------------------------------------------------------------------------- கோவிட்-19 (கரோனா) வைரஸின் உள்ளார்ந்த பண்புக்கூறுகள் பற்றியும், அதனுடைய வெளிப்பாடு அல்லது எச்சரிக்கைக் கூறுகள்பற்றியும், அதற்கான மருந்துகள்பற்றியும் பல கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதையொட்டி எனது கருத்துகள் சில. சில மருந்துகளைப்பற்றி .... அலோபதி, சித்த, யுனானி, ஆயுர்வேத மருந்துகள் உட்பட சிலவற்றை .... சிலர் கொரனாவுக்கு முன்னிலைப்படுத்துகின்றனர். அவைபற்றிய கருத்துகள் சரியானவையா இல்லையா என்ற விவாதத்திற்கு நான் செல்லவில்லை. அதற்கான மருத்துவ அறிவு எனக்கு இல்லை. ஆனால் ஒன்று.... சில மருந்துகள் சில பிரச்சினைகளுக்கு உடனடியான சில தீர்வுகளைத் தரலாம். அது நல்லதுதான். ஆனால் சிக்கல்.... சில வேளைகளில் அது உள்ளார்ந்த நோயின்...

வழிவழிவந்த மருத்துவமும் அதன் இன்றைய தொடர்ச்சியும்!

வழிவழிவந்த மருத்துவமும் அதன் இன்றைய தொடர்ச்சியும்! -------------------------------------------------------------------------------------------------------------------------------- பல நூற்றாண்டுகளாக மனிதசமுதாயம் பயன்படுத்திவந்த சித்த, ஆயுர்வேத, யுனானி போன்ற மருத்துவத்தின் சிறப்புகளை நாம் மறக்கக்கூடாது. மறுக்கக்கூடாது. அதற்கு நான் கூறுகிற காரணம்... நமது இன்றைய மருத்துவ அறிவியல் வானில் இருந்து குதித்தது இல்லை. பல நூற்றாண்டுகளாக மனிதசமுதாயம் உருவாக்கிப் பயன்படுத்திய மருத்துவ அறிவின் தொடர்ச்சிதான். அந்த மருத்துவ அறிவுதான் நமது சமுதாயத்தைப் பாதுகாத்து, இன்றைய நிலைக்குக் கொண்டுவந்துள்ளது. வரலாற்றில் எவ்வளவோ நோய்கள் வந்திருக்கலாம். அவையெல்லாம் எவ்வாறு தீர்க்கப்பட்டன? அன்றைய மருத்துவ அறிவுதானே! எனவே தமது முன்னோரின் மருத்துவ அறிவு ... அறிவுதான் என்பதை மறுக்கக்கூடாது. அதேவேளையில் அதை இன்றைய அடுத்த...

கொரோனா வைரசுபற்றிய தவறான கருத்துகள்

கொரோனா வைரசுபற்றிய தவறான கருத்துகள் -------------------------------------------------------------------------------------- (உலக நலவாழ்வு மையம் - WHO - World Health Organization.) -------------------------------------------------------------------------------------- 1) 5 ஜி அலைபேசி வலைப்பின்னல் வழியாகக் கொரோனா வைரசு பரவும் என்பது உண்மை இல்லை. 2) மிக வெப்பமான காற்று அல்லது வானிலை நிலைமை அல்லது 25 டிகிரி C வெப்பம் ஆகியவற்றில் கொரோனா வைரசு இறந்துவிடும் என்பது உண்மை இல்லை. 3) ஒருவருக்குக் கொரோனா வைரசு தொற்றிவிட்டால், அவர் வாழ்நாள் முழுவதும் அது உடலில் தங்கி- விடும் என்பது உண்மை இல்லை! 4) ஒருவர் 10 விநாடிகளுக்குமேல் தும்மல் அல்லது இருமல் இல்லாமல் மூச்சை அடக்கிக்கொண்டால் , வைரசுத் தொற்றல் இல்லை என்று கொள்ளலாம் என்பது உண்மை இல்லை. 5) மது (ஆல்கஹால்) அதிகமாகக் குடித்தால் கொரோனா தொற்றாது என்பது உண்மை...

கொரோனாத் தொற்று - நம்பிக்கை தரும் விவரங்கள்.

கொரோனாத் தொற்று ... நம்பிக்கை தரும் விவரங்கள்....------------------------------------------------------------------------------------------------------------------------------------ கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்துவருபவர்கள் விகிதம்தான் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. அதாவது, கொரோனா வைரசை எதிர்த்து , மனிதரின் நோய்எதிர்ப்புத் திறன் (human body immune system) நன்றாகவே போராடி வெற்றிபெற்றுவருகிறது. இறந்தவர்களின் வயது, பிற நோய்களின் பாதிப்புகள் , மருத்துவ வசதி போதுமான அளவு கிடைக்காதது ஆகியவற்றைக் கணக்கில்கொண்டால், இறப்புக்கு ஆளாகியவர்கள் விகிதம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. எனவே, மக்கள் இன்றைய ஊடகங்களின், குறிப்பாகத் தொலைக்காட்சிகளின் பீதி கிளப்பும் பரபரப்புச் செய்திகளைப் புறம்தள்ளி, நம்பிக்கையுடன் ... ஆக்கபூர்வமான கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதே இன்றைய தேவை! தடுப்பூசிக்...

தொற்றுநோய்க்கு நிரந்தரத் தீர்வு என்ன?

தொற்றுநோய்களுக்கு நிரந்தரத் தீர்வு என்ன?----------------------------------------------------------------------------------தொற்று நோய்கள் உட்பட அனைத்து நோய்களின் பாதிப்புகளையும் எதிர்த்துப் போராட .... அறிவியல் வளர்ச்சி நிச்சயமாகப் பெரும் அளவு உதவும் என்பதில் ஐயம் இல்லை! ஆனால்.. தற்போதை அரசியல் பொருளாதாரச் சூழலில்... இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு.... மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களையும் மருத்துவமனைகளையும் தங்களது ஏகபோகத்திற்கு உட்படுத்திக்கொண்டு... கொள்ளை லாபம் அடித்துக்கொண்டிருக்கின்றன. மருத்துவக் கல்வியையே லாபம் ஈட்டும் தொழில்நிறுவனங்களாக மாற்றியுள்ளன! மக்களிடையே தேவையற்ற பீதிகளையும் உயிர்ப்பயத்தையும் தங்களது ஊடகங்களின் வழியே உருவாக்கி... அவற்றையும் தங்களது சந்தைக்கான ''மூலதனமாக'' பயன்படுத்துகின்றன! இதுவே உண்மை! . மக்களின் நோய்...

கொரோனாவும் மக்கள் ஒற்றுமையும்

"'உலக மக்களே, ஒன்றிணையுங்கள்'" '' உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்'" (ஏப்ரல் 3, 2020) --------------------------------------------------------------------------------------------------------------------------- இன்று கரோனாவை எதிர்த்து , உலகெங்கும் மக்கள் ... ஒன்றிணைந்து போராடவேண்டிய ஒரு சூழல்! நாடு , இனம் தாண்டி... உலக அளவில் மக்கள் ஒன்றிணையவேண்டுமா, அப்படி ஒரு சூழல் வருமா என்ற வினாவிற்கு இன்று விடை ! ஆம் ஒன்றிணைந்துதான் ஆகவேண்டும்! 1857-இல் காரல் மார்க்ஸ் - எங்கல்ஸ் முன்வைத்த முழக்கம்.... '' உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்' ! இன்று இயற்கையின் மோசமான ஒரு விளைவை --- கரோனா - எதிர்த்து ... போராடி ... வெற்றிபெற 'உலக மக்களே ஒன்றிணையுங்கள்' என்ற முழக்கம் மூலைமுடுக்கெல்லாம் ஒலிக்கிறது! இந்தக் கரோனா மனித சமுதாயத்தை அழித்துவிடமுடியாது. இது ஒரு சவால் என்பதில் ஐயமில்லை. ஆனால் மனித சமுதாயம்...

கொரோனாவும் பொருளாதார நெருக்கடியும் - பகுதி 6

ஊரடங்கு நீடிப்பு ..... வெளிப்படும் அரசியல் பொருளாதாரம்!(ஏப்ரல் 12, 2020) ------------------------------------------------------------------------------------------------------------- ஊரடங்கு நீடிக்கக்கூடாது என்பதில் சாதாரண மக்களைவிட... தொழில் அதிபர்களே உறுதியாக இருப்பார்கள். கணினிநிறுவனங்கள் தங்களுடைய பணிகளை ... பொறியாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே செய்வதற்கு அனுமதிக்கமுடியும். அதிலும் பல சிக்கல்கள் அவர்களுக்கு உண்டு. குறிப்பிட்ட பணிகளை முடித்தால்தான், அந்த நிறுவனங்களின் முதலாளிகள், தாங்கள் சார்ந்துள்ள நுகர்வாளர் நிறுவனங்களிலிருந்து பணம் பெறமுடியும். ஆனால் வீடுகளில் பொறியாளர்களுக்குத் தேவையான இணைய இணைப்பு போன்ற வசதிகள் போதுமானதாக இருக்காது. எனவே அதிக நேரம் பணிசெய்யப் பணியாளர்கள் கட்டாயப்படுத்தபடுகிறார்கள். இது ஒருபுறம். மற்றொரு புறம்... பெரிய ஆலை, பொருள் உற்பத்தி நிறுவனங்கள்.... இந்த நிறுவனங்கள்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India