வினா : ''மார்க்ஸ்
தத்துவம் உலகில் செயல் படுத்தக் கூடிய ஒரு தத்துவமா? அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா?''
விடை:
''புவிஈர்ப்புவிசை பற்றிய அறிவியல்விதி
இன்றைய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏன்
பயன்படுகிறது? புவிஈர்ப்புவிசையை அறிவியலாளர்கள்
உருவாக்கவில்லை. மாறாக அந்த விசை இயற்கையில் இயற்கையாக நிலவுகிறது. அது இயற்கையின்
இயற்கை. அதை அறிவியலாளர்கள் கண்டறிந்தார்கள். அவ்வளவுதான். உருவாக்கவில்லை..
அறிவியலாளர்கள் கண்டறிந்த இந்த விதி இயற்கையில் செயல்படுமா என்று இங்கு கேட்பதற்கே
இடமில்லையல்லவா? .... அதுபோன்றதுதான் காரல்மார்க்சின்
அரசியல்பொருளாதாரம்பற்றிய சமூகவியல் விதிகள். இவற்றை மார்க்ஸ் உருவாக்கவில்லை.
மனித சமுதாயம் தோன்றியதிலிருந்து, தொடர்ந்து
வரலாற்று ஊடே அது எவ்வாறு,
மாறியும், வளர்ந்தும் வருகிறது என்பதைக்
கண்டறிந்தார். அந்தச் சமுதாய வளர்ச்சி விதிகளை அவர் உருவாக்கவில்லை. அவர்
முன்வைக்கிற அரசியல்பொருளாதார விதிகள் சமூகத்தின் இயற்கை... இயற்கைவிதிகள்... அவை
அவரது கற்பனையில் உருவாகியதில்லை.எனவே இன்று மட்டுமல்ல, என்றுமே அவை உலகில் செயல்படுத்தக்கூடிய
கோட்பாடுகள்தான். இதில் எங்கல்ல்ஸ் அவர்களின் பங்கும் உண்டு. அரசியல்பொருளாதார
மாற்றத்தில் ... வளர்ச்சியில் மேலும் பல தெளிவுகள் கிடைக்கும்போது, அதை உள்ளடக்கி, இந்த மார்க்ஸின் கோட்பாடுகளும் மாறும்.
வளர்த்தெடுக்கப்படும். அவ்வாறுதான் லெனின் ஏகாதிபத்தியத்தின் இயக்கத்தைக்
கண்டறிந்தார். தொடர்ந்து ஸ்டாலின், மாசேதுங்
ஆகியோரும் பல நுட்பங்களைக் கண்டறிந்து கூறினார்கள். மார்கிசயக் கோட்பாடுகள்
தனிமனிதர்களின் கற்பனையில் .. அவர்களது விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டு, உருவாக்கப்பட்டவை இல்லை. மாறாக ,சமூகத்தின் இயக்கம்பற்றிய புறவயமான
அறிவியல்''.
மார்க்ஸின்
'' மூலதனம் - முதலாளித்துவ வளர்ச்சிபற்றிய
ஒரு அரசியல் பொருளாதாரம்''
என்ற ஆய்வுநூல், மிகவும் புறவயமாக முதலாளித்துவ
வளர்ச்சிபற்றி அவர் மேற்கொண்ட ஆய்வாகும். மிகவும் குறிப்பிடத்தக்க கூறுகள் ....., வரலாற்றில் ஒரு கட்டத்தில் நிலவுடமைச்
சமுதாயத்தைத் தகர்த்து, புதிதாகத் தோன்றிய முதலாளித்துவமும்
சமுதாய வளர்ச்சியின் ஒரு கட்டமே என்பதும், முதலில்
சமுதாயத்திற்குத் தேவையாகத் தோன்றிய அது, பின்னால்
ஒருகாலகட்டத்தில் சமுதாயத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எவ்வாறு தடையாக அமைந்தது
என்பதையும், அதன் விளைவாக முதலாளித்துவ சமுதாயமும்
சோசலிசமாக அடுத்த கட்ட வளர்ச்சியை அடையும் என்பதையும் அறிவியல்பூர்வமாக அவர்
எடுத்துரைத்தார். மேலும் முதலாளித்துவம் அதன் சொந்த வளர்ச்சியின் விளைவாகவே மிகப்
பெரிய நெருக்கடியை - தவிர்க்க இயலாத நெருக்கடியை- சந்திக்கும் என்பதைக் கணித
அடிப்படையில் தெளிவுபடுத்தினார். மாறா மூலதனத்திற்கும் ( constant capital) மாறும் மூலதனத்திற்கும் ( variable capital - wages to workers) இடையில் உள்ள விகிதத்தின் மாற்றத்தின
விளைவாக, லாப விகிதம் வீழ்ச்சியடைந்து, முதலாளித்துவம் பின்னடவைச் சந்திக்கும்
என்பதை ஒரு கணித வாய்பாடுமூலம் விளக்கினார். இயற்கை அறிவியலாளர்கள் E = mc2 என்ற கணித விதியை அணுவின் உடைப்பில்
ஏற்படும் சக்தியை அளக்க உருவாக்கினார்களோ, அதுபோன்றது
மார்க்ஸ் முன்வைத்த கணினிவிதி. எனவே மார்க்சியம் என்பது அறிவியல் - சமுதாய
அறிவியல் ! அது ஒரு கற்பனையல்ல.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக