வெள்ளி, 29 மார்ச், 2024

இயற்கையின் ஆழிப்பேரலையும் சமுதாயத்தின் புரட்சிகரப் பேரலையும்!

 இயற்கையின் ஆழிப்பேரலையும் சமுதாயத்தின் புரட்சிகரப் பேரலையும் . . . (வேறொரு பதிவில் நான் இட்ட ஒரு பின்னூட்டம் இது!) --------------------------------------------------------------------------------------------------------------- இயற்கையின் உள்ளார்ந்த அமைப்பால் ஏற்படுகிற ஒன்றே ஆழிப்பேரலை. பூகம்பம், எரிமலை, புயல் போன்ற இயற்கை நிகழ்ச்சிகள் எல்லாம் இந்த வகையே.நமது விருப்பு வெறுப்பைப்பொறுத்து அவை இல்லை. அதுபோன்றதே சோசலிச, கம்யூனிசப் பேரலை.  சமுதாய அமைப்பில் உள்ள முரண்பாடுகள் வரலாற்றில் அவ்வப்போது சமுதாய மாற்றத்திற்கான அலைகளை உருவாக்கியே தீரும். அதை யாராலும் தடுக்கமுடியாது. இதைத்தான் காரல் மார்க்சும் பிரடரிக் எங்கல்சும் ஆய்ந்து கூறினார்கள். இது அவர்களின் 'விருப்பு வெறுப்புக்களைச்'' சார்ந்த ஒன்று இல்லை!  இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் சமுதாய நிகழ்ச்சிகளுக்கும் ஒரு வேறுபாடு . . . ஆழிப்பேரலை நிகழ்ச்சியில்...

புதன், 27 மார்ச், 2024

மொழிபற்றி வரவேற்கவேண்டிய பதிவுகள் . . . (2)

 மொழிபற்றி வரவேற்கவேண்டிய பதிவுகள் . . . (2)--------------------------------------------------------------------------//இலக்கியத்தில் இலக்கியப்படைப்பு, இலக்கிய ரசிப்பு, இலக்கிய ஆய்வு என்று பிரிவுகள் இருப்பதுபோல . . . மொழி ஆய்விலும் ஒரு மொழியைத் தெரிந்திருப்பது அல்லது பயன்படுத்துவது வேறு, மொழியைப்பற்றிய ஆய்வை மேற்கொள்வது வேறு; மொழியின் சிறப்பை உணர்ந்து மகிழ்வடைவது வேறு; மொழி உரிமைகளுக்காகப் போராடுவது வேறு. இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதில் ஐயம் இல்லை. ஆனாலும் வேறுபடுத்தியும் பார்க்கவேண்டும் - ஆய்வுநோக்கில்!////எடுத்துக்காட்டாக, அன்பிற்குரிய இராமகி ஐயா அவர்கள் நாம் அயல்மொழிச்சொல் என்று கருதிக்கொண்டிருக்கிற ஒரு சொல் தமிழ்ச்சொல்தான் என்று ஆய்வின் அடிப்படையில் கூறும்போது நான் மகிழ்வடைவேன். அதேவேளையில் அவர் அந்த முடிவை தனது விருப்பத்தின் அடிப்படையில் கூறுகிறாரா அல்லது ஆய்வின் அடிப்படையில்...

மொழிபற்றி வரவேற்கவேண்டிய பதிவுகள் . . . (1)

 மொழிபற்றி வரவேற்கவேண்டிய பதிவுகள் . . . (1)---------------------------------------------------------------------முகநூல் பதிவுகளில் தற்போது மொழிபற்றிய பதிவுகள் மிக அதிகமாகவே வந்துகொண்டிருக்கின்றன. வரவேற்கவேண்டிய ஒரு வளர்ச்சி இது. இந்த வளர்ச்சியை அடுத்த உயர்கட்டத்திற்குக் கொண்டுசெல்ல . . . ஒருவர் தமது பதிவு மொழிதொடர்பானவற்றில் எந்தப் பிரிவில் எழுதுகிறோம் என்பதையும் தெளிவுபடுத்திக்கொண்டு பதிவிட்டால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். ஒரு சில பிரிவுகளைமட்டும் இங்குப் பதிவிடுகிறேன்.1) மொழியைக் கற்பித்தல் (முதல், இரண்டாம், மூன்றாம் மொழி கற்றல் & மொழித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான மொழி கற்பித்தல்) 2) மொழியைக் கற்றல் 3) மொழிப் பயன்படுத்தம்4) ஆட்சிமொழி, பயிற்றுமொழி , மொழி வளர்ச்சித்திட்டம் போன்ற மொழிக்கொள்கை தொடர்பான ஆய்வு5) குறிப்பிட்ட மொழியின் இலக்கணத்தைக் கற்பித்தல்6) குறிப்பிட்ட மொழியின்...

தமிழ்மொழி ஆய்வாளர் ஒருவர் என்னைப்பற்றிக் கூறிய ''பாராட்டுக்கள்'' கீழே . .

 தமிழ்மொழி ஆய்வாளர் ஒருவர் என்னைப்பற்றிக் கூறிய ''பாராட்டுக்கள்'' கீழே . . . -----------------------------------------------------------------------//இந்த வினாவினை எழுப்பியவர்க்கு எல்லா இலக்கணமும் தெரியும். இருந்தும் இவ்வினாவினை வினவுதற்கு பாரிய நோக்கம் உண்டு. தமிழின் நுட்பங்களை ஒழிக்கவேண்டுமென்பதே அந்நோக்கம். அந்நோக்கத்திற்கு அவர் பயன்டுத்தும் கருவி கணிணி; கணிணி தரப்படுத்துதல் (standardization). அவ்வளவே.////தமிழ்ப்பேராசிரியர் இந்த விதியினை அறிந்திருந்தும் ஒழித்துக்கட்டிவிட்டார். ஓரம்பில் ஏழு மராமரங்களைத்துளைத்த இராமபிரான் போல, ஒருவரி வினாவில் இரண்டு விதிகளை ஒழித்துக்கட்டிவிட்டார். என்னே அவர்தம் ஆற்றல். ஒரு சொல் இருந்தாலும் அதனை விட்டுவிடக்கூடாதென அதற்கு ஒரு சூத்திரம்செய்த பவணந்தியாரும், தொல்காப்பியரும் utter waste .////ஒரு வினாவிலேயே இரண்டு விதிகளை ஒழித்ததுப்போல், இன்னுமொரு நூறு வினாக்களை...

Lexeme / Word and Wordform - explanation

 Lexeme / Word and Wordform - explanation-----------------------------------------------------------------------" The basic lexical form found in a dictionary is here called "Lexeme" or "Word". The different inflected forms of a lexeme/word are called "Wordforms". The different wordforms of a lexeme/word belong to a same grammatical category and form its paradigm. Their lexical meaning is same. For example, the different inflected wordforms "go, goes, went, gone, going, to go" form a paradigm for the word "go".Though the basic lexical meaning of the different wordforms belonging to a paradigm is similar, their syntactic distribution / positions are different. The inflectionally variant forms of the same lexeme do not, in general, have the same distribution; and that is the why Syntax...

''சொல்'' என்பதற்கான வரையறை . . .

 ''சொல்'' என்பதற்கான வரையறை . . . -------------------------------------------------------------------------சொற்களை (1) அகராதிச்சொல் (Lexeme / Dictionary Word) , (2) இலக்கணக்கூறு அல்லது இலக்கணப்பண்பு ஏற்ற சொல் (Inflected Form - Wordform) என்று வகைப்படுத்தலாம். அகராதிச்சொல் என்பது பொருண்மையோடு ( lexically- oriented) தொடர்பு உடையது; இலக்கணப்பண்பு ஏற்ற சொல் என்பது தொடரியலோடு (Syntactically- oriented) தொடர்புடையது. அகராதியில் பார்க்கிற பெயர்ச்சொற்கள் அல்லது வினைச்சொற்கள் , சொற்றொடர்களில் பயின்று வரும்போது குறிப்பிட்ட இலக்கணப் பண்புகளை ஏற்றுவரும். அகராதியில் பார்க்கிற 'ஆசிரியர்' என்ற சொல், 'ஆசிரியர் வந்தார்' என்று தொடரில் அமையும்போது 'ஆசிரியர்' என்பது 'எழுவாய்' என்ற இலக்கணப் பண்பைப் பெற்ற சொல்லாகும்.; வெறும் அகராதிச்சொல் இல்லை. தோற்றத்தில் ஒன்றாக இருந்தாலும் இரண்டும் வேறு வேறு. அதுபோன்று 'படி'...

சரியான சொல் எது? எதையாவது ஒன்றைத் தரப்படுத்தவேண்டும்.

 சரியான சொல் எது? எதையாவது ஒன்றைத் தரப்படுத்தவேண்டும். நண்பர்கள் உதவி தேவை! -----------------------------------------------------------------------(1) கருத்துகள் - கருத்துக்கள் ('க்' மிகுமா?)(2) நாள்கள் - நாட்கள் ('ள்' என்பது 'ட்' என்று மாறுமா?)(3) கால்சட்டை - காற்சட்டை ('ல்' என்பது 'ற்' என்று மாறுமா?(4) செயல்படு - செயற்படு ('ல்' என்பது 'ற்' என்று மாறுமா?)(5) ஒருவர் தனது நூல்களை வெளியிட்டார் - ஒருவர் தமது நூல்களை வெளியிட்டார் ('தனது' ? 'தமது'?)(6) ஒரு உயிர் - ஓர் உயிர் ('ஒ' என்பது 'ஓ' என்று மாறுமா?)(7) அவரைப்பற்றி - அவரைப் பற்றி ('பற்றி ' என்ற பின்னொட்டு வேற்றுமை விகுதியோடு இணைந்து வருமா? தனித்து வருமா?)8. என்னால் வரமுடியும் - என்னால் வர முடியும் ('முடியும்' என்ற துணைவினை முதன்மைவினையோடு இணைந்து வருமா? தனித்து வருமா?) (9) நான் போகவேண்டும் - நான் போக வேண்டும்.('வேண்டும்' என்ற துணைவினை...

புதன், 13 மார்ச், 2024

திராவிட இனமும் ஆரிய இனமும்

 திராவிட ஒப்பீட்டுமொழியியலில் ஆழமான ஆய்வுகள் மேற்கொண்டுள்ள மொழியியல் பேராசிரியர் முனைவர் காமாட்சி அவர்களின் ஒரு சரியான பதிவையொட்டி நான் இட்ட ஒரு பதிவு இது. ------------------------------------------------------------------------(1) மூலதிராவிட மொழி என்று ஒன்று உண்டு, (2) அதிலிருந்துதான் பின்னர் 24-க்கும் மேற்பட்ட மொழிகள் தோன்றின, (3) மூலதிராவிடம் பேசியவர்கள் திராவிடர் என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள், (4) எனவே இந்த 24 -க்கும் மேற்பட்ட மொழியைப் பேசுபவர்கள் ஒரே இனத்தை - ''திராவிட இனத்தை''- சேர்ந்தவர்கள் என்று race கருத்து அடிப்படையில் ஏற்றுக்கொள்வது (5) தமிழ்ச் சமுதாய வரலாற்றில் புறவயமாகத் தோன்றி நீடிக்கிற தமிழ்த் தேசிய வகை அல்லது தேசிய இனம் என்பதற்குமேல் ''திராவிட இனம்'' என்ற ''கற்பனை இனம்'' ஒன்றை உயர்த்திப்பிடிப்பது - இவையெல்லாம் மொழியியல் அறிவியலுக்கு அப்பாற்பட்டவை என்பதைத் தாங்கள் தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.அதுபோன்றதுதான்...

வெள்ளி, 8 மார்ச், 2024

இந்திய நாட்டில் தேசிய இனப் பிரச்சினையே இல்லையா?

 நண்பர் திரு. மாலன் அவர்கள்--------------------------------------------------------------------------' தேசிய இனப் பிரச்சினை முக்கியத்துவம் பெற்றுள்ள கால கட்டம் இது' எங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது? தமிழ் நாட்டிற்கு வெளியே எங்காவது தேசிய இனம் பற்றிய விவாதங்கள், முழக்கங்கள், செயல்பாடுகள், உண்டா? திராவிடம் என்பது ஓர் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல். கால்டுவெல் உட்பட அந்த அடிப்படையில்தான் பேசுகிறார்கள். ஒரு வாக்கு வங்கியைக் கட்டமைக்க அரசியல்வாதிகள் உருவாக்கிய கருத்தியல் இது. இன்று நேற்றல்ல, இந்தியா முழுவதிலும் ஒரே விதமான விழுமியங்கள், பண்பாடுக்க் கூறுகள்தான் இருந்தன. சங்க இலக்கியங்கள் சாட்சி.ந. தெய்வ சுந்தரம்--------------------------------------------------------------------------இந்திய நாட்டில் தேசிய இனப் பிரச்சினையே இல்லை என்று தாங்கள் கருதுவது பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டது...
&nb...

மொழிக்குடும்பம், இனம் பற்றிய ஆராய்ச்சிக்கும் சமுதாய அமைப்பில் நீடிக்கிற வர்க்க நலன்களுக்கும் இடையில் உறவுகள் உண்டா?

 மொழிக்குடும்பம், இனம் பற்றிய ஆராய்ச்சிக்கும் சமுதாய அமைப்பில் நீடிக்கிற வர்க்க நலன்களுக்கும் இடையில் உறவுகள் உண்டா?-------------------------------------------------------------------------------------------------------மொழிக் குடும்பம் பற்றிய ஆராய்ச்சி வளர்ச்சிக்கும் 18,19 ஆம் நூற்றாண்டுகளில் நிலவிய முதலாளித்துவ வளர்ச்சி, காலனித்துவ நீடிப்பு, அப்போது பல முதலாளித்துவ நாடுகளின் மதமாக நீடித்த கிறித்தவ மதம் ஆகியவற்றிற்கும் இடையில் உள்ள உறவுகள் ஆகியவைபற்றிய மிக ஆழமான ஆய்வு தேவை.இப்படிப்பட்ட ஒரு ஆய்வின் அடிப்படையில்தான் ஆரிய மொழிக்குடும்பம், இந்தோ- ஐரோப்பிய மொழிக்குடும்பம், திராவிட மொழிக்குடும்பம் போன்ற மொழிக்குடும்பங்கள்பற்றியும் ஆரிய இனம், திராவிட இனம் போன்றவைபற்றியும் தெளிவான முடிவுகளுக்கு வரமுடியும். வெறும் உணர்ச்சி அடிப்படையிலும் விருப்பு வெறுப்பு அடிப்படையிலும் மொழிக்குடும்பங்கள், அவற்றின்...

திராவிடம்பற்றிய பிரச்சினை ஏன் சூடு பிடிக்கிறது?

 நண்பர் திரு மணி மணிவண்ணன்--------------------------------------------------------------------------------------------------------இவை ஏன் கால்டுவெல்லுக்குப் பின் நூறாண்டுகள் கடந்து இப்போது எழுகின்றன, சூடாகின்றன? இதன் அரசியல் என்ன? இதன் நட்பு அணிகள், பகையணிகள் எவை? பெயர் மாற்றத்தால் என்ன விளையும்? தற்பெருமை, சாதிப்பிணக்கு இவற்றில் எவ்வளவு தாக்கம் செலுத்துகின்றன?ந. தெய்வ சுந்தரம்-------------------------------------------------------------------------------------------------------தேசிய இனப் பிரச்சினை முக்கியத்துவம் பெற்றுள்ள காலகட்டம் இது. ஆகவே ''திராவிடம்'' பற்றிய பிரச்சினை சூடுபிடிக்கிறது. ''தமிழ்த் தேசிய இனம் (Tamil Nationality) '' என்பதற்கான பொருளாதாரம், மொழி, பண்பாடு, நிலவியல் (பூகோளம்) , அரசியல் புறவயமாக நீடிக்கின்றன. அதாவது புறவயமான கூறுகளைப் பிரதிபலிக்கிற ஒரு கருத்து.''திராவிடம்''...

மொழிக்குடும்ப (language family) ஆய்வும் இன (race) ஆய்வும்!

 மொழிக்குடும்ப (language family) ஆய்வும் இன (race) ஆய்வும்!------------------------------------------------------------------------------------------------------------------------மொழிக்குடும்ப ஆய்வு ஒரு புறம் இருக்கட்டும். வேறு சில ஐயங்கள். (1) மொழிக்குடும்ப ஆய்வை இன அடிப்படைக்கான (racial ) ஆய்வாகக் கொள்ளலாமா? (2) உடலமைப்பு, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை இனமாகப் ( Race) பிரிக்கலாமா? (3) மரபணு ஆய்வில் (Genetics) இன வேறுபாட்டை வெளிப்படுத்தும் மரபணுக்கூறு (Genes) இருக்கிறதா? (4) உடம்பின் வலிமை. நிறம், முடி , உயரம் போன்றவற்றைக்கொண்டு "இனவேறுபாடுகளை" விளக்குவதை அறிவியல் ஏற்றுக்கொள்கிறதா? (5) மேற்கூறிய வேறுபாடுகளுக்கு ஒருவர் வாழும் இடத்தின் தட்பவெட்பம், கிடைக்கும் உணவுப்பொருள்கள், உ.ழைப்பின் பண்பு ( வேட்டையாடுதல், தானிய உற்பத்தி செய்தல் போன்ற பிரிவினைகள்) போன்றவை காரணமா? (6) மொழிக்குடும்ப...

ஞாயிறு, 3 மார்ச், 2024

மயிற்றோகை? மயில்தோகை? எது சரி?

'இலக்கணம்' என்ற முகநூற்குழுவில் முன்வைக்கப்பட்ட ஒரு கருத்து. மற்றவர்களுக்கும் பயன்படலாம் எனக் கருதி அதை இங்கே பதிவிடுகிறேன்.நண்பர் திரு. ஜெகதீசன் முத்துக்கிருஷ்ணன்----------------------------------------------------------------அரைக்கிணறு தாண்டாதே .=========================கல் + கண்டு = கற்கண்டுகல் + சிலை = கற்சிலைபல் + பொடி = பற்பொடிஎன்று புணரும் . ஆனால் ,நல் + திணை = நற்றிணைநல் + தமிழ் = நற்றமிழ்கல் + தூண் = கற்றூண்என்று புணரும் . வருமொழி முதலில் தகர இனவெழுத்துக்கள் வந்தால் , அது றகரமாகவோ , றகர இனவெழுத்துக்களாகவோ மாறும்.மயில் + தோகை = மயிற்றோகைஎன்றே எழுத வேண்டும் . மயிற்தோகை என்று எழுதுவது , அரைக்கிணறு தாண்டுவதற்கு ஒப்பாகும் . அதற்குப் பதிலாக " மயில்தோகை " என்று எழுதுவதே நன்று .ந. தெய்வ சுந்தரம்-------------------------------------------------------------------------மிகச் சரியான எடுத்துக்காட்டுக்கள்....

செய்யறிவுத் திறனும் ( Artificial Intelligence AI) தமிழும் . . . ''உலகத் தாய்மொழி நாளையொட்டி'' நான் வலியுறுத்தும் ஒரு கருத்து

 செய்யறிவுத் திறனும் ( Artificial Intelligence AI) தமிழும் . . . ''உலகத் தாய்மொழி நாளையொட்டி'' நான் வலியுறுத்தும் ஒரு கருத்து . . . இதைப் படித்துவிட்டு நண்பர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறும்படி அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்! -----------------------------------------------------------------------செய்யறிவுத்திறன் மென்பொருள்கள் - குறிப்பாக, சேட் ஜிபிடி (Chat GPT) - ஆங்கிலத்திற்குச் சிறப்பாகப் பயன்படுகின்றன. ஆனால் தமிழ்மொழிக்குச் சிறப்பாகச் செயல்படவில்லையே? ஏன்?இந்த வினாவைச் சேட் ஜிபிடி -க்கே முன்வைத்து, பதில் எதிர்பார்த்தேன். என்னைப் பொறுத்தவரையில் ஆங்கிலமொழிக்கான தரவுகள் (data / corpus) கோடியே கோடியே (trillions) கிடைத்துள்ளன; ஆனால் அத்துடன் ஆங்கிலமொழியின் நுட்பங்கள் (nuances) - குறிப்பாகப் பல்வேறுவகைப்பட்ட கருத்தாடல்கள் (discourses) அமைப்புக்கும் ஆங்கிலத் தொடர் அமைப்புக்கும் (Sentence structure...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India