எனது மொழிக்கொள்கை (6)
ஞாயிறு, 16 அக்டோபர், 2022
எனது மொழிக்கொள்கை (6)
எனது மொழிக்கொள்கை (5) . . . எனக்குள்ள ஐயம் . . .
எனது மொழிக்கொள்கை (5) . . . எனக்குள்ள ஐயம் . . .
சனி, 15 அக்டோபர், 2022
எனது மொழிக்கொள்கை (4)
எனது
மொழிக்கொள்கை (4)
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய
அரசியல் சட்டத்தில் இந்திமொழிக்கு மட்டுமே ஆட்சிமொழித் தகுதி கொடுக்கப்பட்டுள்ளது
!
தமிழ் உட்பட
பிற இந்தியமொழிகளுக்கு அரசியல் சட்டத்தில் அந்தத் தகுதி கொடுக்கப்படவில்லை!
ஏன்?
இதுதான்
இன்றைய அடிப்படை வினா!
இந்திய ஒன்றிய
அரசில் மாற்றி மாற்றி அமர்கிற பேராயக்கட்சியும் பா ஜ கட்சியும் இதற்கு விடை
தரவேண்டும்!
அதற்கு என்ன
தடை என்பதை விளக்கவேண்டும்!
அதை
விட்டுவிட்டு . . .
'' மாநிலங்களை
மூன்றாக வகைப்படுத்தியுள்ளோம்! அதன்படி, இந்தியைமட்டுமே தாய்மொழியாகக் கொண்ட
மாநிலங்கள் ஒரு வகை!
அவ்வாறு முழுமையாகக்கொள்ளாமல், 30 விழுக்காடு மக்கள்மட்டுமே இந்தியைப் பயன்படுத்துகிற மாநிலங்கள் இரண்டாவது வகை!
'' இந்த
மூன்றாவது வகைப்பட்ட மாநிலங்கள் தங்கள் தாய்மொழிகளிலேயே கல்வியை மேற்கொள்ளலாம்.
அதற்கு எவ்விதத்தடையும் கிடையாது! இந்தி மொழியைப் படிக்கவேண்டும் என்ற கட்டாயம்
இல்லை!''
இவ்வாறு இன்று அனைத்துமொழிகளுக்கும் அரசியல் சட்டத்தில் ஆட்சிமொழித் தகுதி அளிக்கப்படவேண்டும் என்ற மையமான கோரிக்கை பின்தள்ளப்பட்டு . . . மறைக்கப்பட்டு . . . மறக்கடிக்கப்பட்டு ..
கல்விக்கூடங்களில் இந்தித் திணிப்பு உண்டா இல்லையா என்பதுபற்றிய பேச்சாக . . . மொழிச்சிக்கல் இன்று திசை திருப்பப்படுகிறது!
தமிழகத்தில் கல்விக்கூடங்களில் ஆங்கிலமா அல்லது இந்திமொழியா என்ற வாதமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
இதுவும் தவறு!
தமிழகத்துக்
கல்விக்கூடங்களில் தாய்மொழியாகிய தமிழா அல்லது . . .
ஆங்கிலம், இந்தி போன்ற அந்நியமொழிகளா என்ற
வினாவைநோக்கிப் பேச்சு திரும்பவேண்டும்!
எனவே இந்திய ஒன்றிய அரசின் அரசியல் சட்டத்தில் இந்திமொழிக்கு மட்டுமல்லாமல், அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஆட்சிமொழித் தகுதி அளிக்கப்படவேண்டும் என்பதில்தான் முழுக்கவனமும் செலுத்தப்படவேண்டும்!
அந்தத் தகுதி தமிழுக்குக் கிடைத்துவிட்டாலே . . . கல்விக்கூடங்களில் தமிழ்மொழி முழுமையான மேலாண்மையைப் பெற்றுவிடும்!
இந்திமொழி இன்று பெறுகிற அத்தனை வசதிகளையும் தமிழ்மொழி பெற்றுவிடும்!
ஒரு சிக்கலில் பல உள்
சிக்கல்கள் இருக்கலாம்! அவற்றில் ஒரு சிக்கலே அடிப்படையாக இருக்கும். அதனால்தான்
மற்ற உள் சிக்கல்கள் நீடிக்கும். அந்த அடிப்படைச் சிக்கல் தீர்க்கப்பட்டுவிட்டால், ஏனைய சிக்கல்களும் தீர்க்கப்பட்டுவிடும்!
இங்கு இந்திமொழி தவிர பிறமொழிகளுக்கு ஆட்சிமொழித் தகுதி அளிக்கப்படாததே அடிப்படைச் சிக்கல். அந்தச் சிக்கலைத் தீர்த்துவிட்டால், ஏனைய சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிடும்!
அது தீர்க்கப்படாதவரை . . . பிற உள் சிக்கல்கள் தீராது!
வெள்ளி, 14 அக்டோபர், 2022
எனது மொழிக்கொள்கை (3)
எனது மொழிக்கொள்கை (3)
------------------------------------------------------------------------------------------------------------------------------
வியாழன், 13 அக்டோபர், 2022
எனது மொழிக்கொள்கை (2)
எனது
மொழிக்கொள்கை (2)
-----------------------------------------------------------------------------------------------------------------------
மொழிக்கொள்கைபற்றிய
எனது முகநூல் பதிவையொட்டி நண்பர் திரு. மாலன் அவர்கள் அனைவருக்கும் எழக்கூடிய
ஐயங்களைக் கேட்டுள்ளார்கள்.
ஒரு இனம்
தனக்குத் தொடர்புள்ள ஆட்சிப்பணிகளைத் தன் தாய்மொழிவழியாக மேற்கொள்ள உரிமை இல்லாத
ஒரு இனமாக நீடிக்கவேண்டுமா?
ஒரு இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தங்களது தாய்மொழிவழியாக அறிவுத்துறைகளில் பயிற்சிபெற உரிமை வேண்டாமா?
இவற்றை உள்ளடக்கியதுதான் நான் முன்வைத்துள்ள மொழிக்கொள்கை!
ஆனால் வணிகம், அரசியல் தொடர்புகாரணமாக, பிறமொழி பேசுபவர்களிடமும் உரையாடல்
செய்யவேண்டியிருக்குமே! அப்போது என்ன செய்வது?
இங்குச் ''சக இந்தியர்'' என்றால் யார் ? 20 மொழிகளுக்குமேல் பேசக்கூடிய ''இந்திய ஒன்றியத்தில்'' இந்தச் ''சக இந்தியர்களின்'' - அதாவது தமிழரைத்தவிர - தாய்மொழிகள் ஒன்று இல்லை! பல. அதில் ஒன்று இந்திமொழி. தமிழர்கள் தெலுங்கர்களோடு உறவாட, வணிகம் செய்யத் தேவையானது தெலுங்குதான்.
ஆனால் இந்தத் ''தமிழர்'' தெலுங்கரோடு மட்டும் அல்லாமல், கன்னடர்கள், மலையாளிகள், வங்காளிகள் , இந்திமொழி பேசுகிறவர்கள் என்று பலமொழி பேசுகிறவர்களோடு ''உறவாடத்'' தேவை இருக்கலாம். அவ்வாறு இருக்கும்போது, தெலுங்குமட்டும் போதாதே. அப்போது என்ன செய்வது? ஏதாவது ஒரு மொழியைப் பொதுமொழியாகக்கொண்டால் நல்லதுதானே என்ற எண்ணம் உருவாகுவது இயற்கைதான்! அந்த இணைப்புமொழியாக இந்தியோ ஆங்கிலமோ இருக்கலாம் அல்லவா? இதுதான் நண்பர் மாலன் அவர்கள் முன்வைக்கிற ஐயம்!
என்னைப்பொறுத்தவரை இந்த ஐயம் ஒரு தேவையான ஐயம் என்றாலும் கல்வித்துறை, ஆட்சித்துறை, தமிழக உள்மாநில பொருளாதாரத்துறை ஆகியவற்றிற்கு வெளியே உள்ள தனிநபர் வணிகத்துறை, பொருளாதாரத்துறை தொடர்பான ஐயம் இது!
இந்தப் பிற மாநிலங்களோடு ஏற்படும் வணிகத் தொடர்புக்காக, எந்த மொழி தேவையோ அந்த மொழியைத் தேவைப்படுகிறவர்கள் கற்றுக்கொள்ளட்டும். இதற்காக அனைத்து தமிழர்களையும் தாய்மொழி அல்லாத பிற இனத்தின் - அந்நிய இனத்தின் மொழியைப் படிக்க ஏன் கட்டாயப்படுத்தவேண்டும்?
பிற மொழி தேவைப்படுகிறவர்கள் அதைக் கற்றுக்கொள்ளட்டும்! அதைத் தடுக்கவேண்டும் என்று நான் கூறவரவில்லை! நான் முன்வைப்பதெல்லாம் தமிழகத்தின் பெரும்பான்மை மக்களுக்குத் தேவையான . . . அரசியல் சட்டத்தில் இடம்பெறவேண்டிய வேண்டிய மொழிக்கொள்கை!
ஐயம் 2: //ஆங்கிலமும் இந்தியும் அயல் மொழி, தேவையான அயல் மொழிகளைக் கற்க கல்வி நிறுவனங்கள் உதவ வேண்டும் என்கிறீர்கள். மெத்தசரி. அது இந்திக்கும் பொருந்தும்தானே? விரும்புவோர் அதனைப் படிக்க அரசுக் கல்வி நிறுவனங்கள் உட்பட வாய்ப்பும் வசதியும் செய்து தரப்பட வேண்டும்தானே?//
பதில் : நான் இதில் தெளிவாக இருக்கிறேன். பிற மொழிகள் தேவைப்படுகிறவர்கள் தமிழகத்தில் அதைக் கற்றுக்கொள்வதற்கு . . . விருப்பத்தின் அடிப்படையில் . . . தேவையானவற்றை அளிப்பதில் எனக்குக் கருத்துவேறுபாடு இல்லை! ஆனால் அதைக் கட்டாயமாக்கக்கூடாது! விருப்பப்பாடமாக வையுங்கள்! தேவைப்படுகிறவர்கள் படித்துக்கொள்ளட்டும்!
ஐயம் 3 : //"பஞ்ச பூதத்தின் செயல்கள் அவை சார்ந்த தொழில்நுட்பங்கள் மூத்த வளருது மேற்கே. அவை குறித்த தகவல்கள் தமிழ் மொழியில் குறைவு. தமிழ் மட்டுமே அறிந்தோர் தங்களை இற்றைப்படுத்திக் கொள்ள யாது செய்தல் வேண்டும்?"//
பிறநாடுகளில் - பிறமொழிகள் பேசும் நாடுகளில் - வளர்கின்ற அறிவியல், பொருளாதாரம், இலக்கியம் தொடர்பான தகவல்களைத் தமிழிலிலேயே தமிழர்கள் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும். அதற்குத் தேவையான உதவிகளை இந்திய ஒன்றிய அரசும் அளிக்கவேண்டும்.
நண்பர் மாலன் அவர்கள் எழுப்பியுள்ள ஐயங்கள் 2, 3 -க்காகத் தமிழக மக்கள்மீது இந்தியையோ அல்லது ஆங்கிலத்தையோ சட்டங்களின்வாயிலாகத் திணிப்பது. . . கட்டாயமாக்குவதைத்தான் நான் எதிர்க்கிறேன்!
பலமொழிகள்
பேசும் பல மாநிலங்களின் ஒன்றிய அரசாக இருக்கும் இந்திய அரசு . . . தனது அரசியல்
சட்டத்தில் . . .
ஒரு
மொழியைமட்டும் . . .
இந்திமொழியைமட்டும்
. . .
ஆட்சிமொழியாகத்
தக்கவைப்பது சரி இல்லை!
இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டுள்ள அத்தனை இனங்களின் மொழிகளும் ஆட்சிமொழிகளாகச் சட்டத்தில் இடம்பெறவேண்டும்! இந்திய ஒன்றியமானது இந்திமொழி பேசும் இனத்தின் அரசு மட்டும் இல்லையே!
எனவே, ஆட்சிமொழி, பயிற்றுமொழி, பொருளாதார - வணிக மொழி என்ற மூன்று
தகுதிகளையும் தமிழுக்குச் சட்டத்தின்வழியே அளிக்கப்படவேண்டும்!
ஒரு இனத்தின்மீது பிற இனங்களின் மொழிகளையோ பண்பாடுகளையோ அரசியல் சட்டங்களின் வழி திணிக்கக்கூடாது!
எனது மொழிக்கொள்கை (1) . . .
எனது மொழிக்கொள்கை . . .
எந்தவொரு
இனமும் தனது அனைத்துக் கருத்துப் புலப்பாட்டுச் செயல்களுக்கும் தனது தாய் மொழியையே
பயன்படுத்தவேண்டும். எந்தவொரு அடிப்படையிலும் பிற மொழிகளை அவற்றிற்குப்
பயன்படுத்தக்கூடாது.
1) தமிழகத்திலும்
தமிழ் இனம் தனது தாய்மொழியாகிய தமிழ்மொழியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
2) ஆங்கிலமோ
இந்தியோ இரண்டுமே தமிழ் இனத்திற்கு அயல்மொழிகள்தான்!
3) அரசு அலுவலகப்
பணிகள் அனைத்தும் தமிழில்தான் நடைபெறவேண்டும்.
4) தொடக்கக்கல்விமுதல்
உயர்நிலை ஆய்வுவரை பயிற்றுமொழியாகத் தமிழ்தான் தமிழகத்தில் நீடிக்கவேண்டும்.
5) வழிபாட்டுத்தலங்களில்
தமிழ்தான் பயன்படுத்தப்படவேண்டும்.
6) தொழிற்சாலை, வணிக நிறுவனங்களில் தமிழ்தான் முழுமையாகப்
பயன்படுத்தப்படவேண்டும்.
7) ஆங்கிலமோ
பிரஞ்சுமொழியோ எந்த ஒரு அயல்மொழியும் ஒருவருக்குத் தேவையென்றால், அதை அவர் படிப்பதற்குக் கல்வி நிறுவனங்கள்
உதவவேண்டும். ஆனால் அது தேவைப்படாதவர்கள்மீது அந்த மொழிகளைத் திணிக்கக்கூடாது.
8 ) பொது ஊடகங்கள்
அயல்மொழிக் கலப்பின்றி, முறையாக, தவறின்றி, தமிழைப் பயன்படுத்த முன்வரவேண்டும்.
9) சிறுபான்மை இன
மக்கள் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்கத் தேவையானவற்றை அரசு
செய்துகொடுக்கவேண்டும்.
தமிழ்நாடு என்பது தமிழ்மொழி நாடாக இருக்கவேண்டும்; ஆங்கிலம், இந்தி போன்ற எந்தவொரு அயல்மொழிகளின் மேலாண்மையும் தமிழ் மொழியின்மேல் இருக்கக்கூடாது.
அதற்காக இந்திய ஒன்றியத்தில் இந்தி அல்லாத பிறமொழிகள் பேசும் இனங்கள் ஒன்றுபட்டு, இணைந்து, போராடவேண்டும்.
திங்கள், 21 மார்ச், 2022
மொழியியல் துறையில் பயன்படுத்தும் கலைச்சொற்கள் ஆங்கிலமொழியின் அடிப்படையில் அமைந்ததா? ஒரு ஐயத்திற்கு விடை ...
மொழியியல் துறையில் பயன்படுத்தும் கலைச்சொற்கள் ஆங்கிலமொழியின் அடிப்படையில் அமைந்ததா? ஒரு ஐயத்திற்கு விடை ...


10:19 PM
ந.தெய்வ சுந்தரம்