தமிழ்நாட்டில் தமிழ்மொழியின் மேலாண்மையை எவ்வாறு நிலைநாட்டுவது?
--------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் அனைத்து நிறுவனங்களும் அங்காடிகளும் தங்களது பெயர்ப்பலகையில் பெயர்களைத் தமிழில் பெரிய எழுத்தில் எழுதவேண்டும்;
அதற்கு அடுத்த நிலையில்தான் ஆங்கிலமோ பிறமொழிகளோ இடம்பெறவேண்டும் என்று தமிழ்நாட்டில் சட்டம் இருப்பதுபோல ...
அவற்றின் உள்ளேயும் இடம்பெறுகின்ற பெயர்ப்பலகைகளில் தமிழ் முதல் இடத்தைப்பெறவேண்டும்; அதற்குப்பின்னர் மற்ற மொழிகள் இடம்பெறவேண்டும் என்று சட்டம் இயற்றப்படவேண்டும். மீறுகின்றவற்றிற்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும்.
மேலும் தமிழுக்கு உரிய முன்னுரிமை கொடுப்பதில் சிறப்பாகச் செயல்பட்ட நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படலாம்.
இவ்வாறுதான் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழி என்பதை நிறுவவேண்டும். பயிற்றுமொழி, வணிகமொழி, நிர்வாகமொழி, வழிபாட்டுமொழி என்று பல முனைகளில் தமிழ்மொழி மேலாண்மை பெறவேண்டும். இதற்குத் தமிழ்நாடு அரசே தேவையான சட்டங்களை நிறைவேற்றலாம். இதற்கு எந்தவகையிலும் ஒன்றிய அரசு தடையாக அமையமுடியாது.
ஒன்றிய அரசு அலுவலகங்கள், பிற நிறுவனங்களில் வேண்டுமென்றால் இந்திமொழியோ ஆங்கிலமொழியோ இடம்பெறவேண்டும் என்று கூறலாம். அவ்வளவுதான்! அதனால் நமக்கோ தமிழுக்கோ சிக்கல் இல்லை! ஆனால் அங்கேயும் தமிழ்மொழிக்குத்தான் முதலிடம் அளிக்கப்படவேண்டும். தமிழ்நாட்டின் ஆட்சிமொழியான தமிழ்மொழியைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறமுடியாது. அவ்வாறு கூறினால், அதை எதிர்த்துப் போராடி, தமிழ்மொழியின் உரிமையை நிலைநாட்டலாம்.
இவைபோன்ற செயல்பாடுகள்தான் தமிழின் மேலாண்மையை . . . தமிழ் இனத்தின் அடையாளமான தமிழின் சிறப்பை எடுத்துக்காட்டி நிற்கும்.
இதுவே தமிழ்மேம்பாட்டுத்திட்டத்தில் முதலிடம் பெறவேண்டிய செயல்பாடுகளாகும்!
தமிழர்கள் தாமாகவே முன்வந்து தமிழ்மொழி மேலாண்மைக்குத் தேவையானவற்றைச் செய்யவேண்டும் என்பது உண்மைதான்! ஆனாலும் தமிழ்நாடு அரசாங்கமும் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மக்களுக்குத் தமிழ் போய்ச்சேரவேண்டும்! அதுதான் தமிழ்மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் நாம் அளிக்கும் உண்மையான விருது ஆகும்! தமிழறிஞர்களுக்குச் சிலைகள், விருதுகள், பண உதவி போன்றவையெல்லாம் தேவைதான்! வரவேற்கப்படவேண்டியதுதான்! நான் மறுக்கவில்லை! ஆனால் அவையெல்லாம் அதற்கு அடுத்த கட்டச் செயல்பாடுகளாகத்தான் இருக்கவேண்டும என்பது எனது கருத்து.
------------------------------------------------------------------------------------------------------------
இதையெல்லாம் எவ்வாறு மாற்றியமைப்பது? தமிழர்கள் தாமாகவே முன்வந்து இதைச் செய்யவேண்டும் என்பது உண்மைதான்! ஆனாலும் தமிழ்நாடு அரசாங்கமும் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மக்களுக்குத் தமிழ் போய்ச்சேரவேண்டும்! அதுதான் தமிழ்மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் நாம் அளிக்கும் உண்மையான விருது ஆகும்! தமிழறிஞர்களுக்குச் சிலைகள், விருதுகள், பண உதவி போன்றவையெல்லாம் அதற்கு அடுத்த கட்டச் செயல்பாடுகளாகத்தான் இருக்கவேண்டும என்பது எனது கருத்து.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
''காற்று அடித்து மணி ஒலிக்கும்'' என்றோ அல்லது ''மேசையின்மீது படிந்துள்ள தூசி காற்றடித்து விலகும்'' என்றோ நினைத்துக்கொண்டு நாம் சும்மா உட்காரமாட்டோம் அல்லவா? திட்டமிட்டுத் தமிழ் மேம்பாட்டுத் திட்டங்கள் இங்குச் செயல்படுத்தப்படவேண்டும். ஒருவரின் உள்ளார்ந்த உடம்பு உறுப்புக்கள் நலமுடன் இருக்கவேண்டும்! அதற்குப்பிறகுதான் உடலின் வெளித்தோற்றத்தை அழகுபடுத்தும் செயல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இதுவும் தேவைதான்! ஆனால் உள்ளார்ந்த உடல்நலமே அடிப்படை என்பதை நினைவில்கொள்ளவேண்டும். விழாக்கள், விருதுகள் தமிழுக்கு நாம் அளிக்கிற முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன என்பதில் ஐயம் இல்லை! ஆனால் அதற்கும்மேல் தமிழ்மொழியின் உள்ளுறுப்புக்கள் - அகரமுதலிகள், இலக்கண உருவாக்கங்கள், கலைச்சொல்லாக்கங்கள், தரப்படுத்தங்கள், கணினித்தமிழ் போன்றவை - தேவையான செழுமையுடன் இருக்கவேண்டும் என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இது தற்போது எதிர்பார்க்கிற அளவுக்கு இல்லை என்பதே உண்மை!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக