சமூக அறிவியலுக்கும் பிற இயற்கை அறிவியல்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு....
---------------------------------------------------------------------------------------------------------------------------
இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற இயற்கை அறிவியல்களின் பயன்பாடுகளை முதலாளித்துவ சக்திகள் தங்கள் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்த அறிவியல்களின் கண்டுபிடிப்புகள் வர்க்க நலன்களைக் கொண்டதாக இருக்காது. அதாவது வர்க்கப் பண்புகள் இருக்காது. இயற்கைவிதிகளின் கண்டுபிடிப்புகள் எல்லாம் அனைவருக்கும் - வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு- பயன்படும்.
ஆனால் சமூக அறிவியல், இலக்கியம் ஆகியவற்றில் - தத்துவம், அரசியல் , பொருளாதாரம், சமூகவியல், மானிடவியல், வரலாறு, இலக்கியத் திறனாய்வு போன்றவற்றில் மிகக் கவனமாக இருக்கவேண்டும். உண்மையான - புறவயமான சமூகவியல் உண்மைகளைச் சுரண்டும் வர்க்கங்கள் மறைக்கமுயலும். வரலாறு, பொருளாதாரம் என்ற போர்வையில் அவை தங்களுக்குச் சாதகமான ''கருத்துக்களை'' முன்வைத்து, உண்மைகளை மறைத்து, உழைக்கும் வர்க்கங்களை ஏமாற்றமுயலும். தங்களது கல்விமுறையில் இதையே அவை செய்யும். தங்களது ''கண்டுபிடிப்புக்களை'' ''கருத்துக்களை'' வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட - அனைவருக்கும் பொதுவான ஒன்றாகக் காட்டமுயலும். இதற்குக் காரணம்... புறவயமான சமூகவியல் விதிகள் அந்த வர்க்கங்களின் நலன்களுக்கு எதிராக அமைவதுதான் ஆகும். இதை வெளிப்படுத்திய காட்டியவர்கள்தான் மார்க்சும் எங்கல்சும், லெனினும், ஸ்டாலினும், மாசேதுங்கும் ஆவர். இவர்கள் அனைவரும் உழைக்கும் வர்க்கங்களின் நலன்களுக்காகச் சமூக ஆய்வில் ஈடுபட்ட காரணத்தால், சமூகவியலின் உண்மைகளை - புறவய விதிகளை- வெளிக்கொணர்வதில் இவர்களுக்கு அச்சம் கிடையாது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக