தமிழ்
வளர்ச்சியில் கணினித்தமிழ் -
மாநாடு
கருத்துரைக்
கூட்டம்
இன்றைய தமிழ் வளர்ச்சியில் கணினித்தமிழுக்கு மிக முக்கியமான பங்களிப்பு உள்ளது. எனவே கணினித்தமிழ் வளர்ச்சிக்கான பணிகளைத் தமிழக அரசு விரைவுபடுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி, 2012 டிசம்பர் 15 ஆம் நாளன்று ஒருநாள் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் அடிப்படை நோக்கங்களைப்பற்றிய ஒரு தமிழ் விளக்க நூல் வெளியீட்டுவிழா இன்று ( செப்டம்பர் 23 ) காலை 1030 மணிக்குக் கன்னிமாரா நூலகத்தின் அண்ணா சிற்றரங்கில் நடைபெற்றது. மாநாட்டை எவ்வாறு சிறப்புற நடத்தலாம் என்பது பற்றி ஒரு கலந்துரையாடலும் நடைபெற்றது.
கூட்டத்திற்குத்
திரு. இராம.கி. தலைமை வகித்தார். திரு. மா. பூங்குன்றன் அவர்கள் வரவேற்புரை
நிகழ்த்தினார். திரு. இராம. கி,. அவர்கள் தனது தலைமையுரையில்
மாநாட்டின் அவசியத்தை எடுத்தரைத்தார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித்
துறையின் மேனாள் பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம் இந்த நூலில் வலியுறுத்தப்பட்டுள்ள
கருத்துகளைத் தெளிவுபடுத்தினார். அதையொட்டி மாநாட்டை எவ்வாறு சிறப்புற நடத்தி, கணினித்தமிழ் வளர்ச்சிக்கான
தெளிவான திட்டங்களைத் தமிழக அரசிடம் அளிக்கலாம் என்பதுபற்றி கலந்துரையாடல்
நடைபெற்றது. தமிழ் ஆர்வலர்கள் பலர் இக்கலந்துரையாடலில் மிகுந்த ஆர்வத்துடன்
கலந்துகொண்டனர். இறுதியில் திரு. கண்ணன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
தமிழ்
வளர்ச்சியில் கணினித்தமிழ் என்ற பேரா. ந. தெய்வ சுந்தரத்தின் ஒரு கட்டுரை - நூல்
வடிவில் - வெளியிடப்பட்டது. அக்கட்டுரை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை ஆக்கத்திற்கு
மலேயாப் பல்கலைக்கழக்கதில் பணியாற்றும் ( மேனாள் தமிழ்ப்பல்கலைக்கழகத்
துணைவேந்தர்) பேரா. கருணாகரன், தமிழகத்தைச்
சேர்ந்த திரு. இராம.கி. திரு. நாக. இளங்கோவன் ஆகியோரின் கருத்துகள் மிகவும்
உதவியாக அமைந்தன.
2 கருத்துகள்:
Looking forward for the success of this meet
பேரா. ந. தெய்வ சுந்தரத்தின் ஒரு கட்டுரை - நூல் வடிவில் - வெளியிடப்பட்ட web link கிடைக்குமா?
கருத்துரையிடுக