பல்வேறு நாடுகளில் வாழும் தமிழறிஞர்கள் மற்றும் மென்பொறியாளர்களின் "மென்தமிழ்" மென்பொருள் குறித்த கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள்.
From
Dr. Vasu Renganathan
Pennsylvania University, USA
Dear Dr. Deiva Sundaram,
I downloaded the trial version and I found this a very nice software
with many features that are not available anywhere. Sounds like you
had put an immense amount of time on this and it did come out very
nice. I will suggest this software to my students and ask them to buy
it.
The way I see it, you must have done lots of work going over various
contexts - a tedious job indeed. Bringing the knowledge of Tamil
morphology and phonology into computing is indeed a challenging job
and your software does a great job in this respect. Congratulations
again.
From
Prof. C.R. Selvakumar
Waterloo University
Canada
உங்கள் பணியின் நேர்த்தியை நான் பார்த்த அளவிலேயே
மிக வியப்புடன் பாராட்டுகின்றேன். உங்கள் ஆய்வுப்பணி ஆக்கப்பணி
விடாது மேம்பாடு எய்த என்னால் ஆன வகைகளில்
உதவிகள் செய்வேன்.
From
Gopi ( Gopalakrishnan , Oracle, Hyderabad)
Congrats on Mentamil version 3. Nice to hear this good news.
I have downloaded and installed it.
The interface is entirely different from old version (more like Mac/Linux)
I will share my detailed comments soon.
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
மென் தமிழ் சொல்லாளர், தமிழில் நான் அறிந்த மிகச் சிறந்த சொல்திருத்தி (spell checker) கொண்ட ஒரு செயலி.
இதன் முந்தைய வெளியீட்டின் போது மலேசியாவில் முனைவர் தெய்வசுந்தரம் அவர்கள் சொல்திருத்தம் குறித்த செயல் விளக்கம் காண்பித்த போது வியப்பாக இருந்தது. அந்த வெளியீட்டு விழாவில் அவர் தெரிவித்த சொல் திருத்தம் குறித்த சில அடிப்படைக் கோட்பாடுகள், "தமிழா! கட்டற்ற தமிழ்க் கணிமை" குழுவின் சார்பில் உருவாக்கப்பட்டு வரும் கட்டற்ற சொல் திருத்திகளுக்கான மேம்பாடுகளுக்கு புதிய வித்திட்டது என்றால் மிகையாகாது.
இதன் முந்தைய வெளியீட்டின் போது மலேசியாவில் முனைவர் தெய்வசுந்தரம் அவர்கள் சொல்திருத்தம் குறித்த செயல் விளக்கம் காண்பித்த போது வியப்பாக இருந்தது. அந்த வெளியீட்டு விழாவில் அவர் தெரிவித்த சொல் திருத்தம் குறித்த சில அடிப்படைக் கோட்பாடுகள், "தமிழா! கட்டற்ற தமிழ்க் கணிமை" குழுவின் சார்பில் உருவாக்கப்பட்டு வரும் கட்டற்ற சொல் திருத்திகளுக்கான மேம்பாடுகளுக்கு புதிய வித்திட்டது என்றால் மிகையாகாது.
..............................................................................................................
திரு. இராமசாமி
கிளீவ்லாந்து, ஒகயோ.
வணக்கம். உங்கள் மென்தமிழ் என்ற மென்பொருளைப் பயன்படுத்திப் பார்த்தேன். மிகவும் அருமையாக உள்ளது.
சொற்பிழை மற்றும் சந்திப்பிழை ஆகியவற்றைத் திருத்துவதுடன், அகராதி, மொழிமாற்றி ஆகிய கூடுதல் கருவிகள்
இணைந்திருப்பது மிகவும் சிறப்பு.
ஒரே ஒரு சிறிய கருத்து.
Cursorஐ Menu-Barல் உள்ள ஒவ்வொரு buttonsக்கும் கொண்டு செல்கையில் Tool-tip என்று சொல்வோமே,
அது, அந்த குறிப்பிட்ட button என்ன செய்யும் என்பதனை ஆங்கிலத்தில் சுருக்கமாக விளக்கினால் எளிதாக
விளங்கிக் கொள்ளலாம். தற்போது tool-tip முதற்கொண்டு அனைத்தும் தமிழிலேயே உள்ளது.
தமிழில் tool-tip இருந்தால், இந்த மென்பொருளின் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் என்று கருதுகிறேன்.
மிக்க நன்றி.
அன்புடன்,
இராமசாமி
கிளீவ்லாந்து, ஒகயோ.
---------------------------------------------------------------------------------------------------------
Dr.P.David Prabhakar
Associate Professor of Tamil
Madras Christian College
Chennai 600 059, India
91-9444024855
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்கட்கு,
பயன்மிக்க மொழிக்கருவிகள், பயன்படுத்த எளிமை, காலத்திற்கேற்ற தொழில்நுட்ப மேம்படுத்தம் - இவை போன்றவை புதிய மென்தமிழின் பண்புகள்.
எமது மாணவர்கட்கு வரும் வாரத்தில் மென்தமிழை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளேன். அவர்தம் கருத்துக்களையும் அனுப்புவேன்.
தனியொருவராக ஆக்கமிகு பங்களிப்புகளைத் வழங்கி வரும் தங்களைச் சார்ந்தே கணினித் தமிழியலின் வளர்ச்சி குறித்து இன்னும் சிந்திக்கவேண்டியிருப்பது என் போன்றோருக்கு என்றும் பெருமிதத்தையே வழங்குகிறது.
பணிவன்புடன்,
Dr.P.David Prabhakar
---------------------------------------------
From:
Dr.chandrabose
நண்பர்களின் கவனத்திற்கு, வணக்கம். அண்மையில் வெளியான தமிழ்சொற் செயலிகளில், அதிக வசதிகளும், கூடுதல் பயன்களும் கொண்டதாக உளளது இந்த மென் தமிழ் - தமிழ்ச் சொல்லாளர். விருப்பமுள்ளோர், தளம் சென்று 15 நாட்கள் சோதனைப் பதிப்பைப் பயன்படுத்திப் பார்க்கலாம். பின்னர் கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுப் பயன்படுத்தலாம். அன்புடன் பெ.சந்திர போஸ் சென்னை ---------------------------------------------------------------
இன்றைய மைக்ரோசாவ்ட்டு வொர்டுடன் பிற
புதுக்குகளிலும், ஆங்கிலப் பிழை திருத்திகள் இருக்கின்றனவெனில், அவை 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளின் தொடர் வளர்ப்பின் முதிர்ச்சியே ஆகும். இதனை எண்ணிப் பார்க்கும்போது மென்தமிழ் என்ற சொல்லெழுதியின் ஒற்றுப் பிழை, சந்திப்பிழை, மொழிப்பிழை திருத்தியொடு, எம்மெசு வொர்டுவில் உள்ள பல/அனைத்து வசதிகளையும் முதல் மூச்சிலேயே பெற்றுள்ள மென்தமிழ் என்ற செயலி மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. எனது தமிழ்ச் சிற்றறிவோடு சிறிது நான் சோதித்துப் பார்த்தவரை எனக்கு இந்தத் திருத்திகளில் பிழைகள் தென்படவில்லை. மென்தமிழ் என்ற எழுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் தமிழ்க்கூறுகள் தமிழ்க் கணிமை வரலாற்றில் ஒரு மைல்கல்.
இது தில்லிக் கணியுலகமோ, ஆங்கிலக் கணியுலகமோ
செய்த படைத்து நமது தலையில்
திணித்ததல்ல.
தமிழ்நாட்டொருவரின் தனித்தமிழ்ப்படைப்பு. கூகுளோ, மைக்குரோசாவ்ட்டுவோ செய்து, தமிழ் வளர்ந்துவிட்டது என்று நாம் பெசிக்கொள்ளுமுன்னர் தமிழர் ஒருவரின் தமிழ்நாட்டுத் தமிழ்ப் படைப்பு என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இதனைச் செய்தமைக்காக பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களையும் அவரின் கணிஞர்களையும் பாராட்டிப் பெருமையடைகிறேன். எசாரெம் பல்கலைக்கழகம் இதனை ஆதரித்து உலகத்தரம் வாய்ந்த வெளியீட்டு விழா செய்திருந்தது மிக உகப்பாகவும் நம்பிக்கையளிப்பதாகவும் இருந்தது. அன்புடன் நாக.இளங்கோவன் |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக