உயிரும் உயிரும் சந்தித்தால்?(2)
-----------------------------------------------------
முந்தைய உரையில் நிலைமொழி இறுதியில் வல்லின மெய்கள் தனித்து நிற்காது.... எனவே அவற்றிற்கு உதவி செய்ய, குற்றியலுகரம் என்ற ஒரு உதடு குவியாத உயிரொலி வந்து நிற்கிறது என்று பார்த்தோம் ( பாக்கு, கன்று, சார்பு, அழகு, ஏடு ) ஆனால் அவ்வாறு குற்றியலுகரத்தை இறுதியாக உடைய சொற்களையடுத்து, உயிரொலிகளில் தொடங்கும் நிலைமொழிகள் வந்தால் மேற்கூறிய நிலைமொழிகளின் குற்றியலுகரம் மறைந்துவிடும் என்றும் பார்த்தோம் ( பட்டு+ஆடை = பட்டாடை, சங்கு +ஒலி = சங்கொலி).
ஆனால் இன்றைய பேச்சுத்தமிழில் நிலைமொழியின் இறுதியில் வல்லினங்கள் மட்டுமல்ல, மெல்லினங்கள், இடையினங்கள்கூட வருவதில்லை என்றும் பார்த்தோம் ( கண்- கண்ணு, தேர் -தேரு, தோல்-தோலு, தேள்-தேளு). அவ்வாறு வரும்போது, உகரம் அல்லது இகரம் இணைந்துகொள்கின்றன. இந்த மாற்றங்கள் எதிர்காலத்தில் எழுத்துத்தமிழில்கூட...
ஞாயிறு, 27 நவம்பர், 2016
சனி, 26 நவம்பர், 2016
உயிரும் உயிரும் சந்தித்தால்?
உயிரும் உயிரும் சந்தித்தால்?-----------------------------------------------
முன்பு நான் பதிவுசெய்த ஒரு உரையில் உடம்படுமெய் என்பதுபற்றிக் கூறியிருந்தேன். ''தெரு'' என்று உகரத்தில் முடிகிற சொல்லானது ''ஆ'' என்ற வினாவுக்கான விகுதியோடு இணையும்போது ,'' தெருவா'' என்று மாறுகிறது என்றும் ''இலை'' என்று ஐகாரத்தில் முடியும் சொல்லானது அதே ''ஆ'' என்ற சொல்லோடு இணையும்போது ''இலையா'' என்றும் மாறுகிறது என்றும் கூறியிருந்தேன். இவ்வாறு உயிரும் உயிரும் இசையும்போது ய்,வ் என்ற மெய்யொலிகள் இடையில் வந்து உதவுகின்றன என்று பார்த்தோம்.
ஆனால் ''சிறகு'' என்று உகரத்தில் முடிகிற சொல்லானது ''ஆ'' என்ற முன்பு கூறிய வினாவுக்கான விகுதியோடு இணையும்போது .... ''சிறகுவா'' என்று மாறவில்லை. அதாவது இறுதி உகரமும் அடுத்துவருகிற ஆகாரமும் இணையும்போது வ் என்ற உடம்படுமெய் வரவில்லை. மாறாக, ''சிறகு'' என்ற சொல்லில் உள்ள உகரம் மறைந்து,...
வெள்ளி, 25 நவம்பர், 2016
பெயரெச்சம், பெயரடை ஆகியவற்றிற்குப் பின்னர் வல்லொற்று மிகுமா? (2).
பெயரெச்சம், பெயரடை ஆகியவற்றிற்குப் பின்னர் வல்லொற்று மிகுமா? (2).
--------------------------------------------------------------------------------------
(1) முந்தைய உரையில் ''அழகான குதிரை'' என்பதில் உள்ள ''அழகான '' என்பது கூட்டுநிலைப் பெயரடை என்று பார்த்தோம். அதாவது ''அழகு'' என்ற பெயர்ச்சொல்லோடு ''ஆன'' என்ற பெயரடைவிகுதி இணைந்து இது உருவாகிறது. ''ஆன'' போன்றே ''உள்ள'' ''ஆர்ந்த'' ''சான்ற'' ''வாய்ந்த'' ''வாய்ந்த'' ''இல்லாத'' போன்ற விகுதிகளும் கூட்டுநிலைப் பெயரடை விகுதிகளாகப் பயன்படுகின்றன (பேரா. பொற்கோ).
'' அன்புள்ள தம்பி .... பண்புள்ள பையன்
அன்பார்ந்த தலைவர் ... அன்புசான்ற தலைவர்
தகுதிவாய்ந்த தலைவர் ... அறிவாய்ந்த தலைவர்
தகுதியில்லாத தலைவர் ''
மேற்கண்ட கூட்டுப்பெயரெச்சங்களுக்குப்பின்னர் ( வருமொழியில் வல்லினத்தை முதலாகக்கொண்ட சொற்கள் வந்தாலும்) மிகாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
(2)...
வியாழன், 24 நவம்பர், 2016
பெயரெச்சம், பெயரடை ஆகியவற்றிற்குப் பின்னர் வல்லொற்று மிகுமா?
பெயரெச்சம், பெயரடை ஆகியவற்றிற்குப் பின்னர் வல்லொற்று மிகுமா?-----------------------------------------------------------------------------------------------
தமிழில் பெயருக்கு அடையாகச் செயல்படுவதற்கு - அதாவது பெயர்ச்சொல் குறித்து நிற்கும் பொருள், நபர், நிகழ்ச்சி, போன்றவற்றின் பண்புகளை அல்லது செயல்களை விளக்கி நிற்பதற்கு - இரண்டுவகையான சொற்கள் பயன்படுகின்றன. ஒன்று பெயரடை... மற்றொன்று பெயரெச்சம்.
1) நல்ல பையன் ... தீய செயல்கள் - பெயரடை
2) அழகான மயில் , வேகமான குதிரை - பெயரடை
3) படித்த மனிதர்.... உயர்ந்த கோபுரம் - பெயரெச்சம்
4) பேசிய தலைவர் ... ஓடுகிற பையன் - பெயரெச்சம்
முதலில் (1) கூறப்பட்டுள்ள பெயரடைகளை இலக்கணத்தார் குறிப்புப் பெயரெச்சம் என்று கூறுவார்கள். அதாவது காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் வந்து நிற்பவை. ஆனால் அதுபற்றிய விவாதங்களை நாம் இங்கு மேற்கொள்ளவேண்டாம். பேரா. பொற்கோ அவர்கள்...
செவ்வாய், 22 நவம்பர், 2016
தமிழில் சில துணைவினைகளின்பின் ஒற்று மிகுதல் (2)
தமிழில் சில துணைவினைகளின்பின் ஒற்று மிகுதல் (2)-------------------------------------------------------------------------------------
நேற்று பார்த்த வினைக்கூறு துணைவினைகளிலிருந்து (Aspects) மாறுபட்ட மற்றொரு வகைத் துணைவினைகள் தமிழில் உள்ளன.
'' மழை வரப்போகிறது''
''அவர் கீழே விழப்பார்த்தார்''
''மழை வரக்கூடும்''
''நாளை நான் அவரைப் பார்க்கவேண்டும்''
''அவர் நாளை வரமாட்டார்''
''அவர் இன்று வரவில்லை''
மேற்கூறிய தொடர்களில் வினைமுற்றுகளின் அமைப்பானது முதன்மைவினை + துணைவினை என்று உள்ளது.
முதன்மைவினையானது ''செய / செய்ய'' வினையெச்ச வாய்பாட்டு அமைப்பைக் கொண்டுள்ளது. அதையடுத்து ''போ'', ''பார்'' ''கூடு'' ''வேண்டும்'' ''மாட்டு'' ''இல்லை'' என்பவை வருகின்றன. இவை துணைவினைகள் ஆகும். அதாவது இவற்றிற்கு அகராதிப் பொருள் கிடையாது. மாறாக, இலக்கணப்பொருளே உண்டு.
இவை துணைவினைதான் என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்கு...
திங்கள், 21 நவம்பர், 2016
தமிழில் சில துணைவினைகளின்பின் ஒற்று மிகுதல் (1)
தமிழில் சில துணைவினைகளின்பின் ஒற்று மிகுதல் (1)
-------------------------------------------------------------------------------------
(1) வினைக்கூறு ( Aspectuals) :
''கண்ணன் பட்டம் விட்டார் ''
''கண்ணன் வந்துவிட்டார்''
முதல்தொடரில் ''விட்டார்'' என்பது ''விடு'' என்ற முதன்மைவினையின் வினைமுற்று ஆகும்.
இரண்டாவது தொடரில் ''வா'' என்பதுதான் வினைநிகழ்ச்சியைக் குறிக்கும் முதன்மைவினை. அதோடு இணைந்துவரும் ''விட்டார்'' என்பது அந்த வினைநிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது என்பதைக் காட்டுவதற்காகப் பயன்படுகிற ஒரு துணைவினையாகும்.
இந்தத் துணைவினைக்கு அகராதிப்பொருள் கிடையாது. மேலும் ''வந்துவிட்டார் என்பதில் ''வந்து'' என்பதற்கும் ''விட்டார்'' என்பதற்கும் இடையில் அகராதிப்பொருளைக் காட்டும் ஒரு சொல்லைச் சேர்க்கமுடியாது. ஆனால் இலக்கணப்பொருளைக் காட்டும் இடைச்சொற்களைச் சேர்க்கலாம் (வந்தேவிட்டார் என்பதில் இடையில்...
சனி, 19 நவம்பர், 2016
தமிழில் பின்னொட்டுகளின்பின் (Postpositions) ஒற்று மிகுதல்
தமிழில் பின்னொட்டுகளின்பின் (Postpositions)ஒற்று மிகுதல்
---------------------------------------------------------------------------
தமிழில் சில வேற்றுமை உருபுகளின்பின் சில பின்னொட்டுகள் என்னும் விகுதிகள் இணைந்து, வேற்றுமைப்பொருளை அல்லது வேற்றுமை உறவுகளை ( Casal relations) மாற்றியமைக்கும்.
''அவனைப் பார்த்தேன்'' ... ''அவனைப்பற்றிப் பேசினேன்''
''ஐ'' என்ற வேற்றுமை உருபு வரும்போது, ''அவன்'' என்பதற்கும் ''பார்த்தேன்'' என்பதற்கும் இடையில் உள்ள வேற்றுமை உறவு வேறு! ''ஐப்பற்றி'' என்று வரும்போது, ''அவன்'' என்பதற்கும் '' பேசினேன்'' என்பதற்கும் இடையில் உள்ள வேற்றுமை உறவு. அதாவது தொடரின் பொருள் வேறுபடுகிறது.
பிற்காலத் தமிழில் - குறிப்பாகத் தற்காலத் தமிழில் - ''பற்றி'' போன்ற பல பின்னொட்டுகள் அல்லது விகுதிகள் தோன்றியுள்ளன. இதில் மேலும் நாம் கவனிக்கவேண்டிய ஒன்று... ''பற்றி '' என்பது '' பற்று''...
வியாழன், 17 நவம்பர், 2016
தமிழ் மொழியசை விதிகளும் சில புணர்ச்சி வகைகளும்!
தமிழ் மொழியசை விதிகளும் சில புணர்ச்சி வகைகளும்!-----------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவில் தமிழ்ச் சொற்களின் அமைப்பை மொழியசை அடிப்படையில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில செய்திகள்!
தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட அசைகள் வரும்போது, ஒரு கட்டுப்பாடு உள்ளது. முதல் அசையைத் தவிர ஏனைய அசைகள் எல்லாம், தவறாமல் அசைத் தொடக்கத்தைப் - ஒரு மெய் எழுத்தைப் - பெற்றிருக்கவேண்டும்! அவ்வாறு மெய் வராத அசைகள் ஏதாவது இருந்தால், அந்த இடத்தில் ஒரு மெய் சேர்க்கப்படும்.
(1) தெரு + ஆ = தெருஆ* = த்எ - ர்உ - ஆ
இந்தச் சொல்லில் மூன்றாவது அசையில் உச்சியாகிய உயிர் மட்டுமே உள்ளது. இது தமிழ் மொழியசை அமைப்பு விதிக்கு எதிரானது. எனவே அங்கு ஒரு மெய் எழுத்தைச் சேர்க்கிறோம். இங்கு ''வ்'' என்ற மெய் சேர்கிறது.
தெருவா = த்எ - ர்உ - வ்ஆ
அடுத்து ஒரு எடுத்துக்காட்டைப்...
புதன், 16 நவம்பர், 2016
தமிழில் மொழியசை விதிகள்
தமிழில் மொழியசை விதிகள் ------------------------------------------------------------------
தமிழ்ச் சொற்களில் ஓரசைச் சொற்களும் பல அசைகளைக்கொண்ட சொற்களும் இருக்கின்றன.
ஆ, ஈ, தா, பல், ஆண் - இவை அனைத்திலும் ஒரு உயிர் ஒலிதான் உள்ளது. ஆகவே இவை ஓரசைச் சொற்களே!
''ஆ'', ''ஈ'' இரண்டிலும் அசையின் உச்சியாகிய உயிருக்கு முன்னால் தொடக்கமாகவும், பின்னால் ஒடுக்கமாகவும் எந்தவொரு மெய்யும் வரவில்லை. எனவே இவற்றில் அசையின் உச்சி மட்டுமே அமைந்துள்ளது.
0 - ஆ -0 ; 0 - ஈ - 0;
''தா'' என்ற சொல்லில் த் என்று தொடக்கமாக ஒரு மெய்யும் அதையடுத்து ஆ என்ற உச்சியும் வருகின்றன.
த் - ஆ - 0;
''பல் '' என்ற சொல்லில் ப் என்ற தொடக்கமும் அ என்ற உச்சியும் ல் என்ற ஒடுக்கமும் வருகின்றன.
ப் - அ - ல்;
''பார்த்-தான்'' என்ற சொல்லில் முதல் அசையில் தொடக்கமாக ''ப்' என்ற மெய்யும், அதையடுத்து உச்சியாக ''ஆ'' என்ற...
தமிழில் மொழியசையும் யாப்பசையும்!
தமிழில் மொழியசையும் யாப்பசையும்!
--------------------------------------------------------------------------------------
யாப்பிலக்கணத்தில் நேரசை, நிரையசை என்று பாரக்கிறோம். இதை யாப்பசை ( Prosodic Syllable) என்று கூறலாம். செய்யுள்களின் அமைப்பு அல்லது ஓசைக்கு இந்த அசை என்ற அலகு மிக அடிப்படையானது.
நேரசையில் ஒரு உயிர் மட்டுமே வரும் ( உல-கு, உல-கம், பா, பால்). கு, கம் என்பதில் ஒரு உயிரே வருகின்றது.
நிரையசையில் இரண்டு உயிர்கள் வரும் ( படி, படம், நிலா, விளாம்). இது யாப்பசையின் விதிகள்!
மொழியசை ( Linguistic Syllable) என்ற ஒன்று எல்லா மொழிகளிலும் உள்ளது. உயிரை அடிப்படையாகக்கொண்டே இந்த மொழியசை அமைகிறது. ஒரு உயிர் இருந்தால் ஒரு அசை. இரண்டு உயிர்கள் இருந்தால் ஈரசை. முதலில் குறிப்பிட்ட யாப்பு நேரசையில் ஒரு உயிரே இருக்கிறது. எனவே இது மொழியசை போன்று அமைந்துள்ளது. ஆனால் நிரையசையில் இரண்டு உயிர்கள்...
செவ்வாய், 15 நவம்பர், 2016
சந்தி - உடம்படுமெய்
5) நாம் முன்பு பார்த்துள்ள ஆறு கட்டாயச் சந்தி
விதிகளுடன் இன்று மேலும் ஒன்றைச்
சேர்த்துக்கொள்ளலாம்.
தமிழில் ஒரு சொல்லுக்குள் ஒரு உயிர் எழுத்தை
அடுத்து இன்னொரு உயிர் எழுத்து வராது. அவ்வாறு வருமிடத்தில் அந்த இரண்டு உயிர்களுக்குமிடையில் ஒரு இடையின மெய் - ''ய்'' அல்லது ''வ்'' - தோன்றும். இந்த இரண்டு மெய்களின் தோற்றத்தையே உடம்படுமெய் தோற்றம் என்று இலக்கணத்தில் அழைக்கின்றனர்.
''கிளி'' என்ற சொல்லோடு ''ஆ'' என்ற வினா விகுதி இணையும்போது, ''கிளியா? '' என்று அமைகிறது.
கிளி +ய்+ஆ = கிளியா?
''பூ'' என்ற சொல்லோடு '''ஆ '' என் வினா விகுதி இணையும்போது, ''பூவா?'' என்று அமைகிறது.
பூ + வ்+ ஆ - பூவா?
இ , ஈ , ஐ, ஏ (4 உயிர்கள்) - நிலைமொழி இறுதி:
---------------------------------------------------
தமிழில் நிலைமொழிகளின் இறுதியில் இ, ஈ, ஐ, ஏ ஆகிய உயிர்களில் ஏதாவது ஒன்று வந்து, வருமொழியில்...
ஞாயிறு, 13 நவம்பர், 2016
எளிமையான தமிழ்ச் சந்தி இலக்கணம்
சந்தி
இலக்கணம் மிக எளிமையானது! முயன்றால் வெகுவிரைவில் கற்றுக்கொள்ளலாம். நான் 1975-இல் முனைவர் பட்டப்
படிப்புக்காகப் பேராசிரியர் பொற்கோ அவர்களின் மாணவராகச் சேர்ந்தேன். அப்போது
சந்திபற்றிய தெளிவு எனக்குக் கிடையாது. என்னைப் போன்ற பிற மாணவர்களுக்காகவும்
பேராசிரியர் சில வகுப்புகளை நடத்தினார். அதன் சுருக்கமே பின்னர் '' நாமும் தமிழில்
தவறில்லாமல் எழுதலாம் '' என்ற நூலாக வெளிவந்தது. அதிலிருந்து தினந்தோறும் ஒரு
விதியைச் சந்தி இலக்கணத்தைக் கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு முகநூலில் அளிக்கிறேன். சில விதிகள்
கட்டாயமாகப் பின்பற்றப் படவேண்டியவை. அவற்றை முதலில் தருகிறேன்.
(1) இரண்டாம் வேற்றுமை - ''ஐ'' வேற்றுமை - விகுதியை ஏற்று
வருகிற எந்த ஒரு பெயர்ச்சொல்லையடுத்தும் (நிலைமொழி), வல்லின எழுத்தை
முதலாகக்கொண்ட ஒரு பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல் அல்லது வேறு எந்தவகைச் சொல்
(வருமொழி) வந்தாலும், நிலைமொழிக்கும்
வருமொழிக்கும்...