கொரானத் தொற்றுபற்றி மீண்டும் தெளிவாகத் தெரியும் உண்மை... பீதி தேவை இல்லை! ஊடகங்களின் '' பரபரப்புச் செய்திகளைப் '' புறக்கணியுங்கள்!
------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
1) கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மேலும் சில நாள்கள் ஆகலாம்.
2) ஆனால் தொற்று ஏற்பட்டவர்களில் குறைந்த விழுக்காட்டினரே கோவிட்-19 என்ற நோய்க்கு உட்படுகின்றனர்.
3) கோவிட் -19 நோய்க்கு உட்பட்டவர்களிலும் அதிலிருந்து விடுபட்டு குணமடைபவர்கள் எண்ணிக்கையே அதிகம்.
4) நோயில் இறப்பவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவே. அதிலும் வயது முதிர்வு, பிற உடல் பாதிப்புகள் உள்ளவர்களே அதிகம் உயிர் இழக்கிறார்கள்.
எனவே, கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் மனித இனம் மிகப் பெரிய வெற்றியையே பெற்றுவருகிறது. நமது உடலில் உள்ள நோய்த் தடுப்பாற்றல் இயக்கம் அல்லது மண்டலம் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது என்பது தெளிவாகிறது.
ஆகவே ஒவ்வொருவரும் தங்களது உடலில் உள்ள இயற்கையான நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்தின் திறமையைத் தக்கவையுங்கள்; மேலும் வளர்த்துக்கொள்ளுங்கள். அதற்கு என்னென்ன வழிகள் என்று பாருங்கள். தடுப்பூசி வருவது வரட்டும். ஆனால் அது வரும்வரைக்கும் நமக்கு ஆபத்துதான் என்று நினைக்கவேண்டாம். பன்னாட்டு மருந்துநிறுவனங்கள் மிகப் பெரிய இலாபத்தை எதிர்பார்த்து, கொரோனாவைப் பிரமாதப்படுத்துகிறார்கள். அது அவர்கள் இயல்பு. ஆனால் நாம் அதற்கு இரையாகக்கூடாது.
வரலாற்றைத் தீர்மானிப்பது மக்களே ... மக்கள் மட்டுமே! இது சமூக வரலாற்றுக்குப் பொருந்துவதுபோல்,, இயற்கையின் சீற்றங்கள் அல்லது பாதிப்புகளுக்கு எதிரான மக்களின் போராட்டங்களுக்கும் பொருந்தும். கொரானாவை ஒழித்துக்கட்டப்போவது மக்களே... தடுப்பூசி இல்லை! பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இல்லை! மனிதனை முதலில் நம்புவோம்... அடுத்து மருத்துவ அறிவியலை நம்புவோம்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக