தமிழகத்தின் தமிழ் வளர்ச்சிக்கு ஒளிபாய்ச்சிய கலங்கரை விளக்கங்கள் - பேரா. ச. அகத்தியலிங்கம் ( மொழியியல் - தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்) பேரா. மு. ஆனந்தகிருஷ்ணன் ( கணினித்தமிழ் - அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ) ஆகியோருடன் அமர்ந்து உரையாடும் வாய்ப்பு எனக்கு ( நவம்பர் 1, 2000) . சென்னைப் பல்கலைக்கழகத்தில் நான் ஏற்பாடு செய்த அனைத்துக் கருத்தரங்குகளிலும் தனது மறைவுவரை விடாது பங்குகொண்டு சிறப்பித்தவர் பேரா. அகத்தியலிங்கம். அதுபோன்று நான் நடத்திய அனைத்துக் கணினித்தமிழ் கருத்தரங்குகளிலும் பங்கேற்று எனக்கு ஆதரவளித்தவர் பேரா. மு. ஆனந்தகிருஷ்னண். கணினித்தமிழ் ஆய்வாளர்களை ஊக்கப்படுத்துவதில் அவருக்கு இணை வேறு யாரும் இன்றுவரை கிடையாது.எனக்கு இன்றுவரை ஊக்கப்படுத்தி வருபவர் ( "He (Prof. M.A) noted that only one professor in one department in one university in Tamil Nadu (N. Deiva Sundaram of University of Madras) was working in a field which needed inputs from many fields including computer science, physics, anatomy, and Tamil linguistics" March 1, 2000, "The Hindu"). இருவரின் படங்களையும் எனது முகநூல் பக்கத்தில் பதிவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக