நமது உடம்பின் இயற்கையான பாதுகாப்புக் காவலர்கள்
.... போர்வீரர்கள் ....
( பொதுமக்களுக்கான ஒரு பதிவு இது ! அறிவியல் துறைகளை - குறிப்பாக மருத்துவத் துறைகளை - சார்ந்தவர்களுக்கு இது இல்லை) -பகுதி 2
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவில் கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதில் நமது உடம்பின் தடுப்பாற்றல் இயக்கம் எவ்வாறு செயல்படுகிறது என்று பார்த்தோம். இதைத்தான் நமது உடம்பு இயற்கையாகப் பெறுகிற தடுப்பாற்றல் இயக்கத்தின் திறன் என்று கூறுகிறோம். இதன் பயனாக .. பாதிக்கப்பட்டவர் பாதிப்பிலிருந்து விடுதலை பெறுகிறார்! எதிர்காலத்தில் மீண்டும் கொரோனா வைரசு அவரைத் தொற்றிக்கொள்ள முயன்றாலும் வெற்றிகொள்கிறார்! இந்தத் தடுப்பாற்றல் இயக்கம் கொரோனாவைப்பற்றியும், அதனுடைய நச்சுப் புரதத்தைப் (antigen) பற்றியும், அதை எதிர்த்துப் போராட தான் உருவாக்கிய எதிர்ப்புப் புரதத்தையும் (antibody) , தான் முன்னர் அதை எதிர்த்துப் போராடிய வரலாற்றையும் , நினைவில் வைத்து இருக்கிறது! எனவே, அது மீண்டும் கொரோனாவைக் கண்டவுடனே சுட்டு ஒழித்துக்கட்டிவிடும்!
( பொதுமக்களுக்கான ஒரு பதிவு இது ! அறிவியல் துறைகளை - குறிப்பாக மருத்துவத் துறைகளை - சார்ந்தவர்களுக்கு இது இல்லை) -பகுதி 2
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவில் கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதில் நமது உடம்பின் தடுப்பாற்றல் இயக்கம் எவ்வாறு செயல்படுகிறது என்று பார்த்தோம். இதைத்தான் நமது உடம்பு இயற்கையாகப் பெறுகிற தடுப்பாற்றல் இயக்கத்தின் திறன் என்று கூறுகிறோம். இதன் பயனாக .. பாதிக்கப்பட்டவர் பாதிப்பிலிருந்து விடுதலை பெறுகிறார்! எதிர்காலத்தில் மீண்டும் கொரோனா வைரசு அவரைத் தொற்றிக்கொள்ள முயன்றாலும் வெற்றிகொள்கிறார்! இந்தத் தடுப்பாற்றல் இயக்கம் கொரோனாவைப்பற்றியும், அதனுடைய நச்சுப் புரதத்தைப் (antigen) பற்றியும், அதை எதிர்த்துப் போராட தான் உருவாக்கிய எதிர்ப்புப் புரதத்தையும் (antibody) , தான் முன்னர் அதை எதிர்த்துப் போராடிய வரலாற்றையும் , நினைவில் வைத்து இருக்கிறது! எனவே, அது மீண்டும் கொரோனாவைக் கண்டவுடனே சுட்டு ஒழித்துக்கட்டிவிடும்!
ஆனால்
இதற்கு ஒவ்வொருவரும் கொரோனாத் தொற்றலுக்கு உட்பட்டு ... போராடி ... வெற்றிபெற்று
இருக்கவேண்டும். சரி. நிச்சயமாகக் கொரோனாத் தொற்றாலும் அது ஏற்படுத்துகிற நோயின்
தாக்கத்திலிருந்தும் ஒருவர் மீண்டுவருவார் என்பதற்கு உத்தரவாதம் தரமுடியுமா?
முடியாதுதான்!
அப்படியென்றால்
... ? அதற்குத்தான் இயற்கையான தடுப்பாற்றல் திறனுக்கு ... கொரோனா வைரசை நேரடியாகச்
சந்திப்பதற்குமுன்பே பயிற்சி அளிக்க மேற்கொள்ளும் செயற்கைப் பயிற்சியே தடுப்பூசி
செலுத்துதல் ஆகும். இந்தப் பயிற்சியில் கொரோனா வைரசின் நச்சுப் புரதத்தை உடம்பின்
தடுப்பாற்றல் இயக்கத்திற்கு அறிமுகப்படுத்தி.... கற்றுக் கொடுத்து... .. அதைப்
போராடுவதற்கான எதிர்ப்புப் புரதத்தை உருவாக்கிக் வைத்துக்கொள்ள பயிற்சி அளிக்க
மேற்கொள்ளும் முயற்சியே தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆகும்.
இதுதான்
செயற்கையான தடுப்பாற்றல் திறன்( artificial immunity ) என்று அழைக்கப்படுகிறது.
கொரோனா வைரசின் பண்புக்கூறுகளையும் ( genetic and chemical properties) அது
உருவாக்கும் நச்சு புரதத்தைப்பற்றியும் ( antigen) தெளிவாகப் புரிந்துகொண்டு...
அந்த வைரசைச் செயற்கையாக உருவாக்கி... நமது உடம்புக்குள் செலுத்தி .... நமது
தடுப்பாற்றல் இயக்கத்தைத் தூண்டமுடியாதா? அவ்வாறு தூண்டியவுடன்... நமது
தடுப்பாற்றல் இயக்கம் அதை எதிர்த்துப் போராடுவதற்கு .. உடனடியாகத் தேவையான
எதிர்ப்புப் புரதத்தை (antibody) உருவாக்கிக் கொள்ளச் செய்யமுடியாதா? அவ்வாறு
உருவாக்கிக்கொண்டால்.. பின்னர் உண்மையிலேயே வெளியிலிருந்து கொரோனா வைரசு உடம்பில்
புகுந்தால்.. உடனடியாகத் தனது நினைவில் வைத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு...
எதிர்ப்புப் புரதத்தை உருவாக்கி.. கொரோனாவைக் கொன்றுவிடமுடியாதா? முடியும்
என்பதுதான் மருத்துவ அறிவியலின் முடிவு ... பிற வைரசுகளை எதிர்த்து உருவாக்கப்பட்ட
தடுப்பூசிகளின் வெற்றியும் இதை உறுதிப்படுத்துகிறது!
ஆனால்
இங்குச் சில சிக்கல்கள்! ஒன்று, வைரசை எவ்வாறு உருவாக்குவது? இரண்டு, அவ்வாறு
உருவாக்கி, உடம்புக்குள் செலுத்தப்பட்ட வைரசு, உடம்பின் தடுப்பாற்றல்
இயக்கத்தையும் மீறி, உடம்பைப் பாதித்து, உயிரிழப்புக்கு இட்டுச் செல்லாமல்
இருக்கவேண்டும்.
முதல்
சிக்கலுக்குத் தீர்வு .. கொரோனா வைரசின் வேதியியல் கூறுகளை - புரத அமிலங்களை - டி
என் ஏ, ஆர் என் ஏ -க்களை - முதலில் சில பாக்டீரியாக்களின் செல்களுக்குள்
செலுத்திக் கொரோனா வைரசை உருவாக்கி ... பின்னர் அதைக் கொன்றோ அல்லது உடம்பில்
பாதிப்பை ஏற்படுத்தாதவகையில் முடமாக்கியோ.. உடம்புக்குள் செலுத்த முயற்சி மேற்கொள்ளலாம்.
அல்லது வைரசின் நச்சுப் புரதத்தைமட்டும் தனிமைப்படுத்தி உடலுக்குள் செலுத்தலாம்.
அவ்வாறு செலுத்தப்பட்ட கொரோனா வைரசின் நச்சுப் புரதத்தை... நமது தடுப்பாற்றல்
இயக்கம் பார்த்தவுடன்... உடனடியாக அதை எதிர்த்துப் போராட எதிர்ப்புப் புரதத்தை
உருவாக்கிக் கொள்ளலாம் அல்லவா? இதைத்தான் adaptive artificial active immunization
என்று அழைக்கிறார்கள்.
மேற்கூறிய
அடிப்படையில்தான் இன்று உலகெங்கும் 100 -க்கு மேற்பட்ட மருந்துத் தயாரிப்பு -
ஆய்வு நிறுவனங்கள் கொரோனாவுக்குத் தடுப்பூசியைக் கண்டுபிடிக்க முயல்கின்றன. இந்த
நிறுவனங்களின் வழிமுறைகளில் பல வேறுபாடுகள் உண்டு. இதற்காகக் கோடியே கோடி டாலர்கள்
முதலீடு செய்யப்பட்டு வருகின்றன. தற்போது இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும்
அமெரிக்காவின் மாடர்னா என்ற நிறுவனமும் சீனாவில் சில நிறுவனங்களும் ஜெர்மனியில்
சில நிறுவனங்களும் இந்த முயற்சியில் வெற்றிகண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால்
தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், அது பல்வேறு வகையிலான சோதனைகளுக்கு
உட்படுத்தப்படவேண்டும். முதலில் இது மனிதர்களுக்கு ஊறு விளைவிக்காது என்பதையும்
எவ்வளவு அளவு கொடுக்கப்படவேண்டும் என்பதையும் கண்டறிய சுமார் 100 நபர்களுக்குக்
கொடுத்துப்பார்க்கவேண்டும். அடுத்து, இன்னும் அதிக நபர்களுக்குக் கொடுத்துப்
பார்க்கவேண்டும். மூன்றாவதாக, கொரோனா பாதித்துள்ள பகுதிகளில் கொடுத்துப்
பார்க்கவேண்டும். இந்தச் சோதனைகளை எல்லாம் தாண்டினால்தான் ... ஐநா சபை அல்லது
பல்வேறு நாடுகளின் அரசு மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகள் இந்தத் தடுப்பூசிகளைப்
பெரிய அளவில் உற்பத்திசெய்து, மக்களுக்கு விற்கலாம் என்று அனுமதிக்கும். சில
நிறுவனங்கள் முதல் கட்டத்தைத் தாண்டிவிட்டன என்று கூறப்படுகிறது. மிகச் சில
நிறுவனங்கள் இரண்டாவது கட்டத்தையும் தாண்டிவிட்டன என்றும் கூறப்படுகிறது.
மற்றொரு
வழிமுறையும் ஆய்வில் உள்ளது. நேரடியாகவே தடுப்பாற்றல் இயக்கம் உருவாக்கும்
எதிர்ப்புப் புரதத்தை உருவாக்கி, கொரோனா பாதித்தவரின் உடம்புக்குள் ஏற்றினால்?
அதாவது, கொரோனா வைரசின் நச்சுப் புரதத்தை உடம்புக்குள் ஏற்றி, அதற்கு எதிராக
எதிர்ப்புப் புரதத்தை நமது தடுப்பாற்றல் இயக்கம் உருவாக்குவதற்குப் பதிலாக,
நேரடியாகவே எதிர்ப்புப் புரதத்தை உடம்பில் ஏற்றினால்? இதைத்தான் பிளாஸ்மா
மருத்துவம் (Plasma Transfer) என்று அழைக்கிறார்கள். அதாவது, ஏற்கனவே கொரோனாவால்
பாதிக்கப்பட்டு, பின்னர் அதை எதிர்த்துப் போராடி.. வெற்றிபெற்றவர்களின்
இரத்தத்தின் வெள்ளை அணுக்களின் பிளாஸ்மா செல்களில் உருவாகியுள்ள எதிர்ப்புப்
புரதத்தைச் (antibody) சேகரித்து. தற்போது கொரோனாவின் கடுமையான பாதிப்புகளுக்கு
உட்பட்டவர்களின் உடலில் செலுத்துவது ஆகும். adaptive artificial passive immunization
என்று அழைக்கிறார்கள்.
முந்தைய
பதிவின் அடிப்படையிலும் இந்தப் பதிவின் அடிப்படையிலும் நமது உடம்பின் இயற்கையான
தடுப்பாற்றல் இயக்கத்தை வளர்த்துக்கொள்ள .. நல்லமுறையில் தக்கவைத்துக்கொள்ள நாம்
செய்யவேண்டியது என்ன? உலகில் உள்ள இலட்சக்கணக்கான மருத்துவர்கள், மருத்துவ
விஞ்ஞானிகள், மருத்துவ மனைகள் - எல்லோரும் சேர்ந்து , மிகவும் கஷ்டமாகச் செய்கிற
அனைத்து நடவடிக்கைகளையும் மிகச் சர்வசாதாரணமாகச் செய்கிற ... நமது உடம்பில்
இயற்கையாகவே எவ்விதக் கட்டணமும் வாங்காமல் இயங்குகிற ... நமது இயற்கையான
தடுப்பாற்றல் இயக்கத்தை நாம் எந்த அளவு புரிந்துகொண்டு... மதித்து... மரியாதை
அளித்து.. பாதுகாக்கவேண்டும் என்பதுபற்றி நாளை பார்க்கலாம்! ஆங்காங்கே சில
ஆங்கிலக் கலைச் சொல்களைப் பயன்படுத்தியுள்ளேன். மன்னிக்கவும்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக