எழுத்தாளர் செ. கணேசலிங்கன் ... தற்போது வயது 85-க்குமேல். எனக்கு அவர் 1974-லிருந்து 40 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர். நீண்ட பயணம் (1965), சடங்கு (1966), செவ்வானம் (1967) என்று தொடங்கி இன்றுவரை 100 நூல்கள் ( நாவல்கள், சிறுகதைகள், ஆய்வுநூல்கள்) எழுதியுள்ளார். ஆண்டுக்கு குறைந்தது இரு நூல்கள் என்பது அவரது திட்டம். இந்தத் திட்டத்தில் இன்றுவரை அவர் தவறியதே கிடையாது. சடங்கு நாவலுக்குப் பேரா. க. சிவத்தம்பியின் முன்னுரை, செவ்வானம் நாவலுக்குப் பேரா. கைலாசபதி முன்னுரை... இன்றைய சமூகமாற்றத்திற்குத் தேவையான கருத்துகளைப்பற்றி ஆராய்ந்து, அதனடிப்படையில் நூல்கள் படைப்பதே அவரது வழக்கம். எளிய வாழ்க்கை முறை... நண்பர்களுக்கு வெளியுலகத்திற்குத் தெரியாமல் உதவி செய்வதில் கைதேர்ந்தவர். கைலாசபதியை மிகச் சரியாகத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் அவரது நூல்களை வெளியிட்டதுமூலம்... இயக்குநர் பாலுமகேந்திராவின் வளர்ச்சிக்கு இவரே ஆணிவேர் ... தனது எழுத்துகளுக்கு அவர் கருத்துகளை உருவாக்கும்போது, நானும் அவரும் பல மணிநேரம் விவாதிப்போம். எழுத்துப் பிரதியை நான் படித்து, கருத்து வைத்தபிறகுதான் வெளியிடுவார் ( 1980,90-களில்). அந்தப் பணியை இப்போது நான் சரிவரச் செய்வது கிடையாது. எனது மகன் திருமணநிகழ்ச்சியில் (2013) மணமக்களை வாழ்த்துகிறார். அவனுக்குச் சிறுவயதில் போர்வீரர்கள் பொம்மைகளை இலங்கையிலிருந்து வாங்கிவருவது அவரது வழக்கம். குந்தவி, மான்விழி (மகள்கள்) குமரன் (மகன்) இவருக்கு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக