பேரா. ஆறு. இராமநாதன் … தமிழகத்தின் நாட்டுப்புறவியலில் தலைசிறந்த ஆய்வாளர்களில் ஒருவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டம் (1971-73). ஓராண்டு மொழியியலும்
படித்தார். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பேரா. அ.ந. பெருமாள் அவர்களுடைய மேற்பார்வையில் தென்னாற்காடு மாவட்ட நாட்டுப்புறப்பாடல்களைப்பற்றிய ஆய்வில் (1980) முனைவர் பட்டம். 1981-82 -இல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித்துறையில் பாரதியார்பற்றிய முதுமுனைவர் ஆய்வு. 1982- இலிருந்து 2011 வரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையில் பேராசிரியர் பதவியும் துறைத்தலைவர் பதவியும் வகித்தார். அங்கே பதிப்புத்துறை இயக்குநராகவும் ஐந்தாண்டுகள் பொறுப்பு . 2011 – இல் பணி ஓய்வு. தற்போது புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் சிறப்புநிலைப் பேராசிரியர். நாட்டுப்புறவியலில் 40 ஆண்டுகால ஆய்வு. ஏராளமான ஆய்வு நூல்கள் .. ஆய்வுக்கட்டுரைகள். நாட்டுப்புறப்பாடல் களஞ்சியம் – 10 தொகுதிகள் .. நாட்டுப்புறக் கதைக்களஞ்சியம் 15 தொகுதிகள் .. இவரின் வழிகாட்டுதலில் வெளிவந்துள்ளன. இவருடைய இரண்டு நூல்களுக்குத் தமிழக அரசின் இரண்டு விருதுகள். இவருடைய பெரும்பான்மையான ஆய்வுகள் நேரடிக் கள ஆய்வில் உருவானவை என்பது குறிப்பிடத் தகுந்தது. பொறுமை, நிதானம் – இவருக்கே உள்ள தனிச்சிறப்பு. நானும் இவரும் முனைவர் பட்ட ஆய்வில் உடன் பயின்றவர்கள் … 40 ஆண்டுகால நண்பர்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக