ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

''மகா விஷ்ணு அவதாரத்திற்கான'' அடிப்படைகள் .

 ''மகா விஷ்ணு அவதாரத்திற்கான'' அடிப்படைகள் .-------------------------------------------------------------நிலவும் புறக்கூறுகளிலிருந்து உண்மையைக் கண்டறிவதே அறிவியலின் அடிப்படை (Finding out the truth from the existing facts - the basis of science.)பொருண்மை அல்லது பருப்பொருளின் பண்புக்கூறுகளே புறக்கூறுகள் ஆகும்(Facts are the properties of matter which are reflected in the mind.)நமது மனதுக்கு வெளியே நீடித்து, நமது மனதில் பிரதிபலிக்கிற ஒன்றே பொருண்மை அல்லது பருப்பொருள்; மாறக, நமது மனம் பருப்பொருளைச் சார்ந்ததே. பருப்பொருளின் இருத்தல் நமது மனதைச் சார்ந்தது இல்லை - இதுவே பொருள்முதல்வாதம். (The matter is the one that exists outside of our mind and is reflected in our mind; on the contrary, our mind depends of the matter. The existence of matter does not depend upon of our mind - this is called...

மார்க்சிய ஆய்வுமுறை

மார்க்சிய ஆய்வுமுறை நான் குறிப்பாக, தமிழ் இலக்கியம், மொழி, பண்பாடு, சமூகவியல் போன்ற துறைகளுக்கான மாணவர்களுக்குத் தேவையான ஆய்வுநூல்களைப் பரிந்துரைத்துள்ளேன். நான் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் எல்லோரும் தங்கள் தத்துவக் கண்ணோட்டத்தில் மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள். நானும் ஒரு மார்க்சியவாதிதான். வெளிப்படையாகக் கூறுகிறேன்.நான் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் கல்வித்துறையில் பேராசிரியர்கள். சிறந்த ஆய்வாளர்கள். அவர்கள் மார்க்சிய ஆய்வுமுறைகளைப் பின்பற்றிய காரணத்தால்தான் தங்கள் துறைகளில் மிகச் சிறந்த ஆய்வுகளை முன்வைக்கமுடிந்தது. அறிவியலில்கூட ஜே டி பர்னால், ஜோசப் நீதாம் போன்றவர்கள் மிகப் பெரிய ஆய்வுகளை முன்வைத்துள்ளார்கள். சமூக இயக்கத்தோடு அறிவியலைப் பிணைத்துப் பார்த்த காரணத்தினால்தான் அவர்களால் தங்கள் துறைகளில் சாதனைபுரிய முடிந்தது.மார்க்சியமானது பொருளாதாரம், அரசியல் என்பதைத் தாண்டி ,...

சனி, 7 செப்டம்பர், 2024

இந்திய அரசியல் பொருளாதாரத்தில் ஆர்வமுடையவர்களுக்குமட்டும் . . . ''தினமணி'' கட்டுரைபற்றி!

 இந்திய அரசியல் பொருளாதாரத்தில் ஆர்வமுடையவர்களுக்குமட்டும் . . . ''தினமணி'' கட்டுரைபற்றி!------------------------------------------------------------------சில நாள்களுக்குமுன் . . . ஆகஸ்டு 26 ஆம் தேதி ''தினமணி'' நாளிதழில் தலையங்கப் பக்கத்தில் முனைவர் கோ. விசுவநாதன் அவர்கள் (VIT University வேந்தர், முன்னாள் எம் பி) ''பொருளாதார ஆய்வு - எச்சரிக்கை மணி'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில குறிப்புக்கள்(மட்டும்) நாம் கவனத்தில் கொள்ளவேண்டியவை என்ற நோக்கில் இப்பதிவை இடுகிறேன். நடுவண் அரசு இந்தாண்டுக்கான நிதி அறிக்கையைப் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்குமுன் . . . ''பொருளாதார ஆய்வறிக்கையை'' நிதியமைச்சர் தாக்கல்...

பள்ளிகளில் ''மகா விஷ்ணு'' அவதாரம்!

 பள்ளிகளில் ''மகா விஷ்ணு'' அவதாரம்! ------------------------------------------------------ ''இறைவணக்கத்துடன்தான்'' அனைத்துப் பள்ளிகளும் தங்கள் பணிகளைத் ''தொடங்குகின்றன''. '' பாவம்'' ''புண்ணியம்'' போன்ற கருத்துக்களை அடிப்படையாகக்கொண்ட பல ''இலக்கியங்கள்'' ''புராணங்கள்'' ''நாட்டுப்புறக் கதைகள்'' பள்ளிப்பாடங்களில் இடம் பெறுகின்றன. ''பாவம் செய்தவன் பல்லக்கு தூக்குவான்; புண்ணியம் செய்தவன் பல்லக்கில் பயணம் செய்வான்'' என்பதை முன்வைக்கும் ''அற இலக்கியங்களே'' கற்றுக் கொடுக்கப்படுகின்றன. '' ''பெண்ணடிமை'' ''ஆண் ஆதிக்கம்'' போன்ற கருத்துக்களைப் போதிக்கும் பாடங்கள் இடம் பெறுகின்றன. கணவன் தன்னைப் பிரிந்து சென்றாலும், அவன் வருகைக்காக வாசலில் காத்திருக்கவேண்டும் ; காலையில் எழுந்தவுடன் கணவனின் கால்களைத் தொழுது தன் ''பணிகளைத்'' தொடங்கவேண்டும் போன்ற பெண் அடிமைக் கருத்துக்களைக் கூறும் இலக்கியங்களே ''பாராட்டப்படுகின்றன''....

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India