சனி, 7 செப்டம்பர், 2024

பள்ளிகளில் ''மகா விஷ்ணு'' அவதாரம்!

 

பள்ளிகளில் ''மகா விஷ்ணு'' அவதாரம்!

------------------------------------------------------

''இறைவணக்கத்துடன்தான்'' அனைத்துப் பள்ளிகளும் தங்கள் பணிகளைத் ''தொடங்குகின்றன''.

'' பாவம்'' ''புண்ணியம்'' போன்ற கருத்துக்களை அடிப்படையாகக்கொண்ட பல ''இலக்கியங்கள்'' ''புராணங்கள்'' ''நாட்டுப்புறக் கதைகள்'' பள்ளிப்பாடங்களில் இடம் பெறுகின்றன. ''பாவம் செய்தவன் பல்லக்கு தூக்குவான்; புண்ணியம் செய்தவன் பல்லக்கில் பயணம் செய்வான்'' என்பதை முன்வைக்கும் ''அற இலக்கியங்களே'' கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ''

''பெண்ணடிமை'' ''ஆண் ஆதிக்கம்'' போன்ற கருத்துக்களைப் போதிக்கும் பாடங்கள் இடம் பெறுகின்றன. கணவன் தன்னைப் பிரிந்து சென்றாலும், அவன் வருகைக்காக வாசலில் காத்திருக்கவேண்டும் ; காலையில் எழுந்தவுடன் கணவனின் கால்களைத் தொழுது தன் ''பணிகளைத்'' தொடங்கவேண்டும் போன்ற பெண் அடிமைக் கருத்துக்களைக் கூறும் இலக்கியங்களே ''பாராட்டப்படுகின்றன''.

''ஆன்மீகத்தை'' அடிப்படையாகக் கொண்ட ''பாடங்களுக்குப்'' பஞ்சமே இல்லை!

ஒட்டுமொத்தத்தில் ''இயற்கையை இயக்குவது'' இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியே என்பது நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்றைய கல்வியில் ''கற்றுக்கொடுக்கப்படுகிறது''!

இதன் ஒரு பகுதியே இன்றைய ''மகாவிஷ்ணுவின்'' ஒரு அவதாரம்! இதில் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை! ஏதோ இவர் ஒரு ''புதிய'' அவதாரம் என்று நினைக்கவேண்டாம். ''மகா விஷ்ணு'' பல நிலைகளில் பள்ளிக்கல்வியில் "நீடிக்கிறார் " என்பதே உண்மை.

 

''அரசியல் அற்ற'' ஆன்மீகம் கிடையாது. ஆன்மீகத்திற்கு ''அரசியல்'' உண்டு. அந்த ''அரசியல்'' பல நேரங்களில் இலைமறைவு காயாக இருக்கும். சில நேரங்களில் வெளிப்படையான ''மகாவிஷ்ணுவாக'' தோன்றும். இவ்வாறு வெளிப்படையாகத் தோன்றுவதற்கு அடிப்படையே ''பள்ளிக்கல்வியில் நீடிக்கிற ஆன்மீகம்தான்'' என்பதே நான் கூற விரும்புவது ஆகும்.

''ஒருவனே தேவன்'' என்பதும் ''ஆன்மீகம்தான்''! ''மத வெறி'' ''மத நல்லிணக்கம்'' ''மதச் சார்பின்மை'' போன்ற எல்லாமுமே ''ஆன்மீக அரசியலின் '' பல்வேறு வடிவங்கள்தான். சூழலைப்பொறுத்து ஒவ்வொரு வடிவமும் ''முன்னிலைப்படுத்தப்படும்''. நான் தற்போதைய ''மகாவிஷ்ணு அவதாரத்தைக் '' கண்டிக்கக்கூடாது என்று கூறவரவில்லை. மாறாக, இந்த ''மாக விஷ்ணு அவதாரத்திற்கு'' அடிப்படையே பள்ளிக்கல்வியில் நீடிக்கிற ''ஆன்மீகமே'' என்றுதான் கூறவந்துள்ளேன். அதுதான் ''ஆணிவேர்''. அதிலிருந்து அவ்வப்போது வெளிப்படையாகத் தோன்றி நிற்பதுதான் இந்த ''மகாவிஷ்ணு''!

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஆன்மீகத்திற்கு அரசியல் இருப்பதுபோல, ஆன்மீக எதிர்ப்பிற்கும் உறுதியாக அரசியல் உண்டு. தங்களுடைய கண்ணோட்டத்தின் அடிப்படையில் ''ஆன்மீக உணர்வு மனிதனை நெறிப்படுத்த'' இன்றியமைதாதது. என்னுடைய கண்ணோட்டத்தின்படி ''ஆன்மீக உணர்வு '' அடிப்படையில் அறிவியலுக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் தடையானது என்பதாகும். இதுபற்றிய விவாதத்தை இங்குத் தொடங்க நான் விரும்பவில்லை. ஆன்மீகத்தைப் பள்ளிக்கல்வியில் அறிமுகப்படுத்தும்போது, ஆன்மீகத்திற்கு மாற்றான பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தையும் அறிமுகப்படுத்தலாமே. எது சரியானது என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ளட்டுமே. பொருள்முதல்வாதத் தத்துவத்தைமட்டும் பள்ளிகளுக்குள் நுழையவிடாமல் ஏன் தடுக்கவேண்டும்?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India