ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

''மகா விஷ்ணு அவதாரத்திற்கான'' அடிப்படைகள் .

 ''மகா விஷ்ணு அவதாரத்திற்கான'' அடிப்படைகள் .

-------------------------------------------------------------
நிலவும் புறக்கூறுகளிலிருந்து உண்மையைக் கண்டறிவதே அறிவியலின் அடிப்படை (Finding out the truth from the existing facts - the basis of science.)
பொருண்மை அல்லது பருப்பொருளின் பண்புக்கூறுகளே புறக்கூறுகள் ஆகும்(Facts are the properties of matter which are reflected in the mind.)
நமது மனதுக்கு வெளியே நீடித்து, நமது மனதில் பிரதிபலிக்கிற ஒன்றே பொருண்மை அல்லது பருப்பொருள்; மாறக, நமது மனம் பருப்பொருளைச் சார்ந்ததே. பருப்பொருளின் இருத்தல் நமது மனதைச் சார்ந்தது இல்லை - இதுவே பொருள்முதல்வாதம். (The matter is the one that exists outside of our mind and is reflected in our mind; on the contrary, our mind depends of the matter. The existence of matter does not depend upon of our mind - this is called materialism.)
புற உலகில் அனைத்தும் ஒன்றை ஒன்றுச் சார்ந்ததே ; தொடர்ந்து மாறிக்கொண்டு இருப்பதே. (Everything is relative and everything changes - this is the essence of dialectics.)
ஆனால் பொருள்முதல்வாதம் அனுபவவாதத்திலிருந்து மாறுபட்டது ( Materialism is different from empiricism).
அனுபவ அறிவிலிருந்து மனித மூளையால்
பெறப்படுகின்ற பகுத்தறிவை அனுபவவாதம் ஏற்றுக்கொள்ளாது. ஆனால் பொருள்முதல்வாதம் ஏற்றுக்கொள்ளும் ( Empiricism won't accept rational knowledge; but materialism accepts rational knowledge).
இந்த மார்க்சிய மெய்ஞ்ஞானமே - அதன் அறிவுபற்றிய கோட்பாடே - அனைத்து அறிவியல் உண்மைகளுக்கும் அடிப்படை (This Marxist Philosophy - its theory of knowledge - is the basis for all scientific discoveries and scientific thoughts).
எனவேதான் பள்ளி அல்லது கல்லூரிக் கல்வி மேற்குறிப்பிட்ட அணுகுமுறையை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று நான் கூறுகிறேன்.
ஆனால் தற்போதைய கல்வியெல்லாம் , அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் தனிமனிதர்களின் மூளையில் ''உதித்த'' - புற உலகைச் சார்ந்திராத - கருத்துக்கள் என்பதையே முன்னிலைப்படுத்துகிறன்றன.
இதுவே கருத்துமுதல்வாதத்தின் ஒரு வடிவமான ''ஆன்மீகத்தின்'' அடிப்படை ஆகும். இந்த ''ஆன்மீகம்தான்'' தற்போது நிலவுகிற கல்வியில் பல வகைகளில் வெளிப்படுகிறது. அதன் ஒரு வகை வெளிப்பாடே இந்த ''மகாவிஷ்ணு அவதாரம்''! கல்விமுறையில் இந்த ''ஆன்மீக அடிப்படை'' வெளியேற்றப்படும்வரை , ''மகாவிஷ்ணுக்கள்'' அவ்வப்போது வந்துகொண்டுதான் இருப்பார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India