பேச்சுத் தொழில்நுட்பமும் மொழிபெயர்ப்பும் ( Speech Technology and Automatic Translation) . . . (1) தமிழ்மொழி, மொழியியல் , கணினிமொழியியல் ஆய்வுமாணவர்களுக்குப் பயன்படும் ( அல்லது பயன்படலாம்!) பதிவு-------------------------------------------------------------------------------------------------------------இன்று கணினி உலகின் புரட்சி மிகப் பெரிய அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒருவர் ஒரு குறிப்பிட்ட மொழியில் பேசுவதை மற்றொரு மொழியில் மொழிபெயர்த்துத் தரும் கணினித் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்துவருகிறது. இந்தத் தொழில் நுட்பத்தைத் தமிழுக்குச் செயல்படுத்தப் பல கல்வி நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் முயன்றுவருகின்றன. விரைவில் இந்த ஆய்வு வெற்றியடைந்து தமிழ் உலகத்திற்குப் பயன் தரவேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்தே இருக்கமுடியாது; இருக்கவும்கூடாது. மேற்கண்ட ஆய்வில் ஈடுபடுகிறவர்கள்...
செவ்வாய், 19 டிசம்பர், 2023
சனி, 9 டிசம்பர், 2023
யாருக்கு இழப்பு . . . ?
யாருக்கு இழப்பு . . . ?---------------------------------------------------------------------------------------------------------------------மிகப்பெரிய மாடிகளில் . . . மாளிகைகளில் வசிக்கிற மிகப் பெரிய பணக்காரர்களுக்கு மழை, வெள்ளத்தால் இழப்பு ஒன்றும் இல்லை! அவர்களுக்குச் சமமாக . . . இழப்பதற்கு ஒன்றுமில்லாத நடைபாதைவாசி மக்களுக்கும் ஒருநாள் தூக்கம்மட்டுமே இழப்பு! இழப்புக்கு உட்பட்டவர்கள் ''சிறு உடைமையாளர்களான '' நடுத்தர, உயர் நடுத்தர மக்க...
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னையில் உங்களுக்குத் தெரிந்த ஊர்கள் . . . அடிப்படைக் காரணங்கள்!
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னையில் உங்களுக்குத் தெரிந்த ஊர்கள் . . . அடிப்படைக் காரணங்கள்! -----------------------------------------------------------------------------------------------------முதற்பட்டியல் (நீண்ட கால வரலாறு உடையவை) : மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, வேப்பேரி, பாரிமுனை, அடையாறு, திருவான்மியூர், எழும்பூர், புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, மாதவரம், எர்ணாவூர், புழல், ராயபுரம், புளியந்தோப்பு, பெரம்பூர், சூளை, பட்டாளம்இரண்டாம் பட்டியல் (இடைக்கால வரலாறு உடையவை) : வேளச்சேரி, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், பெரும்பாக்கம், மாம்பாக்கம், ஒட்டியம்பாக்கம், கொளப்பாக்கம், பள்ளிக்கரணை, முகலிவாக்கம், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, கோவிலம்பாக்கம், மணலி, மாதவரம், திருவேற்காடு, கொரட்டூர், முடிச்சூர், மண்ணிவாக்கம், கண்ணம்பாளையம், கொடுங்கையூர்மூன்றாம் பட்டியல் (''நவீன நகர்கள்'')...
சென்னை வெள்ளப்பாதிப்பிற்கு நிரந்தரத் தீர்வு !
சென்னை வெள்ளப்பாதிப்பிற்கு நிரந்தரத் தீர்வு !----------------------------------------------------------------------------------------------------------------------சென்னை வெள்ளப்பாதிப்புக்கு இனி யாராலும் நிரந்தரத் தீர்வைத் தரமுடியாது. "இறந்தவர் மீண்டும் வரமுடியாது; ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்கவும் முடியாது!''வேண்டுமென்றால் . . . ஆங்காங்கே படகு நிலையம், மக்களைத் தங்கவைப்பதற்கான இல்லங்கள் (Community halls) போன்றவற்றை அமைக்கலாம். அனைவருக்கும் கட்டாய நீச்சல் பயிற்சி அளிக்கலாம். அனைவருக்கும் உயிர்காக்கும் ரப்பர் வளையம் அளிக்கலாம்.அல்லது ஆங்காங்கே பெரிய சுரங்கங்கள் அமைத்து, அதன்வழியே மழைத்தண்ணீரை, சென்னைக்கு வெளியே தற்போது இருக்கிற வெற்று நிலங்களில் (இருந்தால்!!!) புதிய புதிய அணைக்கட்டுக்களைக் கட்டி, அவற்றில் தேக்கிவைக்கலாம். இதன்மூலம் தண்ணீர் பிரச்சினையையும் தீர்க்கலாம்.இதற்கு வேண்டிய...
சிறப்புப் பட்டிமன்றம் . . . எரிந்த கட்சி ! எரியாத கட்சி லாவணி!
சிறப்புப் பட்டிமன்றம் . . . எரிந்த கட்சி ! எரியாத கட்சி லாவணி! ----------------------------------------------------------------------------------------------------சென்னை வெள்ளத்திற்கு என்ன காரணம்?மழையின் அளவு அதிகமா? குறைவா?கடல் மழைத்தண்ணீரை உள்வாங்கியதா? இல்லையா?''எங்கள் ஆட்சியிலும்தான் கடல் இருந்தது!'' ''பௌர்ணமியில்மட்டுந்தான் கடல் வெளிநீரை உள்வாங்காது . . . இப்போது பௌர்ணமி இல்லையே!'' போன்ற ''அறிவியல் உண்மைகளையெல்லாம்'' விவாதிக்கிறார்கள்! தொலைக்காட்சிகளைப் பார்த்தாலே . . . இந்தப் பட்டிமன்றந்தான் நடந்துகொண்டிருக்கிறது! மக்கள் என்ன அவ்வளவு பெரிய முட்டாள்களா? அதே நேரத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் அலைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது! எனக்குத் தெரிந்து 50 ஆண்டுகளுக்குமுன்பு சென்னையின் புறப்பகுதியில் அடுக்குமாடிக் கட்டிடங்கள் கிடையாது. பன்னாட்டுக் கணினி நிறுவனங்கள் கிடையாது!...
ஒரு இனத்தின் பண்பாடு, மொழி ஆகியவற்றின் வளர்ச்சி விதிகள் . . .
ஒரு இனத்தின் பண்பாடு, மொழி ஆகியவற்றின் வளர்ச்சி விதிகள் . . . --------------------------------------------------------------------------------------------------- ஒரு இனத்தின் பண்பாடோ அல்லது அதன் மொழியோ வரலாற்றில் மாறும்; மாறவேண்டும். வளர்ச்சி அடையும்; வளர்ச்சி அடையவேண்டும், அதில் ஐயம் இல்லை. ஆனால் அந்த மாற்றங்கள் அவற்றினுடைய - பண்பாடு, மொழி ஆகியவற்றின் - உள்ளார்ந்த இயக்கவியல் அடிப்படையில்தான் மாறும். வெளியிலிருந்து எந்தவொரு மாற்றமும் கொண்டுவரப்பட்டால், அந்த மாற்றம் அந்த இனத்தின் பண்பாடு, மொழியின் உள்ளார்ந்த இயக்கவியலுக்கு - வளர்ச்சி விதிகளுக்கு- உட்பட்டு இருந்தால்தான் ஏற்றுக்கொள்ளும். இல்லையென்றால் அது தானாக மறுக்கப்பட்டுவிடும். கடலில் போடப்படுகிற அந்நியப் பொருள்கள் கடலால் ஏற்றுக்கொள்ளப்படாமல், கரையில் ஒதுக்கிவிடப்படுவதுபோல ஒதுக்கப்பட்டுவிடும். எந்தவொரு பொருளின் மாற்றத்திற்கும்...