1)
--------------------------------------------------------------------------------------------------------------------------
வினைகளின் வினைத்திரிபு வகைப்பாட்டுக்கும் (தமிழ்
லெக்சிகன் - சென்னைப் பல்கலைக்கழகம் வெளியீடு) அவற்றிலிருந்து பிறக்கும் பெயர்களுக்கும்
இடையில் தொடர்பு இருக்கிறது. இது ஒரு வியப்பான தமிழ் இலக்கண இயல்பு.
இதுபற்றிய தெளிவை எனக்கு அளித்தவர் என் நண்பர்
கணிப்பொறியியலாளர் திரு. சரவணன் . இதுபற்றிய ஆய்வைத் தொடர்ந்துவருகிறோம்.
கணினிக்கேற்ற மொழி தமிழ்மொழி என்பதை எடுத்துக்காட்டி நிற்கும் வினைத்திரிபு
வகைப்பாடு.
2-ஆவது, 3-ஆவது
வகைகள் 'ச்சி' எடுக்கும்
(ஆள் - ஆட்சி; முயல்
- முயற்சி)
4- ஆவது
வினை பொதுவாக 'வு' எடுக்கும்
( அறி - அறிவு; அசை
- அசைவு; ஆய்
- ஆய்வு ) ; சில
வினைகள் -ச்சி -யும் எடுக்கும். 'மகிழ்ச்சி' 'மகிழ்வு' ; தேர்
- தேர்வு, தேர்ச்சி.
5-ஆவது
வகை 'அம்' எடுக்கும்.
( ஆக்கு - ஆக்கம்; நீக்கு
- நீக்கம்)
9-ஆவது
வினைவகை 'ப்பு' எடுக்கும்
(கேள் - கேள்ப்பு - கேட்பு )
10 -ஆவது
வினை வகை 'ப்பு' எடுக்கும்
(கல் - கல்ப்பு - கற்பு )
11 - ஆவது
வகை 'ப்பு' எடுக்கும்
(படி - படிப்பு; நடி
- நடிப்பு; ) 'பார்' என்பது
'பார்வை' என்று
'வை' எடுத்தாலும், 'எதிர்பார்' என்பதில்
'எதிர்பார்ப்பு' என்று
வருகிறது.
12- ஆவது
வகை 'ப்பு' எடுக்கும்.
(திற - திறப்பு ; சிவ
- சிவப்பு). ஆனால் ' திற
என்பது 'திறவுகோல்' என்பதில்
'வு' எடுக்கிறது.
'துற
- துறவு ' என்பதிலும்
'வு' வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக