மூன்று மெய்களின் மயக்கமும் திரிதல் புணர்ச்சி விதியும் . . . -------------------------------------------------------------------------------------------------------------------- 'ஆள்' என்ற வினை 'ஆண்டேன்' என்று மாறுகிறது. ஆனால் 'கேள்' என்பது கேட்டேன் என்றுதான் மாறுகிறது. இரண்டிலும் நிலைமொழி இறுதியில் 'ள்' நிற்கிறது; முன்னால் நெடில் வருகிறது. ஆனால் வருமொழியில் இறந்தகால விகுதியாக ஒன்றில் -த்- நிற்கிறது ; மற்றொன்றில் -த்த்- நிற்கிறது. 'ஆள் + த் ' -> ஆண்-ட் ; கேள் + த்த் -> கேட் - ட் ;முதல் எடுத்துக்காட்டில்( ஆள் + த்) வருமொழி 'த்' என்பது 'ட்' ஆக மாறுகின்றது; இரண்டாவது எடுத்துக்காட்டிலும் அப்படியே இரண்டாவது 'த்' (-த்த்-) 'ட்' என்று மாறுகின்றன. வேறுபாடு இதில் இல்லை.ஆனால் இரண்டாவதில் உள்ள முதல் 'த்' -உம் நிலைமொழி இறுதியில் உள்ள 'ள்' -உம் இணைந்து 'ட்' என்று மாறுகிறது. இவ்வாறு மூன்று...
வியாழன், 7 செப்டம்பர், 2023
'சனாதனம்'' பற்றித் தெளிவான விடை காணவேண்டும்!
''சனாதனம்'' பற்றித் தெளிவான விடை காணவேண்டும்!-----------------------------------------------------------------------------------------------------------------------------தற்போது நாடளவில் ''சனாதனம்'' பற்றிய கருத்துமோதல் தீவிரமடைந்துவருகிறது. இந்த நேரத்தில் இதற்கான சில விளக்கங்களை நாம் தேடவேண்டியுள்ளது.இரண்டுவகை பிரச்சினைகள் . . மக்களுக்கு! ஒன்று பொருளாதாரப் பிரச்சினை, இரண்டு , தத்துவம், உரிமை, கோட்பாடு தொடர்பான பிரச்சினை. பொருளாதாரப் பிரச்சினைகளிலும் இன்றைய சமூக அமைப்புக்குள்ளேயே தீர்க்கப்படக்கூடிய பிரச்சினை; மற்றொன்று, சமூக அமைப்பை அடிப்படையிலேயே மாற்றினால்தான் தீரும் பிரச்சினை.மக்கள் மேற்கூறிய இரண்டு பிரச்சினைகளுக்காவும் போராடவேண்டும்; குரல் எழுப்பவேண்டும். ''சனாதனப்'' பிரச்சினை மேற்கூறியவற்றில் எதில் அடங்கும் என்பதைப் பார்க்கவேண்டும்.'சனாதனம்' என்பதற்கு 'விளக்கங்கள்' ஒவ்வொருவரும்...
சனி, 2 செப்டம்பர், 2023
தமிழ் இலக்கணத்தின் கணிதப் பண்பு
1)
--------------------------------------------------------------------------------------------------------------------------
வினைகளின் வினைத்திரிபு வகைப்பாட்டுக்கும் (தமிழ்
லெக்சிகன் - சென்னைப் பல்கலைக்கழகம் வெளியீடு) அவற்றிலிருந்து பிறக்கும் பெயர்களுக்கும்
இடையில் தொடர்பு இருக்கிறது. இது ஒரு வியப்பான தமிழ் இலக்கண இயல்பு.
இதுபற்றிய தெளிவை எனக்கு அளித்தவர் என் நண்பர்
கணிப்பொறியியலாளர் திரு. சரவணன் . இதுபற்றிய ஆய்வைத் தொடர்ந்துவருகிறோம்.
கணினிக்கேற்ற மொழி தமிழ்மொழி என்பதை எடுத்துக்காட்டி நிற்கும் வினைத்திரிபு
வகைப்பாடு.
2-ஆவது, 3-ஆவது
வகைகள் 'ச்சி' எடுக்கும்
(ஆள் - ஆட்சி; முயல்
- முயற்சி)
4- ஆவது
வினை பொதுவாக 'வு' எடுக்கும்
( அறி - அறிவு; அசை
- அசைவு; ஆய்
- ஆய்வு ) ; சில
வினைகள் -ச்சி -யும் எடுக்கும். 'மகிழ்ச்சி' 'மகிழ்வு' ; தேர்
- தேர்வு, தேர்ச்சி.
5-ஆவது
வகை 'அம்' எடுக்கும்.
(...
"சமையல்'' - பெயரா ? தொழிற்பெயரா?
1)
"சமையல்'' - பெயரா
? தொழிற்பெயரா?
--------------------------------------------------------------------------
எழுத்தாளர் பேராசிரியர் பெருமாள்முருகன் அவர்கள் தனது
கட்டுரை ஒன்றில் ''சமையலர்'' என்ற
சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். அதையொட்டி 'சமையல்' என்பது தொழிற்பெயரா அல்லது முழுப்பெயரா என்ற ஒரு ஐயம்
ஏற்பட்டது. அதுபற்றி மருத்துவர் ஐயா அவர்களும் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
எனது கருத்து பின்வருமாறு;
''சமையல்'' என்ற
சொல்லின் மூலம் தொழிற்- பெயர்தான். இதில் ஐயமே இல்லை. ஆனால் தற்போது அது
முழுப்பெயராக மாறிவிட்டது எனக் கருதலாம். அதனால்தான் ''நல்ல
சமையலை'' என்று
சொல்லுக்குமுன்னால் பெயரடையும் பின்னால் வேற்றுமை விகுதியையும் சேர்க்க முடிகிறது
எனக் கருதுகிறேன்.
தொழிற்பெயராக அது இன்றும் நீடித்திருந்தால் அதற்குமுன்
பெயரடை வரமுடியாது, மாறாக, வினையடைதான்
வரமுடியும்...