Intelligence and Knowledge
act / data = புறவயமாக இருக்கும் ஒன்று; truth = புறவயமாக இருக்கின்றவற்றின் உள்ளார்ந்த பண்பைப் புரிந்துகொள்ளுதல்; from fact to truth; மரத்தில் உள்ள பழம் கீழே விழுகிறது என்பது fact; அதற்கு அடிப்படைக் காரணம் புவியீர்ப்பு விசை என்பது truth: இந்தப் புறவய நிகழ்ச்சிகளிலிருந்து அவற்றின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள உதவுவது மனித மூளையின் நுட்பத்திறன். இந்த நுட்பத்திறனே Intelligence; எனவே, புறவயமாக நீடிக்கிற பொருள் அல்லது நிகழ்விலிருந்து (Empirical / facts/ knowledge) அதனுடைய பண்பைத் தெரிந்துகொள்வது அறிவியல் அறிவு (Scientific knowledge / truth) . இந்த அறிவு மாற்றத்திற்கு அல்லது வளர்ச்சிக்கு உதவுவது Intelligence. இதை 'அறிவு உருவாக்க நுட்பத் திறன்' என்று விளக்கலாம்.
மனிதமொழி அறிவுபற்றிய ஸ்கின்னர் (Skinner) கோட்பாட்டின்படி, குழந்தையானது stimulus - response என்ற அடிப்படையில் மொழியைக் கற்றுக்கொள்கிறது. இந்த responses அனைத்தின் திரட்டே மொழி - மொழியறிவு (knowledge of language). ஆனால் இந்தக் கோட்பாடு தவறு என்று தற்போதைய மொழியியல் கூறுகிறது. குறிப்பாக, நோம் சாம்ஸ்கி ஸ்கின்னரை மறுக்கிறார். நானும் சாம்ஸ்கியின் கருத்தே சரி என்று கருதுகிறேன்.
நோம் சாம்ஸ்கியின் கருத்துப்படி . . . குழந்தையானது தனது மூளைக்குள் உள்ள ஒரு ''திறமையைப்'' பயன்படுத்தி, தனக்குத் தேவையான ('கிடைக்கிற ஒன்று' என்று இல்லாமல்) மொழித்தரவுகளைப் பெற்று, அதன் உதவியுடன் தனது மொழியைப் பெற்றுக்கொள்கிறது. கிடைக்கின்ற தரவுகளை வைத்துக்கொண்டுதான் அது மொழியைக் கற்றுக்கொள்கிறது என்பது இல்லை. ஏனென்றால் அதற்கு மூன்று வயதுக்குள் ஒரு மொழியின் அனைத்துத் தரவுகளும் கிடைக்கும் என்று கூறமுடியாது (Poverty of Stimulus). குறைந்த காலம் - குறைந்த தரவுகள் - ஆனால் பெற்றுக்கொள்வதோ ஒரு மொழியின் நிறைந்த அறிவு. இதற்கு உதவுகிற மனிதமூளையின் நுட்பத் திறனே Intelligence.
ஆனால் இன்று கணினியானது கோடியே கோடி தரவுகளைப் பெற்றுக்கொள்கிறது. அந்தத் தரவுகளின் அடிப்படையில் அது மொழிச் செயல்பாட்டை மேற்கொள்கிறது. அதற்குச் சரியான தரவுகளோ அல்லது தேவையான அளவுக்குத் தரவுகளோ கிடைக்கவில்லையென்றால், மொழிச் செயல்பாட்டை மேற்கொள்ளமுடியாது. எனவேதான் தமிழ்போன்ற மொழிகளுக்கு இன்று ChatGPT அல்லது Bard மென்பொருள்களால் சரியான முடிவுகளைத் தர இயலவில்லை. தரவுகளின் விரிவாக்கத்தைப் பொறுத்துதான் அதனுடைய மொழியறிவு அமைகிறது. எனவே மொழியைப் பொறுத்தமட்டில் மனிதமூளையானது தனது உள்ளார்ந்த ஒரு நுட்பத்திறனைப் பயன்படுத்துகிறது. ஆனால் கணினியானது ஸ்கின்னர் கூறியதுபோல, stimulus - response அடிப்படையில்தான் மொழியைக் கற்றுக்கொள்கிறது( 'குழந்தை மூளைபோன்று 'பெற்றுக்கொள்ளவில்லை').
எனவே கணினியானது தனக்குக் கிடைக்கிற மொழித் தரவுகளைக் கொண்டு - அந்தத் தரவுகளை ஒழுங்குபடுத்தி - அதனடிப்படையில் செயல்படுகிறது. மொழிச் செயலைச் செய்ய அதனால் முடிகிறது. எனவே இதைச் ''செய்யறிவு'' (அல்லது ''பட்டறிவு''- empirical knowledge ?) என்று நண்பர் சுந்தர் இலட்சுமணன் கூறியது சரியென்றே எனக்குத் தோன்றுகிறது. ( அவர் எந்த அடிப்படையில் கூறினார் என்பது எனக்குத் தெரியாது.) எனவே கணினியின் இந்த மொழிக்கற்றல் திறமையை intelligence என்று கூறுவதைவிட knowledge என்று கூறலாம் எனக் கருதுகிறேன். Stimulus - Response திறன் / (அல்லது) தரவுகளின் தொகுப்பு - அதனடிப்படையில் செயல்பாடு என்பது knowledge : எனவே, கணினிக்கு இன்று அளிக்கப்பட்டுள்ள அறிவானது, தரவுத்தொகுப்பின் அடிப்படையிலான அறிவா அல்லது மனிதமூளைக்குரிய ஆய்திறன் அல்லது உணர்திறன் அடிப்படையில் அமைகிற அறிவா? இதுவே எனக்குள்ள ஐயம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக