திங்கள், 15 ஜூலை, 2024

குறிப்புவினைபற்றி மேலும் ஒரு ஐயம் . . .

 குறிப்புவினைபற்றி மேலும் ஒரு ஐயம் . . . ----------------------------------------------------------------------உண்மை --> உண் + மை --> உள் + மைமென்மை --> மென் + மை --> மெல் + மைசிறுமை --> சிறு + மை பெருமை --> பெரு + மைவெண்மை --> வெண் + மை --> வெள் + மைபன்மை --> பன் + மை --> பல் + மைஇளமை --> இள + மை நன்மை --> நன் + மை --> நல் + மைமேற்கூறியவற்றில் உள்ள அடிச்சொல்கள் எல்லாம் குறிப்பு வினைகள் என்று கூறலாமா?'மை' விகுதி குறிப்பு வினையடியுடன் மட்டுமல்லாமல் தெரிநிலை வினைகளுடனும் இணைந்து பெயர்கள் ஆகின்றன.பொறுமை --> பொறு + மை ஆண்மை --> ஆண் + மை --> ஆள் + மைபொய்மை --> பொய் + மை'மை' விகுதி பெயர்ச்சொல்களோடும் இணைகிறது.தலைமை --> தலை + மை குடிமை --> குடி + மை.இறைமை --> இறை + மைதாய்மை --> தாய் + மைவாய்மை --> வாய்...

கருத்தாடல் வெற்றிபெற . . . தேவைப்படும் நான்கு கூறுகள்

 கருத்தாடல் வெற்றிபெற . . . தேவைப்படும் நான்கு கூறுகள்-------------------------------------------------------------------------------------------------பேச்சுவழியோ எழுத்துவழியோ நாம் உரையாடல்களை நிகழ்த்துவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று . . . ஒருவர் ஒன்றைப்பற்றிய தமது கருத்துக்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவது ஆகும். இந்த வெளிப்படுத்தலில் இரண்டு கூறுகள் உண்டு. ஒன்று மற்றவர்களுக்குச் சில செய்திகளை அளிப்பது . . . மற்றொன்று ஒன்றைப்பற்றிய தெளிவைப் பெறுவதற்காக ஒன்றுக்குமேற்பட்டவர்கள் கருத்தாடல்களை மேற்கொள்வது ஆகும். கருத்தாடலில் கருத்துத்தெளிவு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கருத்துத் தெளிவு இல்லாமல் ஒருவர் கருத்தாடலில் ஈடுபட்டால் அவரால் தம் கருத்து சரியாக இருந்தாலும் தமது நோக்கத்தில் வெற்றிபெறமுடியாது. மேலும் குறிப்பிட்ட கருத்தாடல் தனது முடிவுக்கு வரும்வரை நீடிக்கவேண்டும் என்பதைக்...

(1) 'உண்டு' (2) 'உண்டு' - சொல் பிரிப்பில் மயக்கம்.

 (1) 'உண்டு' (2) 'உண்டு' - சொல் பிரிப்பில் மயக்கம்.------------------------------------------------------------------1) உணவுவிடுதியில் பொங்கல் உண்டு, வீட்டுக்குத் திரும்பினேன். 2) ஞாயிறுதோறும் உணவுவிடுதியில் காலையில் பொங்கல் உண்டு. முதல் எடுத்துக்காட்டில் ' உண்டு' என்பதின் அடிச்சொல் அல்லது வேர்ச்சொல் 'உண்' ஆகும். இது 'உண் + ந்து' என்ற புதைவடிவத்தின் புறவடிவம். (எடுத்துக்காட்டு : உண் + ந்த் + ஆன் -> உண்டான்) இரண்டாவது எடுத்துக்காட்டில் 'உண்டு' என்பது ' உள் + ந்து ' என்பதின் புறவடிவம். (எடுத்துக்காட்டு : ஆள் + ந்த் + ஆன் -> ஆண்டான்) 'ண்' 'ள்' இரண்டுக்குமே இனமான வல்லினம் 'ட்' ஆகும். தமிழ்ச்சொல்களைப் பிரிக்கும்போது நீடிக்கிற ஒழுங்கை விளக்குவதற்காக இந்தச் சொல்களை முன்வைக்கிறேன். அதாவது 'உண்டு' என்ற சொல்லுக்கு இரண்டு புதைவடிவங்கள் உள்ளன. எனவே சொல்களைப் பிரிக்கும்போது அவற்றின் பொருண்மையை...

செய்யறிவுத் திறன் (Artificial Intelligence- AI) - பெரிய மொழி மாதிரி (Large Language Model - LM) - மொழியியலும் இலக்கணமும் (Linguistics and Grammar) . . .

 செய்யறிவுத் திறன் (Artificial Intelligence- AI) - பெரிய மொழி மாதிரி (Large Language Model - LM) - மொழியியலும் இலக்கணமும் (Linguistics and Grammar) . . . -------------------------------------------------------------------------------------------------------செய்யறிவுத் திறனைத் தமிழ்வழியே பயன்படுத்துவதற்கு முதல் அடிப்படைத் தேவை . . . 1) தமிழ்வழியே நாம் அனுப்புகிற தொடர்களைப் பெரிய மொழி மாதிரி புரிந்துகொள்ளவேண்டும் (Natural Language Understanding - NLU) . அவ்வாறு புரிந்துகொண்டால்தான் செய்யறிவுத்திறன் கொண்ட அறிவுச் சேமிப்புக் கொள்கலத்தில் (Knowledge Store) நாம் அனுப்பிய ஐயம், வினாவுக்குத் தகவல்களைப் பெறமுடியும். 2) அடுத்து, அந்தச் சேமிப்புக் கலத்திலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களைத் தமிழ்வழியே நமக்குத் தரவேண்டும் (Natural Language Generation - NLG). மேற்கூறிய இரண்டு திறன்களையும் உள்ளடக்கிய...

தமிழ்மொழிப் பயன்படுத்தத்தின் விரிவாக்கமும் செய்யறிவுத்திறன் மென்பொருள்களில் தமிழுக்கான இடமும் . . .

 தமிழ்மொழிப் பயன்படுத்தத்தின் விரிவாக்கமும் செய்யறிவுத்திறன் மென்பொருள்களில் தமிழுக்கான இடமும் . . . -------------------------------------------------------------------------------------------------------------------------தமிழ்நாட்டில் தமிழ் மக்களிடையே தமிழின் பயன்படுத்தம் விரிவடைந்தால்தான் . . . செய்யறிவுத்திறன் (Artificial Intelligence- AI)மென்பொருளுக்கு அடிப்படையான (மிகப்பெரிய) மொழி மாதிரிகள் (Large Language models) - LLM) தமிழுக்கும் செயல்படும் என்பதே உண்மை. மொழியின் பயன்படுத்தம் விரிவடையும்போதுதான் (பேச்சு, எழுத்து இரண்டிலும்) தமிழுக்குத் தேவையான தரவுகள் கிடைக்கும். ஆனால் . . . நடைமுறையில் தமிழர்களே தமிழைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து . . . ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார்கள். அரசுக் கோப்புக்கள் ஆகட்டும் . . . தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் ஆகட்டும் . . . பள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி,...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India