''பெண்ணுரிமை'' குரல் இன்று ஓங்கி ஒலிப்பதற்குக் காரணம் . . . சமுதாயப் பொருளாதாரக் கட்டமைப்பின் வளர்ச்சி அடிப்படையா? தனிநபர்களின் அல்லது இயக்கங்களின் ''பேச்சுக்கள்'' அடிப்படையா? மற்றொரு பதிவில் நான் இட்ட சில கருத்துக்கள்!--------------------------------------------------------------------------நண்பர் திரு. வேல்முருகன் சுப்பிரமணியன் அவர்கள்:------------------------------------------------------------------------//கணித்துறையில் ஒரு மென்பொருளின் பயனாளர்களின் (based on required Scale and performance) எண்ணிக்கையைப்பொறுத்து அந்த மென்பொருளின் அமைப்பு மிகப்பெரிய அளவில் மாற்றியமைக்கப்படவேண்டும். அடிப்படையில் எண்ணிக்கையைப்பொறுத்து தீர்வின் அடிப்படை மாறும். - அந்தவழியில் அமைந்ததே என் ஐயம்!இதுபோன்ற மாற்றம் ஒரு சமுதாயத்தினுள்ளும் நடக்கிறதா? காட்டாக,1) போரினால் ஏற்கனவே ஒடுக்கப்பட்ட “மிகச்சிறிய...
சனி, 13 ஜனவரி, 2024
தமிழ்நாட்டு மக்களின் ''கல்விக்கண்களைத் '' திறந்தது யார்?
தமிழ்நாட்டு மக்களின் ''கல்விக்கண்களைத் ''
திறந்தது யார்? முகநூலின் இன்னொரு பதிவில் நான் பதிவிட்ட ஒரு கருத்து!
----------------------------------------------------------------------------------------------------------------------------
கல்வி என்ற கற்றல் குறிப்பிட்ட சமுதாய அமைப்பைச் சார்ந்தது. தனிநபர்களின்
விருப்புவெறுப்புக்களைப் பொறுத்தது இல்லை. முதலாளித்துவ சமுதாய அமைப்பில் . . .
நிறம், மதம், மொழி தாண்டி . . . உழைப்புச்சக்தியை விலைகொடுத்து வாங்குவதே முதலாளித்துவ
வர்க்கத்தின் நோக்கம். இந்த நோக்கமும் போக்கும் முதலாளித்துவ சமுதாயத்திற்கு
முந்தைய சமுதாய அமைப்பில் நிலவவில்லை. அதற்குக் காரணம் அவற்றின் அடிப்படைச்
சுரண்டல் தன்மை . . . மனிதனையும் அவனு உழைப்பையும் மொத்தமாக விலைக்கு வாங்குவது
(அடிமைச் சமுதாயம்). அல்லது உழைப்பாளியின் ''உழைப்பை'' விலைக்கு வாங்குவது
(நிலவுடைமைச்சமுதாயம்) என்பதாகும்....
வியாழன், 11 ஜனவரி, 2024
எழுத்துத்தமிழ் இலக்கணமும் கணினித்தமிழ் இலக்கணமும் வேறுபட்டதா?
எழுத்துத்தமிழ் இலக்கணமும் கணினித்தமிழ் இலக்கணமும் வேறுபட்டதா?---------------------------------------------------------------------- -------------------------------------------------- பேராசிரியர் நண்பர் நெடுஞ்செழியன் வேலாயுதம் அவர்கள்://என்னுடைய கேள்வி என்னவென்றால் கணினிக்காக உருவாக்கப்படும் இந்தத் தோன்றல் விதி, மொழியில் இல்லாத ஒன்றுதானே. எனவே கணினிக்காக உருவாக்கும் இந்தத் தோன்றல் விதியை, மொழி வழக்கைக் காத்தல் பொருட்டு, தோன்றிக் கெடுதல் என கணினிக்கு வழங்கலாமே .//நான் புரிந்துகொண்டது சரிதான் என்றால், பேராசிரியர் அவர்களின் கருத்து . . . 1) பேச்சுத்தமிழ்தான் எழுத்துத் தமிழுக்கு அடிப்படை; எனவே சில புணர்ச்சி விதிகள் பேச்சுவழக்கில் இல்லையென்றால் அதை ஏன் எழுத்துத்தமிழில் தக்கவைக்கவேண்டும்?2) கணினிக்கு வேண்டுமென்றால் பொருள் மயக்கம் தோன்றாமல் இருப்பதற்குத் ''தேவையற்ற'' புணர்ச்சி விதிகளை அளிக்கலாம்....
புல்தரை? புற்றரை? புல்த்தரை?
புல்தரை? புற்றரை? புல்த்தரை? - தமிழ் இலக்கணம், மொழியியல் ஆய்வாளர்கள் கவனத்திற்கு ! ( படிப்பதற்குச் சற்றுச் சோர்வாகத்தான் இருக்கும். எனவேதான் ஆய்வாளர்களுக்கு என்று கூறியுள்ளேன்.) --------------------------------------------------------------------------கணிதத்தில் ஒன்றிலிருந்து அதில் உள்ள மற்றொன்றை வருவிக்க அல்லது வெளிப்படுத்த derivation -ஐப் பயன்படுத்தும்போது, ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்லத் தெளிவான கணித விதிகள் இருக்கும். அதுபோன்றதுதான் மொழியிலக்கணமும். தமிழிலக்கணம் இவ்வாறுதான் அமைந்துள்ளது. புல் + தரை --> புல்+ த் + தரை --> புற்தரை --> புற்றரை . புணர்ச்சி விதிகளின்படி இவ்வாறு வரும். ஆனால் தற்காலத்தமிழில் ''புல்தரை'' என்றே எழுதப்படுகிறது. ஆனால் . . . (1) 'புல்' என்ற பெயர்ச்சொல்லும் 'தரை' என்ற பெயர்ச்சொல்லும் இணைந்து தொகையாக மாறும்போது, இடையில் ஒற்று வரவேண்டும்....
புதன், 10 ஜனவரி, 2024
நாள்களா? நாட்களா?
நாள் + கள்
(பன்மைவிகுதி) என்பது நாள்கள் என்று அமையுமா அல்லது நாட்கள் என்று அமையுமா? - ஒரு விளக்கம்.----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெயர்த்தொகைகளில்
நடுவில் ஒற்று மிகும். ஏனைய இடங்களில் ஒற்று மிகாது. 'நாள்' 'கள்' இரண்டும் பெயர்ச்சொற்களாக அமைந்து, பெயர்த்தொகை உருவானால், தொகைப் புணர்ச்சி விதியின்படி ஒற்று இடையில் மிகுந்து, , நாள் + க் + கள் = நாள்க்க்ள் என்று அமையும்.
தமிழில்
மெய்ம்மயக்க விதிகளில் முதல் மெய்யாக 'ய்' 'ர், 'ழ்' என்பது மட்டுமே அமையமுடியும். பிற மெய்கள் முதல் மெய்யாக
வரமுடியாது. எ-கா. வாய்க்கால் (வாய்க்க்ஆல்) , பார்த்தான் (பார்த்த்ஆன்) , வாழ்த்து (வாழ்த்த்உ).
எனவே நாள்+க்+கள்
('நாள்க்க்அள்' ) என்பதில் 'ள்க்' என்பது 'ட்' என்று திரியும். எனவே 'நாட்கள்' என்ற...