
தமிழ்ச்சொல்லாக்கத்தில் கணித அடிப்படை விதிகள்( தமிழ்மொழி ஆய்வாளர்களின் கவனத்திற்கு - நேரம் கிடைக்கும்போது படித்துக் கருத்து கூறவும்) -------------------------------------------------------------------------ஒரு பொருள் அல்லது இயக்கத்தை அறிவியல் அடிப்படையில் ஆராயும்போது . . . அறிவியலாளர்கள் அவற்றின் உள்ளார்ந்த விதிகளைப் புறவயமாகக் கண்டறிகிறார்கள். விதிகள் புறவயமான விதிகளாக இருந்தால்தான் - அதாவது தனிநபர் விருப்பு வெறுப்பை அடிப்படையாகக்கொள்ளாமல் இருந்தால்தான் - அந்த விதிகள் அறிவியல் விதிகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அதாவது கணித அடிப்படையில் அவை இருத்தல்வேண்டும்.இங்குக் குறிப்பாக நினைவில் கொள்ளவேண்டியது . . . விதிகள் உருவாக்கப்படுவதில்லை; மாறாக,...