வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப உலகமெலாம் கணினிவழித் தமிழ் மொழி பரவிடும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்கம் செய்பவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் புதிய விருது .
முதலமைச்சர் கணினித்தமிழ் விருது (2013-14) வழங்கும் விழா 12-10-2015 திங்கள்கிழமை சென்னை தமிழ்நாடு அரசுத் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருது வழங்கினார். தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர், சமூகவளர்ச்சித்துறை அமைச்சர், செயலர், தமிழ்வளர்ச்சித்துறைச் செயலர், தமிழ்நாடு அரசு தலைமைச்செயலர், முதலமைச்சரின் ஆலோசகர், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

'மென்தமிழ் - தமிழ்ச்சொல்லாளர் ' என்ற தமிழ் மென்பொருளை உருவாக்கியதற்காக இந்த விருது அளிக்கப்பட்டது. இந்த மென்பொருள் உருவாக்கத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய திரு. நயினார்பாபு, பேரா. அ. கோபால், திருமதி,ம. பார்கவி, திருமதி மு. அபிராமி, முனைவர் கி. உமாதேவி ஆகியோர் சார்பாக நான் இந்த விருதைப் பெற்றுக்கொண்டேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக