இறை நம்பிக்கை.. மத நம்பிக்கை.. மத நிறுவனம்.. மதவெறி
...(ஏப்ரல் 10,2020)
----------------------------------------------------------------------------------------------------------------------------
இறை நம்பிக்கை வேறு... மத நம்பிக்கை வேறு .. உலகத்தை உருவாக்கியதும் இயக்குவதும் உலகிற்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியே என்ற நம்பிக்கையை உடையவர்கள் இறை நம்பிக்கையாளர்கள். அவ்வாறு உருவாக்கி. இயக்கும் கடவுள் இவர்தான், அவர்தான் என்ற ஒரு நம்பிக்கையில் இருப்பவர்கள் மத நம்பிக்கையாளர்கள். இந்த மதநம்பிக்கையிலும் ஒரு அடுத்த கட்டம், வெறும் நம்பிக்கையாகமட்டும் கொள்ளாமல், குறிப்பிட்ட மதநம்பிக்கையை ஒரு நிறுவனமாக மாற்றுவது ஆகும். இதன் விளைவு... ஒரு மத நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பிற மதநிறுவனங்களின் மீது தாக்குதல் தொடுப்பது ஆகும். இங்குதான் பிரச்சினை. ஆளுகின்ற வர்க்கங்கள், தங்களது ''உள்நோக்கத்திற்காக'' இதுபோன்ற மதநிறுவனங்களின் செயல்களைப் பயன்படுத்திக்கொண்டு, தாங்கள் குளிர் காய்வதும், மக்களைப் பிளவுபடுத்துவதும் சமுதாய வரலாற்றில் பார்க்கலாம். இதன் தொடர்ச்சிதான்... ''மதவெறி'' தோன்றி வளர்வது ஆகும்.

இறை நம்பிக்கையும், மத நம்பிக்கையும் மனித மூளையில் ...
குறிப்பிட்ட சமுதாயச் சூழலில் ... பருண்மைக் காரணங்களால்.... உருவாகுவது ஆகும்.
அந்தப் பருண்மைக் காரணங்கள் மறையும்போது, இதுவும் மறைந்துபோகும். இந்தக்
காலகட்டத்தில், சமுதாய
மாற்றத்தை விரும்பும் சக்திகள், பெரும்பான்மையாக உள்ள இறை
நம்பிக்கையாளர்களையும் மத உணர்வாளர்களையும் எதிரிகளாகப் பார்க்காமல், ஒற்றுமையோடு
சமுதாயமாற்றத்திற்குப் பாடுபடவேண்டும. இந்த ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்காகவே ...
சமுதாய மாற்றத்தைத் தடுப்பதற்காகவே... 'மதவெறியைத்'' தூண்டிவிடுவார்கள்.
இதற்கு நாம் பலியாகிவிடக்கூடாது.
நான் இறை நம்பிக்கை இல்லாதவன். ஆனால் எனக்கு
இறைநம்பிக்கையாளர்களும் மத நம்பிக்கையாளர்களும் எதிரிகள் இல்லை. அவர்களும் இணைந்தால்தான்
இன்றைய நமது சமுதாயம் அடுத்த கட்டத்திற்குச் செல்லும். ஆனால் நிச்சயமாக , மதநிறுவனங்களைப்
பயன்படுத்தி.. 'மதவெறியை'' ஊட்டுபவர்களை
மிகக் கடுமையாக எதிர்க்கிறேன். இவர்கள் சமூகவிரோதிகள் என்றே உறுதியாக நம்புகிறேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக