தடை உத்தரவு: சுமை தூக்கும் தொழிலாளா்கள் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோா் பாதிப்பு (தினமணிச்
செய்தி) (ஏப்ரல்17, 2020)
----------------------------------------------------------------------------------
தமிழ்நாடு முழுவதும் சுமாா் 2 இலட்சம் சுமை தூக்கும் தொழிலாளா்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். பல்வேறு தரப்பட்ட தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், வீடுகளுக்கு பல்வேறு வகையான சரக்குகளை அதாவது சிறிய அட்டை பெட்டி முதல் பெரிய இயந்திரங்கள் வரை பல்வேறு பொருட்களை வாகனங்களில் ஏற்றி, சம்பந்தப்பட்ட இடங்களில் இறக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

இத்தகைய சுமை தூக்கும் தொழிலாளா்களில் 50 சதவீதம்
பேருக்கு சொந்த வீடு கூட இல்லாத நிலை உள்ளது. சாலையோரம், பேருந்து
நிலைய வளாகம், கோயில்
மண்டபங்கள் ஆகிய இடங்களில் வசித்து வருகின்றனா். சொந்த வீடு இல்லாததால்
இவா்களுக்கு குடும்ப அட்டை கூட இல்லாமல் வாழ்ந்து வருகின்றனா். அதனால் அரசின்
நலதிட்டங்கள், நிவாரண
உதவிகளை பெற முடியாத நிலையில் உள்ளனா். கரோனா தடுப்பு தடை உத்தரவு காரணமாக
இவா்களுக்கு தற்போது வேலையில்லை. அதனால் உணவுக்கு மற்றவா்களை எதிா்பாா்த்து
காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்தியாவில் கிராமப்புற விவசாய உற்பத்திமுறை அரைகுறையான
முதலாளித்துவப் பாதிப்பால் ... மாற்றமடைந்துள்ளது. அதனால் வேலையிழந்த
கோடிக்கணக்கான கூலி விவசாயிகள், கைவினைஞர்கள் போன்றவர்களை (தச்சு, கொல்லு, சலவை, குயவு, தோல்
கருவித் தொழிலாளிகள் போன்ற பழைய கிராமப்புற விவசாயத்தைச் சார்ந்த மக்கள்)
உள்வாங்கிக்கொள்ளும் சக்தி இல்லாத நகர்ப்புறத் தொழில் வளர்ச்சி... அவர்களை இவ்வாறு
கூலித்தொழிலாளிகளாக ஆக்கி... ''இன்று வேலை இருந்தால்தான் இன்று
வயிற்றுக்குச் சாப்பாடு'' என்ற நிலையில் ஆக்கிவைத்துள்ளது
மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக