"'உலக
மக்களே, ஒன்றிணையுங்கள்'"
'' உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்'" (ஏப்ரல் 3, 2020)
---------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று கரோனாவை எதிர்த்து , உலகெங்கும் மக்கள் ... ஒன்றிணைந்து போராடவேண்டிய ஒரு சூழல்! நாடு , இனம் தாண்டி... உலக அளவில் மக்கள் ஒன்றிணையவேண்டுமா, அப்படி ஒரு சூழல் வருமா என்ற வினாவிற்கு இன்று விடை ! ஆம் ஒன்றிணைந்துதான் ஆகவேண்டும்!

1857-இல் காரல் மார்க்ஸ் - எங்கல்ஸ்
முன்வைத்த முழக்கம்.... '' உலகத் தொழிலாளர்களே, ஒன்று
சேருங்கள்' ! இன்று இயற்கையின் மோசமான ஒரு விளைவை
--- கரோனா - எதிர்த்து ... போராடி ... வெற்றிபெற 'உலக மக்களே ஒன்றிணையுங்கள்' என்ற
முழக்கம் மூலைமுடுக்கெல்லாம் ஒலிக்கிறது!
இந்தக் கரோனா மனித சமுதாயத்தை
அழித்துவிடமுடியாது. இது ஒரு சவால் என்பதில் ஐயமில்லை. ஆனால் மனித சமுதாயம் இதில்
நிச்சயமாக வெற்றிபெறும்!
இந்தக் கரோனாவால் விரைவில் விளையப்
போகும் மிகப் பயங்கரமான ... உலக அளவிலான பொருளாதார நெருக்கடி... 'உலகத்
தொழிலாளர்களே , ஒன்றிணையுங்கள்' என்ற
முழக்கத்தை .... உலகெங்கும் ஒலிக்கவைக்கும் என்பதில் ஐயமில்லை. நாடு, இனம்
தாண்டி... இந்தக் குரல் ஒலிக்கும் ! ஒலிக்கவேண்டும்!
இப்போது தேவை .... 'நாம்' என்பதுதான்! 'நாங்கள்' இல்லை! (ஏப்ரல் 1, 2020)
-----------------------------------------------------------------------------------
முன்நோக்கிச் செல்கிற சமுதாய இயக்கத்தின்போது .... சமுதாயப்பொருளாதார அடிப்படையில் ....( சாதி, மத அடிப்படையில் இல்லை!) பலவேளைகளில் 'நாங்கள்' 'நீங்கள்' என்ற வேறுபாடு கண்டிப்பாகத் தேவைப்படும். அதுபோன்ற வேளைகளில் ''இந்த வேறுபாடு தேவையில்லை'' என்று யாரும் கூறினால், அவர்கள் மற்ற தரப்பினரை ஏமாற்ற முயல்கிறார்கள் என்றே ஆகும். ஏமாற்றுவேலையாகவே அமையும்.

அதுபோல, சிலவேளைகளில் ... அனைத்து
வேறுபாடுகளையும் கடந்து... ' நாம்' என்பது
மட்டுமே தேவைப்படும். குறிப்பாக, பொது எதிரிக்கு எதிராகப்
போராடும்போது, 'நாம்' என்பதுமட்டுமே
தேவைப்படும். இப்போது, கரோனா வைரஸ் பொது எதிரி.
எனவே 'நாம்' மட்டுமே
இப்போது தேவை! அனைத்துத் தரப்பினரும் இணைந்து போராடவேண்டிய தேவை. எனவே சாதி, மத
வேறுபாடுகளைக் கடந்து ... அனைவரும் இணைந்து போராடவேண்டும். சுவர் இருந்தால்தானே
சித்திரம் வரையமுடியும் ? பெரும்பான்மையாக இருக்கிற
உழைக்கும் மக்கள் உயிருடன் நீடித்தால்தானே இன்றைய சமுதாயம் அடுத்த கட்டத்திற்குச்
செல்லமுடியும்?
கரோனாவைவிட மிக மிக ஆபத்தானது ??? (1 ஏப்ரல், 2020)
-------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------
டெல்லி மாநாட்டில் தமிழகத்திலிருந்து
கலந்துகொண்டவர்கள் எண்ணிக்கை 1131. அடையாளம் காணப்பட்டவர்கள் 515. ஏனைய 616 நபர்களும் உடனடியாகத் தங்கள்
இருப்பிடம்பற்றித் தகவல் அளித்தால், தமிழ்ச்சமுதாயத்திற்கு மிக மிக நல்லது.
மருத்துவர் திரு அன்புமணியின் அன்பான வேண்டுகோள். இது பாராட்டுக்குரிய ஒன்று.
அடையாளம்
காணப்பட்டவர்களில் நேற்று 56 பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளது.
அதில் 50 பேருக்குக் கரோனா தொற்று இருப்பதாக
அறியப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான ஒரு செய்தி!
இதில் நாம் மிகவும்
கவனிக்கவேண்டியது..... கரோனா தொற்று இருந்தாலே, இறப்புதான் என்று
நினைத்துக்கொள்ளக்கூடாது. முறையான சிகிச்சையின்மூலம் பெரும்பாலானோர் நலம்பெற்று
இல்லம் திரும்பியுள்ளனர். 4 விழுக்காடு மட்டுமே இழப்பு! எனவே
கரோனாத் தொற்றை இனம் கண்டறிவதும் , அதற்கான முறையான சிகிச்சை பெறுவதுமே
முக்கியம்.
இதில் மேலும் முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டியது..... இந்தப்
பிரச்சினையை யாரும் மதம்சார்ந்த ஒன்றாகக் கொண்டு, பேசக்கூடாது. அவ்வாறு செய்வது
கரோனாவைவிட மிக மோசமான சமூகவிரோதச் செயலாகும். கரோனாவைவிட மக்களை மிகவும்
பாதிக்கும் ஒரு செயலாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக