ஊரடங்குக்கான விதிவிலக்குகளும்
மக்களும் ...
(கொரோனாவும் பொருளாதார நெருக்கடியும்- 4) (ஏப்ரல் 15, 2020)
------------------------------------------------------------------------------------------------------------------------------------
(கொரோனாவும் பொருளாதார நெருக்கடியும்- 4) (ஏப்ரல் 15, 2020)
------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று
இந்திய நடுவண் அரசு ஊரடங்குக்கு அளித்துள்ள விதிவிலக்குகளில் பெரும்பாலானவை ...
1) விவசாயம், சிறு
விவசாயம், கைத்தொழில்கள், மீன்பிடித்தொழில்
, டீ, காபி, ரப்பர்
உற்பத்தி, கால்நடை வளர்ப்பு போன்ற
உற்பத்திசார்ந்த தொழில்கள்
2) மேற்குறிப்பிட்ட
தொழில்கள்சார்ந்த சரக்குப்போக்குவரத்து (ரயில், லாரி போன்ற போக்குவரத்து)
....உணவுப்பொருள்களுக்கான போக்குவரத்து,வசதிகள்
3) மென்பொருள்
நிறுவனங்கள், ''கால் செண்டர்கள்''
4) மேற்குறிப்பிட்ட
தொழில்சார்ந்தவர்களுக்குத் தேவையான நெடுஞ்சாலை உணவகங்கள், வாகனப்
போக்குவரத்து, தூதஞ்சல் (கூரியர்) , அச்சகங்கள், மின்னணு
ஊடகங்கள்
5) அமைப்புசார
தொழிலாளர்களாகிய தண்ணீர்க்குழாய் பழுதுபார்ப்பவர்கள், மின்சாரம்தொடர்பான
பணிகளில் ஈடுபடுபவர்கள், தச்சு, கொல்லுப் பணிகளில் ஈடுபடுபவர்கள்
மேற்கூறியவற்றில் அளிக்கப்பட்டுள்ள
தடைவிலக்குகள் மக்கள் கைகளில் ஓரளவு பணப்புழக்கத்திற்கு உதவலாம். அரசு மானியங்கள்
... இலவசங்கள் குறையலாம். நுகர்பொருள் விநியோகம் சற்று முன்னேற்றம் அடையலாம்.
கடந்த ஒரு மாதகாலமாக... அடிப்படைப்
பொருளாதாரப் பிரச்சனையால் மூச்சுத் திணறிவருபவர்களுக்கு ... மூச்சியக்கியாக (
வெண்டிலேட்டர்) தற்காலிகமாக உதவலாம்!
ஆனால்... மூச்சியக்கிகளே ஒருவரின்
வாழ்க்கைமுழுவதும் உயிர் நீடிப்பிற்கான அடிப்படையாக இருக்கமுடியாது..
இருக்கக்கூடாது!
தற்போது ''அளிக்கப்படுகிற'' இலவச
அரிசி, பருப்பு, கைச்செலவுக்கான பணம் ஆகியவற்றோடு...
மேற்கூறிய விதிவிலக்குகளும் சாதாரண மக்களுக்கு சற்று மூச்சுவிட உதவும்.
இனிதான் நாட்டின் ஒட்டுமொத்தமான
பொருளாதார பாதிப்பு, தொழில்துறை பாதிப்பு, வேலையில்லாத்
திண்டாட்டம், ஊதியக் குறைப்பு, விலைவாசி
ஏற்றம் ஆகியவற்றைச் சந்திக்கவேண்டியிருக்கும். உலகப் பொருளாதார வீழ்ச்சியும்
இணைந்து மக்களுக்குப் பாதிப்புகளை அதிகரிக்கும்.
மற்றொன்று... மேற்கண்ட
விதிவிலக்குகளில் மாநில அரசுகள் எந்தவித மாற்றங்களையும் செய்யக்கூடாது என்ற ஒரு
நிபந்தனையும் உள்ளது... அதாவது இவற்றில் மாநில அரசுத் தலையீடுகள் இருக்கக்கூடாது!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக