ஊரடங்கு நீடிப்பு ..... வெளிப்படும் அரசியல்
பொருளாதாரம்! (ஏப்ரல் 12, 2020)
-------------------------------------------------------------------------------------------------------
ஊரடங்கு நீடிக்கக்கூடாது என்பதில் சாதாரண மக்களைவிட... தொழில் அதிபர்களே உறுதியாக இருப்பார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------
ஊரடங்கு நீடிக்கக்கூடாது என்பதில் சாதாரண மக்களைவிட... தொழில் அதிபர்களே உறுதியாக இருப்பார்கள்.
கணினிநிறுவனங்கள் தங்களுடைய பணிகளை ... பொறியாளர்கள்
தங்கள் வீடுகளிலிருந்தே செய்வதற்கு அனுமதிக்கமுடியும். அதிலும் பல சிக்கல்கள்
அவர்களுக்கு உண்டு. குறிப்பிட்ட பணிகளை முடித்தால்தான், அந்த நிறுவனங்களின் முதலாளிகள், தாங்கள் சார்ந்துள்ள நுகர்வாளர்
நிறுவனங்களிலிருந்து
பணம் பெறமுடியும். ஆனால் வீடுகளில் பொறியாளர்களுக்குத் தேவையான இணைய இணைப்பு போன்ற
வசதிகள் போதுமானதாக இருக்காது. எனவே அதிக நேரம் பணிசெய்யப் பணியாளர்கள் கட்டாயப்படுத்தபடுகிறார்கள்.
இது ஒருபுறம்.
மற்றொரு புறம்... பெரிய ஆலை, பொருள்
உற்பத்தி நிறுவனங்கள்.... இந்த நிறுவனங்கள் தங்கள் இயந்திரங்களைத் தொழிலாளர்கள்
வீட்டுக்கு அனுப்பிவைத்து, உற்பத்தியைத் தொடரமுடியாது. எனவே
ஒவ்வொரு நாளும் தற்போது அவர்களுக்கு... அவர்கள் நோக்கில்... இழப்புதான்! எனவே
அவர்களே அரசாங்கத்திற்கு நெருக்கடிகொடுத்து, ஊரடங்கை விரைவில் விலக்க
வைத்துவிடுவர்கள். நமக்குக் கவலை வேண்டாம்!!!. முதலில் ''முக்கிய'' தொழில்கள்
இவை இவை என்று முடிவுசெய்து, அவற்றைத் திறக்க வைப்பார்கள். பின்னர், அதற்குத்
தேவையான ''சார்தொழில்
'' நிறுவனங்களையும்
திறக்கவைப்பார்கள். பின்னர் உற்பத்தி செய்த பொருள்களை மக்கள் வாங்கினால்தானே
அவர்களுக்கு லாபம் ... பணமாக ... கிடைக்கும். எனவே வணிக நிறுவனங்களும்
திறக்கப்படும். கவலை வேண்டாம்!
இங்குதான் அரசியல் பொருளாதாரமே வெளிப்படுகிறது!
மேலும் இந்தியப் பொருளாதார உற்பத்தியுடன் அமெரிக்கா உட்பட
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் நலன்கள்
பின்னிப்பிணைந்த்துள்ளன என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். அவர்களுக்கு இந்திய
மக்களின் உழைப்பும்('உழைப்பு சக்தி'') தேவை...
வாங்கும் சக்தியும் .. சந்தையும் தேவை! எனவே தற்போது அவற்றிற்கு ஏற்பட்டுள்ள
பொருளாதார நெருக்கடிகளை இந்திய மக்களின்மீது ஏற்றும் என்பதில் ஐயம் இல்லை!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக