இலக்கணமும்
மொழியியலும் அறிவியல் துறைகளே!-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------திரு.
ஜெயபாண்டியன் கோட்டாளம் அவர்கள்---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------இதையெல்லாம் படிக்கும்போது எனக்கு எழும் ஒரு
உண்மையான அச்சத்தை இங்கு பதிவுசெய்ய கடமைப்படுகிறேன். நான் தமிழறிஞனும் அல்லேன், அறிஞர்களுக்கு எதிர்ப்பான மனப்பாங்கு உடையவனும் அல்லேன்.பொற்கோ அவர்களின் இக்கால இலக்கண நூலில் பல
புதுமையான கருத்துகளை சொல்கிறார். அவற்றுள் சிலவற்றை நான் தவறானவையாக காண்கிறேன்.
இவற்றுள் ஒன்றைப்பற்றி நாம் இருவரும் எதிரெதிரான கருத்துகளுடன் நீண்ட உரையாடலை
முன்பொருமுறை மேற்கொண்டிருக்கிறோம்.புத்திலக்கணம்...
புதன், 30 ஜூன், 2021
இன்றைய தமிழுக்கு ஒரு புதிய இலக்கணம் தேவையா?
இன்றைய தமிழுக்கு ஒரு புதிய
இலக்கணம் தேவையா?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர் திரு. மாலன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தொல்காப்பியத்திற்குச்
சொன்னது நன்னூலுக்கும் பொருந்துமா? இன்று இன்னொரு நூல் தமிழுக்குத் தேவைப்படுகிறதா?
ந. தெய்வ சுந்தரம்---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆமாம் நண்பரே. நன்னூல் காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும்
இடையில் சில நூற்றாண்டுகள் இடைவெளி இருக்கிறதே! உறுதியாக நன்னூல் 100 விழுக்காடு
அப்படியே...
கணினியின் எதிர்கால வளர்ச்சியும் தமிழின் சிறப்பும்...
கணினியின்
எதிர்கால வளர்ச்சியும் தமிழின் சிறப்பும்...
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர் திரு. மாலன் அவர்களும் நண்பர் திரு.
இராச. தியாகராசன் அவர்களும் கூறியுள்ள கணினித்திறன் வளர்ச்சி உறுதியாக
எதிர்காலத்தில் ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை.
கணினியானது நாம் செய்யும் தவறுகளைத் தவறுகள்
என்று தெரிந்துகொள்ளவும் அவற்றிற்கு மாற்றாகச் சரியான தொடர்களை அளிக்கவும் முதலில்
நாம் கணினிக்குச் சரியான தரவுகளை (அகரமுதலி, இலக்கணம் ) அளிப்பது தேவையான
ஒன்றாகும். அதற்குத் தமிழின் முறையான இலக்கணமும் அகரமுதலியும் தேவை.
அவற்றைக்கொண்டுதான் நாம் கணினியைப் பயிற்றுவிக்க இயலும்.
கடந்த பல ஆண்டு ஆய்வுகளைத் தொடர்ந்து, எங்கள் குழுவினர் தானியங்கு பரிந்துரை (auto-suggestion) கருவி ஒன்றை உருவாக்கியுள்ளோம்....
இன்றைய தமிழின் இலக்கணக் கட்டமைப்பை நாம் முறையாக உணர்ந்துகொள்வதும் பின்பற்ற வேண்டியதும் கட்டாயமா?
இன்றைய
தமிழின் இலக்கணக் கட்டமைப்பை நாம் முறையாக உணர்ந்துகொள்வதும் பின்பற்ற வேண்டியதும்
கட்டாயமா?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எழுத்துத் தமிழை அதற்கே உரிய இலக்கணக்
கட்டமைப்பின் அடிப்படையில்தான் எழுதவேண்டுமா? புணர்ச்சி விதிகளைப்
பின்பற்றவேண்டுமா? அவ்வாறு பின்பற்றாவிட்டால் என்ன
குறைந்துவிடும்? மக்களுக்குப் புரியாமலா போய்விடும்? தினத்தந்திபோன்ற நாளிதழ்களில் புணர்ச்சி விதிகளைப் பின்பற்றாமல் செய்திகள்
வெளிவருகின்றனவே! அவற்றை மக்களால் புரிந்துகொள்ளமுடியவில்லையா? இவைபோன்ற பல வினாக்களை நண்பர்கள் சிலர் முன்வைப்பதைப் பார்க்கிறோம்.
இதற்கு என்ன விடை அளிப்பது?
மனிதமூளைக்கு உள்ள மொழித்திறன்
வியக்கத்தக்கது. ஒரு குறிப்பிட்ட தொடரைக் கேட்கும்போதோ அல்லது வாசிக்கும்போதோ ...
அத்தொடருக்கு...
தமிழைத் தமிழாக எழுதுங்கள்! ஆங்கிலத்தை ஆங்கிலமாக எழுதுங்கள்!
சந்தி , இலக்கண
விதிகள் ஒருபுறம் இருக்கட்டும். எனது வினா ... தமிழகத்திலுள்ள மிகப் பெரிய கல்வி
நிறுவனங்கள் .... தமிழோ அல்லது ஆங்கிலமோ... எதுவாக இருந்தாலும்.... அந்த மொழியில்
எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை
இல்லாமல் எழுதமுடியாதா? அதுவும்
பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிற விளம்பரப் பலகைகள், அறிவிப்புகள்
போன்றவற்றில் தவறு இல்லாமல் மொழியைப் பயன்படுத்தமுடியாதா? அதற்கான
கருத்துரைகளை வழங்கும் ஆசிரியர்கள் இருக்கமாட்டார்களா? ஆங்கிலமொழியைத்
தவறு இல்லாமல் கையாளவேண்டுமென்று நினைக்கிற நிறுவனத்தார்கள்... தமிழ்மொழியைக்
கையாளுவதில்மட்டும்.. ஏன் இவ்வாறு பொறுப்பு இல்லாமல் செயல்படுகிறார்கள்? தமிழ் என்றால்
ஒரு இளக்காரம் இவர்களுக்கு என்பதுதான் எனது கருத்து. இந்த அலட்சியப்போக்கு
கைவிடப்படவேண்டும் என்பதே எனது வேண்டுகோள். ஆங்கிலத்தை ஆங்கிலமாக எழுதுங்கள்.
அதுபோலத் தமிழைத் தமிழாக எழுதுங்கள்...
தமிழ் என்றால் எந்தத் தவறும் செய்யலாம் தமிழ்நாட்டில்!
தமிழ்
என்றால் எந்தத் தவறும் செய்யலாம் தமிழ்நாட்டில்!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விளம்பரப் பலகைகளில் ஆங்கிலம் என்றால், ஒரு தவறும் இல்லாமல் எழுதுகிறார்கள் ... குறிப்பாகப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில்! ஏதாவது
தவறு என்று என்றால் 'ஐயையோ' என்று 'பதறி' உடனே திருத்திவிடுகிறார்கள்! இல்லையென்றால் ''நம்மைப் படிக்காதவர்கள்'' என்று மற்றவர்கள்
சொல்லிவிடுவார்கள் என்ற ஒரு அச்சம்!
ஆனால்.... தமிழ் என்றால்! தவறுகள் செய்யலாம்!
யாராவது கேட்டால் ... ''எனக்குத் தமிழ் சரியாக வராது'' என்று 'பெருமையுடன்' சொல்லிக்கொள்ளலாம்!
இதுதான் தமிழகத்தின் இன்றைய நிலை!
சென்னை அடையாறில் உள்ள IIT ( Indian
Institute of Technology) வளாகத்தின் முகப்பில் கொட்டை
எழுத்துக்களில்...