
கணினித்தமிழ் ஆய்வாளர் திருமதி அபிராமி முத்து .... எம்சிஏ., எம்பிஏ., ... திருநெல்வேலியைச் சேர்ந்த இவர், கடந்த ஆறு ஆண்டுகளாக என்னுடன் இணைந்து , தமிழ்க்கணினிமொழியியல் ஆய்விலும், தமிழ் மென்பொருள் உருவாக்கத்திலும் ஈடுபட்டுவரும் ஒரு மென்பொருள் பொறியாளர். நாகர்கோவில் மகளிர் கிறித்தவக் கல்லூரியில் கணினியியல் இளங்கலை படிப்பும் பச்சையப்பன் கல்லூரியில் எம்சிஏ படிப்பும் பாரதிதாசன் நிர்வாகவியல் கல்விநிறுவனத்தில் ( BIM ) எம்பிஏ படிப்பும் மேற்கொண்டவர். எம்சிஏ படிப்பிற்கான இறுதி ஆய்வேட்டிற்குத் துணிந்து, எனது வழிகாட்டுதலில் தமிழ்க் கணினிமொழியியல் தலைப்பைத் தேர்ந்தெடுத்து, வகுப்பிலே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். அதன்பின்னர், எனது என் டி எஸ் லிங்க்சாப்ட்...